2023 - 2025 சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள் - கன்னி

2023 - 2025 சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள் - கன்னி

காலத்தைக் கண்டு கலங்காமல் எதையும் சாதிக்கும் கன்னி ராசி வாசகர்களே!
 
இதுவரை பூர்வ புண்ணிய ஸ்தானத்திலிருந்து வந்த சனி பகவான், இனி ஆறாமிடமான சத்ரு ஸ்தானத்திற்கு வரும் 29.03.2023 முதல் கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். இந்த காலம் உங்களுக்கு யோக சனியாகவும், எதிரிகளிடமிருந்து விடுதலையும் தந்து, மேன்மை அடையும் வாய்ப்பை பெறுவீர்கள். கடந்த சில காலமாக பல்வேறு குடும்பப் பிரச்சனைகளையும், பொருளாதாரப் பிரச்சனைகளையும் சந்தித்து வந்து செய்வதறியாது இருந்து வந்தீர்கள். இனி அதற்கு அவசியமில்லாமல் பட்டக் கடனை அடைக்கும் நல்ல வாய்ப்பைப் பெறுவீர்கள். இதுவரை உங்களை நம்ப வைத்து ஏமாற்றி கொண்டிருந்தவர்களை அடையாளம் கண்டு அதிலிருந்து விடுபடுவீர்கள். 
 
பாதியில் நின்ற காரியங்கள் இனி செயல்பட துவங்கும். நீண்ட நாள் வழக்கு முடிவுக்கு வரும். பல நாட்கள் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நீங்கள் அதிலிருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினர் படிப்படியாக முன்னேற்றம் காண்பீர்கள். எந்த முடிவையும் உறுதியுடன் எடுத்து வளம் பெறுவீர்கள். சகோதர்களிடம் சச்சரவு நீங்கி சுமூகமான நல்ல உறவுகள் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை நீடிக்கும். புத்திரர்களுக்கு நல்ல வேலையும், மனவலிமையும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்களின் பிறப்பு ஜாதகத்தில் சனியில் பலத்தை பொருத்து, உங்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை பெற்று தருவார். 
 
இதுவரை உங்களுக்கு தெரியாமல் மறைக்கபட்ட உண்மைகள் வெளிபட துவங்கும். காரணமில்லாத காரியங்கள் இனி இருக்காது. வீண் அலைச்சல் மறையும். தொழிலாளர்களின் போக்கு சுமூகமான நல்உறவுகளாக மாறி நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வழக்கறிஞர்கள், மருத்துவ உதவியாளர்கள், கூலி தொழிலாளர்களுக்கு வருமானம் பெருகும். மாணவர்களுக்கு விரும்பிய பாடம், விரும்பிய கல்வி நிலையத்தில் பெற்று, உயர்கல்வியைக் கற்று, வாழ்வை மேம்படுத்திக் கொள்வீர்கள். உடல் ஊனமுற்றோருக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கும். உங்களின் வசதியை பெருக்கிக் கொள்வீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பால் உங்களின் திறமை வெளிபட்டு, மேலும் நல்ல வளமான வாழ்வு அமைய பெறுவீர்கள்.
 
பரிகாரம்:
 
ஞாயிறு கிழமைகளில் ராகு காலத்தில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு, மிளகு கலந்த அன்னம் வைத்து வழிபட்டு வர, சகல வளமும் பெற்று பொருளாதார ஏற்றம் பெறுவீர்கள்.