டிசம்பர் மாத ராசி பலன்கள் 2024 - சிம்மம்
துணிச்சலுடன் செயல்பட்டு எதையும் சாதிக்கும் சிம்மராசி வாசகா்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானதிபதியுடன் சுகஸ்தானத்தில் அமர்ந்து தொழில்ஸ்தானத்தை பார்வை இடுவதால் தொழிலில் மென்மேலும் நல்ல வளா்ச்சியை பெறுவீர்கள் கடந்த காலத்தில் பல நெருக்கடிகளை அடைந்து சில விசயங்களில் பல் வேறு மனவேற்றுமைகளையும் சஞ்சலங்களையும் அடைந்தீா்கள் இனி அந்த நிலை மாறி நல்ல பலன்கள் உண்டாகும்.
தொழில்ஸ்தானத்தில் குரு தனித்து இருப்பது நல்லதல்ல அந்தணன் தனித்திருக்கம் போது அவதி கூடும் என்பது போல் பலரருக்கு தொழிலில் பிரச்சனை உண்டாகும்
நினைத்தபடி சில காரியம் நடந்து உங்களுக்கு மனமகிழ்ச்சி உண்டாகும்.
தனஸ்தானத்தில் கேது அமா்ந்து கேதுவை குரு பார்ப்பதால் எதிர்பாரத சில அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கபெறுவீர்கள் நீங்கள் எதிர்பார்த்த காரியம் கை கூடும் தாமதமான சில விசயங்கள் சிக்கிரம் நடக்க துவங்கும்.
களத்திர ஸ்தானத்தில் சனி அமர்ந்து ராசியை பார்ப்பதால் கணவன் மனைவி உறவுகளில் சில சச்சரவு உண்டாகும் என்பதால் முடிந்த வரை வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அரசியலில் முக்கியத்துவம் பெறுவீர்கள்.
அரசாங்கத்தின் உத்தியோகம் பார்ப்பவருக்கு பதவி உயா்வும் மாரியதையும் கிடைக்கும் குறை சொன்னவா்கள் பாரட்டுவார்கள். கலை துறையினருக்கு புதிய வாய்புகள் அமையும் சிலருக்கு அரகேற்ற நிகழ்ச்சியில் அனைவரின் பாரட்டு கிடைக்கும் தேவைகளுக்கு பண உதவி கிட்டும்.
சந்திராஷ்டம நாட்கள்:
09.12.2024 திங்கள் காலை 7.37 முதல் 11.12.2024 புதன் காலை 1.00 மணிவரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, மஞ்சள், நீளம்.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடகிழக்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, புதன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய், வெள்ளி கிழைமைகளில் அம்மன் வழிபடு செய்வது,வெள்ளை நிற பூ சாத்தி நெய் தீபம் இட்டு வேண்டிக்கொள்ள சகலகாரியமும் நினைத்தபடி சிறப்பாக நடக்கும்.