“ஜென்ம பாவப்” பரிகாரங்கள்!
வியாதி வந்து எந்த மருந்து சாப்பிட்டும் குணமாகவில்லை என்றால், எல்லாம் போன ஜென்ம பாவம் என்று சலித்துக் கொள்வோம். முற்பிறப்பின் கர்மவினை காரணமாகவே உடல், மனம் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன என்பதையும், அதன் காரணம் என்ன என்பதையும், அதற்கு நிவாரணம் என்ன என்பதையும் “கர்ம விபாகம்” என்னும் பழமையான நூல் கூறுகிறது. மேலும் அந்நூலில், நோய் தீர கடைப்பிடிக்க வேண்டிய ஜபம், பூஜைகள், ஹோமங்கள், தானம் போன்றவை பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சில நோய்களுக்கு மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் கீழ்க்கண்ட பரிகார்ஙகளையும் பூஜைகளையும் செய்தால் விரைவில் குணம் ஏற்படுவது உறுதி.
காச நோய்
முற்பிறவியில் முதியர்வகளையும் ஆசிரியர்களையும் பெரியோர்களையும் துன்புறுத்தி இருந்தால் இந்நோய் ஏற்படும் என்று கர்மவிபாகம் கூறுகிறது.
பரிகாரம் - ருத்ரம் ஜெபித்தல், ஆடை தானம் செய்தல்
உடல் இளைப்பு
சிலர் எப்போதும் உடல் மெலிந்து, இளைத்து இருப்பர். முன் ஜென்மத்தில் உணவைத் திருடி சாப்பிட்டதால் ஏற்பட்ட கர்ம வினைதான் இதற்குக் காரணமாம்.
பரிகாரம் - சிவன் உருவ பொம்மை தானம் செய்வது.
தொழு நோய், வெண் குஷ்டம்
பெரியவர்களைக் கொல்லுதல், பெண்களை அவமரியாதை செய்தல் திருட்டுத்தனமாக மருந்துகளை விற்றல், நம்பியவருக்கு விஷம் கொடுத்தல் போன்றவையே தொழுநோய், வெண் குஷ்டம் உண்டாகக் காரணமாம்.
பரிகாரம் - ருத்ரம் ஜெபித்தல், சூரியன், எருது உருவங்களை தங்கத்தில் செய்து தகுதியானவருக்கு தானம் அளித்தல் கூஷ்மாண்டம் எனும் பூசணிக்காயை வைத்து ஹோமம் செய்தல், வெள்ளிக் காசு வெள்ளி உருவங்களை தானமளித்தல்.
இது போல பாம்புகளைக் கொன்றிருந்தால் தோல் நோய் ஏற்படும் என்றும் அதற்கு நாக உருவம் செய்து தானம் அளிப்பது சிறந்த பரிகாரம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளை அழித்தால் மிகுந்த வயிற்றுப்போக்கு ஏற்படுமென்றும், அதற்கு ருத்ர சூக்தம், வருண சூக்தம், வருண சூக்தம் ஜெபிப்பது சிறந்த பரிகாரம் என்றும் கூறப்பட்டுள்ளது.
முக நோய்
பிறர் பற்களை உடைத்தாலும், நாக்கைத் துண்டித்தாலும், மற்றவரை இழிவாகப் பேசினாலும் வயதில் மூத்தோரை இழிவுபடுத்தியிருந்தாலும் பெய் சாட்சி கூறியிருந்தாலும் முகத்தில் நோய் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பரிகாரம் - பூசணிக்காய் வைத்து யாகம், காயத்ரி ஜெபம், தங்கத்தில் யானை செய்து தானம் அளித்தல், தானியம், மருந்துக்ள தானம் செய்வது.
மூல நோய்
கற்றவர் பார்வையற்றோரின் சொத்துக்களைத் திருடுதல், பசுக்களைக் கொல்லுதல், கோவில் சொத்தை அபகரித்தல் போன்றவை செய்திருந்தால் மூல நோய் ஏற்படுமாம்.
பரிகாரம் - பசுவின் உருவத்தை தங்கத்தில் செய்து தானமளித்தல் வைரம் தானமளித்தல்.
