காவிரி என்னும் புனிதநதி!

காவிரி என்னும் புனிதநதி!

இந்தியாவின் மிகச் சிறந்த ஆறுகளுள் காவிரியும் ஒன்று. இந்துக்கள் இதைப் புண்ணிய நதியாகக் கருதி பூசை செய்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் கூர்க் மாவட்டத்தில் பிரம்மகிரி என்னுமிடத்திலுள்ள தலைக்காவேரியில் காவிரி உற்பத்தியாகிறது. தெற்கிலும் கிழக்கிலுமாக, கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு வழியாகத் தக்காண பூடபூமியைக் கடந்து தென்கிழக்கு தாழ்நிலங்களில் பாய்ந்து வங்களான விரிகுடாவிற்கு அருகில் இரண்டு ஆறுகளாகப் பிரிந்து கடலில் கலக்கிறது். தமிழ் இலக்கியத்தில் இதன் புனிதத்தன்மையும் புகழும் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் காவிரிக்கரையில் பல கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் தத்துவமும், கலையும் இசை, நடனம் போன்றவையும் பெரிய அளவில் செழித்தோங்கி வளர்த்தன.

காவிரி நதிப்படுகை சுமார் 27,000 சதுரமைல்கள் கொண்டது. இதனுடன் இணையும் உபநதிகளாவன ஹேமாவதி, அர்க்கவதி, கபிலாஹேன்று ஹோலே, லட்சமண தீர்த்தம், கபினி, பவானி, லோக பவானி, நொய்யில் மற்றும் அமராவதி ஆறுகளாகும்.
 

விவசாயப் பயிர்களுக்கு ஆண்டாண்டு காலமாக காவிரி ஆறு உறுதுணையாக இருந்திருக்கிறது. தென்னிந்தியாவில் பண்டைய அரசுகளுக்கும் தற்போதை நகரங்களுக்கும் உயிர்வாழ ஆதார பிடிப்பாக இது இருந்து வருகிறது.
 
தட்சிணாகங்கை அல்லது தென்னந்திய கங்கை என்று இந்துக்களால் காவிரி ஆறு கருதப்படுகிறது.் அது ஓடும் வழியெங்கும் அதை மக்கள் புனிதமாகக்கருதி வழிபடுகின்றார்கள். புராணப்படி, ஒரு காலத்தில் பிரம்மாவிற்கு விஷ்ணுமாயா அல்லது லோபமுத்திரா என்பவள் மகளாகப் பிறந்தாள். அவளுடைய தெய்வீகத்தந்தை, ஒரு சாதாரண மனிதரான காவிரி முனிவரின் மகளாக வாழ அவளுக்கு அனுமதி கொடுத்தார். தன்னுடைய வளர்ப்புத் தந்தைக்குப் பேரின்பத்தை அளிப்பதற்காக அவள் ஓர் ஆறாக மாறி தன்னிடம் வருபவர்களின் பாவத்தையெல்லாம் போக்கத் தீர்மானித்தாள். அதனால் தான் புனிதகங்கை கூட ஆண்டுக்கொருமுறை பூமியின் அடியில் ஓடி, தன்னுடைய நீரில் மக்கள் கூட்டம் குளித்துப் பாவங்களைத் தொலைத்துக் கொள்வதால் அந்த பாவம் நீங்கக் காவிரியில் உற்பத்திஸ்தானத்திற்கு வருவதாகச் சொல்லப்படுகிறது.
 
இதன் உற்பத்தி பற்றிய மற்றொரு கதை அகஸ்திய முனிவர் தவம் செய்து கொண்டிருந்த போது ஒரு காகம் அவருடைய கமண்டலத்தைக் கவிழ்த்துவிட்டது. அதிலிருந்து ஓடிய நீர் காவிரி ஆனது என்பதாகும்.
 
குடகு மலையிலிருந்து புறப்படும் காவிரி தக்காண பீடபூமியில் ஓடுகிறது. அங்கு ஸ்ரீரங்கப்பட்டிணம், சிவசமுத்திரம் இரண்டும் கர்நாடகத்திலும், ஸ்ரீரங்கம் தமிழ்நாட்லுமாக மூன்று தீவுகளை ஏற்படுத்துகிறது. சிவசமுத்திரத்தீவில் காவிரி 98 மீட்டர் உயரத்திலிருந்து கீழே இறங்குகிறது. ககனசுத்தி, பார சுத்தி என்ற பெயர்களில் அருவிகளாக விழுகின்றன.இந்தியாவில் முதன்முதலாகக் கட்பட்ட நீர்மின் நிலையம் (1902 இடது அருவியில் உள்ளது. பெங்களூர் நகரத்திற்கு இங்கிருந்து மின்சாரம் அளிக்கப்படுகிறது. 1906-ல் ஆசியாவிலேயே மின்சார வசதி பெற்று தெருக்களில் மின்சார விளக்குகள் எரிந்த முதல் நகரம் பெங்களனர்.
 
பெரிய கம்பீரமான ஒக்கேனக்கல் அருவி வழியாகக் காவிரி தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது.இங்கிருந்து வளைந்து வளைந்து சென்று தெற்குச் சமவெளியை அடைகிறது. கடலில் செருமுன் தஞ்சாவூரை வளமான டெல்டாப் பகுதியாகச் செய்கிறது.
 
