ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் 2023 - கன்னி

ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் 2023 - கன்னி

தன் நிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படும் கன்னி ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும், லாபஸ்தானத்தை குருவுடன் சனி பார்வை பெறுவதும் உங்களின் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். இதுவரை பார்த்து வரும் தொழிலை வளப்படுத்திக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல வரவேற்பும். தனி திறமையும் உண்டாகும். 
 
எதையும் காரணமின்றி செயல் படமாட்டீர்கள். எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். ஏப்ரல் மாத குரு பெயர்ச்சிக்கு பின்பு தனஸ்தானம் பலம் பெறுவதால் உங்களின் தேவைகள் நிறைவடையும். கடன் வாங்கிய இடத்தில் கடனை அடைத்து வளம் பெறுவீர்கள்.
 
கடன் கொடுத்த இடத்தில் பணம் வசூலாகும். மேலும் உங்களின் கற்பனை திறன் வலுப்பெற்று அரசியல், கலைதுறையில் தனி முத்திரையை பதிப்பீர்கள். வரும் மார்ச் மாத இறுதியில் சனி பெயர்ச்சிக்கு பின்பு உங்களின் குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். மறைமுக எதிரிகளின் பலம் குறைந்து மேன்மை அடைவீர்கள். பல நாட்கள் உடல்நல குறைபாடுகளின்றி இருந்த உங்களின் நிலை மாறி மாற்று மருத்துவத்தில் உங்களுக்கு குண மாகும். 
 
சூரியன் மறைவு ஸ்தானத்தில் அமரும் போது உங்களுக்கு யோக பலனைத் தருவார். அரசாங்க உத்தியோகத்தில் சிலர் பதவி உயர்வு பெறுவீர்கள். சிலருக்கு சம்பள உயர்வுகள் உண்டாகும். பெண்களுக்கு புதிய தொழில் வாய்ப்பும், நல்ல வேலையும் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். அறிவியல் ஆராய்ச்சியில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களின் கல்வி தரம் வளம் பெற்று நன்மை அடைவீர்கள். விவசாயத்தில் நல்ல விளைச்சலும், அதற்குரிய வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள்
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
பச்சை, மஞ்சள், நீலம்.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
5, 6, 8.
 
அதிர்ஷ்ட மாதங்கள்:
 
ஏப்ரல், மே, ஜுன், ஜுலை.
 
நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரின் வழிபாடும், ஞாயிற்றுகிழமை ராகு காலத்தில் வைரவர் வழிபாடும் தொடர்ந்து செய்து வர உங்களின் கற்பனைத் திறன் அதிகரிக்கும். சுபிட்சமான வாழ்வு அமையும்.