கடுமையான நோய் தீர பரிகாரம்!

கடுமையான நோய் தீர பரிகாரம்!

பல வருடங்களாகக் கடும் நோயால் அவதியுறுவோர் பலருண்டு. எங்கெங்கோ எத்தகைய வைத்தியம் செய்திடினும் நோய் தீராது இவர்கள் துன்பத்தில் உழன்று வருகின்றனர். இத்தகையோர் விசாக நட்சத்திரத்தன்று பசு, கன்றுடன் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து அப்பசுவைக் கன்றுடன் ஓர் ஏழைக்குத் தானமாக அளித்திட நிவாரணம் பெறும் நல்வழிகளைக் காணலாம்.

இவர்கள் மாதந்தோறும் விசாக நட்சத்திரத்தில் சென்னை, திருச்சி, காஞ்சி போன்ற இடங்களிலுள்ள கோசாலைகளில் பசுக்களுக்கோ அல்லது ஓர் எளிய குடும்பத்தினர் வைத்துள்ள பசுவிற்கோ தாமே கைப்பட அரைத்த மஞ்சளை நீரில் கரைத்து பசு, கன்றிற்கு நீராட்டி பசுஞ்சாணம், குப்பை வைக்கோல் போன்றவற்றை எடுத்துத் துப்புரவு செய்து பசு கன்றிற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு, வலம் வந்து வணங்கி வர வேண்டும். கொடிய கர்மங்களால் விளைகின்ற கடுமையான வியாதிக்கு இதுவே மிகச் சிறந்த பரிகாரமாகும். ஆனால் “தீதும், நன்றும் பிறர் தர வாரா” சிறந்த அதாவது நாம் அனுபவிக்கும் இன்பம் துன்பங்கட்கு நாமே பொறுப்பாளி” என்று உணர்ந்து ஆழ்ந்த நம்பிக்கையுடன் இதனைக் கடைப்பிடிக்க வேண்டும்.

- சுவாமி பொன்னையாபிள்ளை