2023 - 2025 சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள் - மீனம்
வாழ்க்கை வளப்படுத்திக் கொள்ள, வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்ளும் மீன ராசி வாசகர்களே!
இதுவரை லாபஸ்தானத்திலிருந்து உங்களின் ராசியையும் பார்த்து கொண்டிருந்த சனி பகவான், இனிவரும் 29.03.2023 முதல் சனி, விரைய சனியாக இரண்டரை ஆண்டு காலம் அமருவது உங்களின் வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களையும், படிப்பினையும் வழங்கவிருக்கிறார். ஏழரை சனி என்றால் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. உங்களின் ராசிநாதனுக்கு நட்பு கிரகம் என்பதால், விரைய சனியில் மட்டும் சில விடயங்களை கடைபிடித்து வந்தால் எல்லாம் சரியாகும். உங்களின் பிறப்பு ஜாதகத்தில் 6, 8, 12-ல் மறையாமல் இருந்தால் சனி தொல்லை அதிகம் இருக்காது. சிலருக்கு ஏழரை சனியில் மிக பெரிய யோகத்தை கூட தந்து விடுவார்.
கெட்டவன் கெட்டில் கிட்டும் ராஜ யோகம் என்று ஜோதிடத்தில் சொல்பட்டது போல திடீரென்று அதிர்ஷ்ட பலன்களும் கிடைக்கும். இருந்தாலும் விரைய சனி காலத்தில் சுப விரையமாக காலிமனை வாங்குவது, வீடு கட்டுதல், மகள் திருமணம் போன்ற சுபகாரியத்தில் விரைய செலவுகளை செய்து, விரைய சனி பலன்களை சாதகமாக்கி கொள்வது நல்லது. புதிய தொழில் துவங்குதல், கூட்டு தொழிலில் இணைவது போன்ற காரியங்களை தள்ளி போடுவது நல்லது.
எதையும் ஆன்மீக வழியில் தெய்வ வழிபாடு மூலம் அனைத்தையும் செய்வதன் மூலம், சகலமும் வளம் பெறும். பணியில் கூடுதல் வேலைகளைப் பார்க்கும் சூழ்நிலை உருவாகும். எல்லோரையும் அனுசரித்து செல்வதும், அமைதியுடன் இருப்பதும் பிரச்சனை வராமல் காத்துக் கொள்வதும் நல்லது. காலத்தை உணர்ந்து செயல்படுவதன் மூலம் நமக்கு வரும் கஷ்டங்களிலிருந்து விடுதலை பெறுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பால் உங்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.
குலதெய்வ வழிபாடும் அடிக்கடி செய்து கொள்வதும், செவ்வாய், வெள்ளிகிழமைகளில் வீட்டில் விளக்கு ஏற்றி குல தெய்வத்தை தொடர்ந்து வழிபட்டு வர, ஏழரை சனியில் தாக்கம் குறைந்து நற்பலன் பெறுவீர்கள். வரும்முன் காப்போம்.
பரிகாரம்:
சனிக்கிழமை ராகு காலத்தில் எட்டு அகல் விளக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு, எறும்புக்கு அரிசி,சர்க்கரை போட்டுவர, ஏழரை சனியின் பாதிப்பு குறைந்து நற்பலன்களைப் பெறுவீர்கள்.
கணித்தவர்:
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554