ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் 2023 - மிதுனம்
உலக நடப்புகளை அறிந்து வைத்திருக்கும் மிதுன ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு குரு தொழில் ஸ்தானத்திலும், லாபாதிபதி விரையத்தில் வக்கிரகதியில் அமைந்திருப்பதால் தொழிலில் நல்ல லாபத்தை அடைவீர்கள். சகிப்புத் தன்மையுடன் செயல்படுவீர்கள். எதையும் முன்கூட்டியே யோசித்து செயல்படுவீர்கள். காரணம் சொல்லாமல் எதையும் சாதித்து காட்டுவீர்கள். வெளிநாடு தொழில் வாய்ப்பு சிலருக்கு அமையும். கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வீர்கள்.
முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு உங்களுக்கு நல்ல பலனை பெற்றுத் தரும். அட்டம சனி ஏப்ரலிலிருந்து விலகுவதால் உங்களின் தடைபட்ட காரியம் வெற்றியை பெற்றுத் தரும்.
உங்களின் ராசிநாதன் புதன் பார்வைப் பெறுவதும் உங்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். தொழில் ஸ்தானாதிபதி ஏப்ரல் மாதத்தில் லாபஸ்தானத்திற்கு வருவதால் மனஒற்றுமையும் மூத்த சகோதரர் முன்னேற்றமும் உண்டாகும். கலைத்துறையினரின் போராட்டம் வெற்றியை தரும்.
எப்பொழுதும் ஏதாவது பணியை செய்து கொண்டே இருப்பீர்கள். பெண்களின் பலநாள் பிரச்சனை முடிவுக்கு வரும். சுயமாக சிந்தித்து நல்ல பலனைப் பெறுவீர்கள். காலத்தையும் நேரத்தையும் பயன்படுத்தி கொள்வீர்கள்.
வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவீர்கள். மதிப்பும், மரியாதையும் உண்டாகும். வாரா கடன் வசூலாகும். பணவரவு இருக்கும் தெய்வீக அருள் கடாட்சம் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட எண்கள்:
5, 3, 9.
அதிர்ஷ்ட மாதங்கள்:
ஏப்ரல், ஜுன், டிசம்பர்.
நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிற்றுகிழமைகளில் நவகிரக வழிபாடும், வெள்ளிக்கிழமை சுப்ரமணியர் வழிபாடு உங்களின் மனகுறையையும். பொருளாதார தடையும் நீக்கும். ஏழைக்குழந்தைகளின் கல்விச் செலவிற்கு உதவினாலும் கூடுதல் பலன் கிட்டும்.