2023 - 2025 சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள் - துலாம்

2023 - 2025 சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள் - துலாம்

வளமான வாழ்வை விரும்பி. திட்டமிட்டு செயல்படும் துலாம் ராசி வாசகர்களே!
 
இதுவரை உங்களின் ராசிக்கு அர்தாஷ்டம சனியாக இருந்து பல்வேறு சுக கேடுகளையும், வாகன பழுது, மனரீதியான பிரச்சனைகளுக்கு உட்பட்டு வந்தீர்கள். இனி வரும் 29.03.2023 முதல் சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து தனஸ்தானத்தை பார்க்கிறார். களத்திரஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். இதனால் இதுவரை பட்ட துன்பங்கள் விலகி, பல நன்மைகளையும் அடையவிருக்கிறீர்கள். உங்களின் ராசிக்கு யோகாதிபதியான சனி முதல் காலத்திலிருந்தே தொழிலிலும், உத்தியோகத்திலும் உங்களுக்கு மேன்மையான வளர்ச்சியைப் பெற்றுத் தருவார். 
 
வாகனங்களை வைத்து தொழில் செய்பவர்களுக்கு ஒருமித்த வாகன ஓட்டத்தையும், சுற்றுலாவிற்கு செல்வதற்கான வாகன வசதிகளை பெருக்கி தருவீர்கள். இதன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். ஒப்பந்த அடிப்படையில் வேலை ஆட்களை அமைத்து தரும். தொழில் செய்பவர்கள், மேலும் நல்ல பலன்களையும். பொருளாதார மேன்மையும் அடைவார்கள். தனி திறமையுடன் செயல்படும் வலிமையைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சட்டத்துறையில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் வழக்குகள் நல்ல முடிவுக்கு வரும். 
 
விவசாயத்தில் பெரும் நஷ்டத்தை சந்தித்தவர்களுக்கு விவசாயம் செழிக்கும். தேங்கி கிடந்த தொழில், விருத்தியைத் தரும். சுவாதி நட்சத்திரகாரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கப்பெறுவீர்கள். மூன்று முறை குரு பெயர்ச்சி வரும் காலம், குரு பார்வையால் உங்களுக்கு கனவாக இருந்த அனைத்து நனவாக அமையப் பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் உண்டாகும். பூர்வீக சொத்து சம்மந்தமான பிரச்சனை நல்ல முடிவை உண்டாக்கும். பொருளாதார நிலை மேன்மை பெறும். 
 
குடும்பத்தில் இருந்து வந்த கணவன் மனைவி சண்டை சமரசமயாகும். பிரிந்த தம்பதிகள் இணைவார்கள் அதிக தூர பயணம் செய்ய வேண்டி வரும். அதன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.

பரிகாரம்:
 
சனிக்கிழமைகளில் தவறாமல் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து துளசி, வெற்றிலை மாலை சாத்தி வேண்டிக் கொள்ள, எல்லாம் வளமாகவும், சிறந்த வளர்ச்சியையும் பெறுவீர்கள்.