சூரிய தோஷங்கள் அகன்றிட!

சூரிய தோஷங்கள் அகன்றிட!

தினமும் பிரதோஷ காலமான சூரிய அஸ்தமன நேரத்தில் சிவன் கோவில் சென்று வில்வ இலைகளால் சிவபெருமானை அர்ச்சித்துவழிபட்ட பின்பு நந்தி சிலைக்கு அருகில் கிழக்கு முகமாக உட்கார்ந்து இரு கைகளையும் கூப்பிச் சிவபெருமானை நினைவுபடுத்தி ஓம் நமச்சிவாய என 108 தடவை உச்சரிக்க வேண்டும்.
 
மேலும் தினந்தோறும் அதிகாலைப் பொழுதான விடியற்காலையில் சூரிய உதயத்தில் குவித்து. திருநீறு பூசி சிவப்பு நிறத்தினாலமைந்த வேஷ்டியை அணிந்து கழக்கு திசை நோக்கி நின்று சூரிய மந்திரம் ஓம் ரீம் ஆதித்யாய நம என்றவாறு குறைந்தது ஒன்பது முறை உச்சரித்த பின் பூஜை அறையில் உட்கார்ந்து தாம்பூலம் பழம் வைத்த சாம்பிராணி தூபம் இட்டு சூரிய கவசம், சூரிய காயத்ரி போன்றவற்றை உச்சரிக்கலாம்.
 
மேலும் சூரியனுக்கு உகந்த ஸ்தலமான தஞ்சாவூருக்கு அடுத்த சூரியனார் கோவில் சென்று தரிசித்து வழிபாடு செய்து வருவது நன்மை பயக்கும்.
 
அதிர்ஷ்ட கற்கள் அணியும் வகைகள்
 
சூரியனுக்கு உகந்த கல், மாணிக்கம் ஆகும். மேலும் புத்திர பாக்கியம் சிந்திக்கிற வரை மாணிக்கக் கல் அணியலாம். பெண்கள் மாணிக்க மாயையோ, மோதிரமோ, காதணியோ அணியலாம்.
 
துயில் கொள்ளும் முறை
 
இரவில் துயில் கொள்கிற போது படுக்கை விரிப்புகளுக்கு கீழ் எருக்கம் இலை, எருக்கம் சமித்து, மயில் தோகை இவை மூன்றையும் வைத்து துயில் கொள்வது சிறப்படையது. எருக்கள் சமித்து ஒரு சாண அளவு இருப்பது போதுமானது. மேற்கண்ட எருக்கம் சமித்து, மயில் தோகை இவைகளைத் தினமும் மாற்ற முடியாவிட்டாலும் ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக மாற்ற வேண்டும். புதிதாக மாற்றுகிற போது பழைய மாடல் தோகை, எருக்கம் சமித்து இவைகளை துணியில் மடித்து கிணறு. குளம் போன்றவற்றில் இடுவது நலம்.
 
மேலும் தம்பதிகள் தாம்பத்யத்தில் ஈடுபடுகின்ற தினத்தில் ஏழைகளுக்கு அன்னதானம் அவசியம் செய்ய வேண்டும்.
 
மேலும் சூரிய பகவானுக்கு விருப்பமான நெய் சர்க்கரை பொங்கலை தாமிரத்தால் செய்த பாத்திரத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை முறையான பூஜை வழிபாடுகள் செய்த பின் சூரியபகவானுக்கு படைத்த பின் ஏழை மக்களுக்கு தானம் செய்வது நலம் பயக்கும். சிவப்பு நிற ஆடைகளைத் தானம் செய்யலாம்.
 
முக்கியமாக சூரிய பகவானின் நட்சத்திரங்கள் உத்திரம், உத்திராடம், கார்த்திகை நாட்களில் செய்வது சிறப்பு அதனினும் கிழமையும் ஞாயிற்றுக்கிழமையாக அமைந்து நட்சத்திரமும் சூரியனின் நட்சத்திரமாக அமைவது மேலும் சிறப்பைத் தரும். மேலும் அவரவர் பிறந்த தமிழ் மாதங்களில் இத்தகைய பரிகாரங்கள் செய்வதுநற்பலனைத் தரும். உச்சிக் காலத்தில் இத்தகைய பரிகாரம் செய்வது மேலும் சிறப்பைத் தரும்.
 
தான் பிறந்த தமிழ் மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தன்று எருக்கம் சமித்துக் கொண்டு ஹோமம் வளர்த்து அதில் கோதுமை மாவில் நெய், சர்க்கரை கலந்து சூரிய மந்திரமான ஓம் ரீம் ஆதித்யாய நம எனக் கூறி வழிபடுவது மிகுந்த சிறப்பைத் தரும் இத்தகைய பரிகாரங்கள் சூரியனால் ஏற்படும் தோஷத்தை அகற்றும் எனலாம்.
 
- கச்சனம் நடராஜன்