ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் 2023 - சிம்மம்

ஆங்கில புத்தாண்டு சிறப்பு ராசி பலன்கள் 2023 - சிம்மம்

உறுதி தன்மையும் எழுச்சியும் கொண்டு விளங்கும் சிம்ம ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு முற்பகுதியில் குரு பார்க்குமிடம் சிறப்பாக இருக்கும். சனி ஆறாமிடத்தில் இருக்கும்போது உடல் நலனின் கவனம் செலுத்த வேண்டிவரும். சனி வரும் மார்ச் மாத கடைசியில் பெயர்ச்சியாகும்போது கண்டக சனியாக வருகிறார்.
 
உங்களுக்கு ஏழாமிடத்து அதிபதி ஏழாமிடத்தில் அமர்வது கணவன் மனைவி உறவு சற்றுத் தள்ளி போகும். சிலருக்கு வேலை நிமித்தமாக வேறு வேறு இடம் பெயரலாம். சிலருக்கு தாம்பத்தியத்தில் பிரச்சனை வரலாம். கடவுள் நம்பிக்கையும், மனஉறுதியும் இருக்கும் யாருக்கும் எந்த பிரச்சனையும் வராது. 
 
அதுபோல சிலர் கூட்டுத்தொழிலில் பிரச்சனை வரவும் வாய்ப்பு அமையும். கருத்துகளை வெளிப்படுத்தும் போது சற்று நிதானமாக எதையும் சொல்வது நல்லது. மனச்சலனம் கொள்ள வேண்டியதில்லை. உங்களின் தனிப்பட்ட தொழிலில் அதிகமான லாபமும் பொருளாதார பெருக்கமும், அடிக்கடி வெளி மாநிலம், வெளிநாடு சென்று வருதல் போன்ற வாய்ப்புகள் அமைய பெறுவீர்கள். 
 
குரு ஏப்ரலில் உங்களின் ராசியை பார்ப்பதும் தைரியஸ்தா னத்தையும், பஞ்சம ஸ்தானத்தையும் பார்வை இடுவது இதுவரை பல ஆண்டுகள் தைரியமாக செய்யாமல் இருந்த காரியத்தை உடனே செய்து முடிப்பீர்கள். உங்களின் புத்திரர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு. உடல் நலனின் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களின் வாழ்க்கை சூழ்நிலைகளை மாற்றிக் கொண்டு மேலும் வளர்ச்சி பாதையை நோக்கி பயணம் செல்லுவீர்கள். 
 
தேய்பிறையில் பிறந்தவர்கள் வளர்பிறை சந்திராஷ்டமத்திலும், வளர்பிறையின், பிறந்தவர்கள் தேய்பிறை சந்திராஷ்டமத்திலும் சற்று கவனமுடன் இருப்பதும், புதிய முயற்சிகளை கைவிடுவதும் நல்லது.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
சிவப்பு, மஞ்சள், வெண்மை.

அதிர்ஷ்ட எண்கள்:
 
1, 3, 5, 9.
 
அதிர்ஷ்ட மாதங்கள்:
 
ஏப்ரல், மே, நவம்பர், டிசம்பர்.

நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய்கிழமை சுப்ரமணியரை வணங்கி சிவப்பு நிற பூ வைத்து வேண்டிக் கொண்டும் சனிக்கிழமை வைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கிவர நீங்கள் நினைத்த காரியம் வெற்றியைத் தரும்.