கண் நோய்
நன்றி மறந்திருந்தாலும், பிறர் மனைவியை தவறாகப் பார்த்திருந்தாலும் மற்றவர் கண்களைச் சேதப்படுத்தியிருந்தாலும் இப்பிறவியில் கண் நோய் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பரிகாரம் - பருப்பும் பாலும் கலந்த பாயசம் தானம், தங்க தானம், தங்கத்தில் செய்த கருட உருவ பொம்மை தானம், கண் தொடர்பான நேத்ராக்ஷ பத்திரம் ஜெபித்தல், நெய்யில் தோய்ந்த தங்க நாணயங்கள் தானம் செய்தல்.
பசுவின் கண்களைச் சேதப்படுத்தியிருந்தால் மாலைக்கண் எனும் நோய் ஏற்படும் என்றும், அதற்கு ஸ்ரீகிருஷ்ணனின் உருவ பொம்மை தானம் ஏற்றது என்றும் கூறப்பட்டுள்ளது.
காது நோய்
புறங்கூறினாலும் மற்றவர் காதை சேதப்படுத்தி இருந்தாலும் காது நோய் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பரிகாரம் - நிலம், தங்கம், தானியம், கம்பளி ஆடைகள் தானம், சூரியன் வழிபாடு.
பழங்களைத் திருடிநானலும் காதில் நோய் ஏற்படுமாம். இதற்கு அன்னதானம் பரிகாரமாகச் சொல்லப்பட்டுள்ளது.
பேச்சுக் குளறல்
பேச்சுக் குறைபாடு உடையவர்கள், ஆசிரியர், பெரியோர்களைத் துன்புறுத்தியிருந்தாலும், பெய் பேசியிருந்தாலும், பிறர் நாக்கைத் துண்டித்திருந்தாலும் பேச்சுக் குளறல் உண்டாகுமாம்.
பரிகாரம் - தானியம், மருந்துப் பொருட்கள் தானம், பூசனிக்காய் ஹோமம், ராகு சம்பந்தமான மந்திரங்களைக் கூறி வழிபடுதல்.
வாத நோய்
பெரியோர்களை நித்தித்தாலும், பெற்றோர், ஆசிரியர்களை வெறுத்தாலும், உணவைத் திருடினாலும் வாதநோய் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
பரிகாரம் - செம்பு உலோகத்தில் மானின் உருவ பொம்மை செய்து தானமளித்தல், உணவு பசும்பால் தானம் அளித்தல், தங்க தானம் அளித்தல், வாயு பகவான் தொடர்பான மந்திரங்கள் ஜெபித்தல் சிறந்த பரிகாரமாக கர்ம விபாகம் எடுத்துரைக்கிறது.
நீரிழிவு
ஆசிரியரை வெறுத்தாலும், பெரியவருக்குரிய உணவைத் திருடினாலும், பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டாலும் இந்நோய் ஏற்படும்.
பரிகாரம் - பசுக்கள், தங்கம், உணவு தண்ணீர் முதலியவற்றை தானம் வழங்குவது.
இதுபோல சிறுநீரக சம்பந்தமான பிரச்சினைகளுக்கு எள் தானம், தங்கத்தில் செய்த தாமரைப் பூக்கள் தானம், அக்னியை வழிபடுதல் சிறப்பாகும்.
ரத்தப்போக்கு
அரச மரம் போன்ற புனித மரங்களை வெட்டினாலும் பசுக்களைத் துன்புறுத்தினாலும் பெரும் ரத்தப்போக்கு ஏற்படலாம்.
பரிகாரம் - சிவப்பு நிற பசு தானம்.
வலிப்பு நோய்
ஆசிரியர்கள், முதலாளிகளைக் கொன்றால் வலிப்பு நோய் உண்டாகுமாம்.
பரிகாரம் - தர்ம நூல்களில் கூறப்பட்டுள்ளபடி நியாய வழிகளில் நடப்பது, தானம் அளிப்பது.
புண்கள்
காய்கறிகளைத் திருடினாலும் பிறரை பேச விடாமல் தடுத்தாலும் மற்றவரை அவமதித்தாலும் உடலில் புண்கள் ஏற்படுமாம்.
பரிகாரம் - ரத்தினக் கற்கள், முத்துகள், விலை மதிப்பான மோதிரம் போன்றவற்றை தானம் அளித்தல்.
- ஆர். மகாலட்சுமி