முக்தீஸ்வரர் ஆலயத்தினுள் சூரியக்கதிர்கள்!

முக்தீஸ்வரர் ஆலயத்தினுள் சூரியக்கதிர்கள்!

18.03.2021-ந் தேதி காலை தெப்பக்குளம் அருள்மிகு முக்தீஸ்வரர் ஆலயத்தில் சூரிய பகவான் சிவ திரு ரூபத்தை தரிசிக்கும் அபூர்வ காட்சியை பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.
 
முதல் செங்கதிற்கள்:- பிரதான கோவில் வாசல் வழியாக காலை 6.35 முதல் காலை 6.45 வரை செங்கதிற்கள் ஊடுருவின.
 
இரண்டாம் வெள்ளை கதிர்கள்:- கோவில் மேற்கூரையில் நடு துவாரகம் வாயிலாக காலை 6.55 முதல் உட்புகுந்தது.
 
சூரிய கதிர்கள் நேரடியாக சிவ திரு ரூபத்தில் பிரகாசித்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது... நம் முன்னோர்களின் கட்டிட கலையை எண்ணி பக்தர்கள் வியந்தார்கள். 
 
இந்த தெய்வீக சூர்ய வழிபாட்டு நிகழ்வு வரும் மார்ச் 23ஆம் தேதி வரை ஏற்படும், இதை அடுத்து செப்டம்பர் மாதத்தில் மீண்டும் இந்நிகழ்வு நடைபெறும்.