கர்நாடாகாவில் இதன் குறுக்கே விவசாயப் பாசனத்திற்காக 12 அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. மடகட்டே அணைக்கட்டிலிருந்து ஒரு செயற்கை கால்வாய் 72 மைல்களும் ஓடுகிறது. 10,000 ஏக்கர் நிலங்களை வளப்பமாக்குகிறது. இறுதியாக மைசூர் நகருக்குக் குடிநீர் அளிக்கிறது. ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு அருகில் பங்கார தொட்டி என்ற பழைய வாய்க்கால் உள்ளது. ரணநதீர கண்டீரலா என்ற உடையார் அரசர் அவருடைய அன்பு மனைவியின் நினைவுச் சின்னமாக இதைக் கட்டினார். ஒரே ஆற்றில் மேல்கையில் அணை கட்டப்பட்டு, அதன் நீர் வாய்க்கால் வழியாக கீழ்க்கையில் சிலமைல்கள், தள்ளி அதே ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்படும் ஒரே வாய்க்கால் இதுதான் என்று சொல்லப்படுகிறது. 1964 வரை இது கார் செல்லும் பாலமாகவும் இருந்தது. விவசாயப் பாசணத்திற்காகப் பழையதும் புதியதுமான பல கால்வாய்கள் இந்த ஆற்றில் வெட்டப்பட்டுள்ளன. பல நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இது குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
 
பெங்களூர், மைசூர் ஆகிய இரு நகரங்களும் குடி தண்ணீருக்குக் காவிரியை முழுமையாக நம்புகின்றன.
 
தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி ஸ்டான்லி நீர்த் தேக்கத்தில் விழுகிறது. அங்கு மேட்டூர் அணை வழியாக வெளியேறுகிறது. ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தின் எல்லையாக காவிரி உள்ளது. பவானி ஆறு காவிரியுடன் சங்கமிக்கும் கூடுதுறையில் பவானி நகரம் உள்ளது. அங்குள்ள சங்கமேஸ்வரர் கோயில் புகழ்பெற்றது. கரூருக்கு அருகில் திருமுக்கூடலூர் என்னுமிடத்தில் அமராவதி ஆறு காவிரியுடன் இணைகிறது.
 
வரலாற்றுப் புகழ்மிக்க திருச்சிராப்பள்ளி வழியாகச் சென்று ஸ்ரீரங்கம் என்ற தீவுக்கருகில் இரண்டு கால்வாய்களாகப் பிரிகிறது. அதற்கு இடைப்பட்ட பகுதி தஞ்சாவூர் டெல்டா.இது தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் ஆகும். வடகால்வாய் கொள்ளிடம், பூம்புகால் என்னும் காவிரி கடலில் சேருகிறது. கடலுக்கு அருகிலுள்ள டெல்டா பகுதியில் துறைமுகங்களாக நாகைப்பட்டினமும் காரைக்காலும் அமைந்துள்ளன.
 
மிகப்பழமையான நீர்ப்பாசனம் கிராண்டு அணைக்கட்டு அல்லது கல்லணையாகும். வெட்டப்படாத கற்களைக் கொண்டு 328 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் கொண்டு காவிரிமீது கட்டப்பட்ட மிகப்பெரிய அணையாகும். சிறந்த சோழப்பேரரசான கரிகால் சோழனால் கி.பி.3 அல்லது 4 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. கி.பி. 1836 - 1835ல் ஹர் ஆர்தர் காட்டனர் என்ற பிரிட்டிஷ் கவர்னரால் கொள்ளிடத்தில் கட்டப்பட்டது பெரிய அணகை்கட்டாகும்.
 
காவிரி ஆற்றின் தண்ணீர் முக்கியமாக விவசாயம் குடிநீர், மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது. பருவமழை மூலமாக இது நீரைப்பெறுகிறது். கிருஷண்ராஜசாகர், மேட்டூர் அணை, கபினி ஆற்றில் உள்ள பானாகா சாகர் அணை ஆகியவை மழை பெய்யும் போது நீரைத் தேக்கிவைத்து வறண்ட கோடைக்காலங்களில் நீரை வெளிவிடுகின்றன. பருவமழை பொய்க்கும் காலங்களில் வறட்சி நிலவும். இதையே நமபியிருக்கும் விவசாய நிலங்களும் பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேரிடுகிறது.
 
கர்நாடகம் தமிழ்நாடு, கேரளம், யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கிடையே காவிரி நதி நீர் பங்கீடு பெரிய பிரச்சினையாக உள்ளது். மத்திய மாநில அரசுகள் இப்பிரச்சினையைத் தமக்குள்ளே சுமூகமாகப் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
 
இதன்கரையிலுள்ள முக்கிய இடங்கள்:
 
ஸ்ரீரங்கம், தலைக்காவிரி, ஸ்ரீரங்கப்பட்டினம், சிவசமுத்திரம், கிருஷ்ணராஜசாகர் அணை (பிருந்தாவன் கார்டன்ஸ்), கேனக்கல் அருவி(புகைப்பாறை - இதன் துளிகள் பாறைகளில் தெறிக்கும் போது புகைபோல் தோற்றமளிக்கிறது) மேகதாது, திருச்சிராப்பள்ளி, கரூர்.
 
குடகு மாவட்டத்திலுள்ள காவிரியில் உற்பத்திஸ்தானமான தலைக்காவிரி முக்கிய யாத்திரிகர்கள் தலமாகும். ஐப்பசி மாதத்து துலாஸ்னானத்திற்கு இங்கு மக்கள் ஆயிரக்கணக்கில் கூடுகின்றனர். இதன் மூன்று தீவுகளிலும் மகாவிஷ்ணு ஆதிசேஷன்ிமீது படுத்திருக்கும் திருக்கோலத்தில் மிக அழகாகக் காட்சியளிக்கிறார்.
 
திருச்சிராப்பள்ளி பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்றான நீர் தலம். இங்கு ஜம்புலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சிவபிரானின் கருவறையில் எப்போதும் காவிரி நீர் காத்துகொண்டே இருப்பதாகக் கூறப்படுகிறது. பம்பு செட்வைத்து அந்த நீர் இறைக்கப்படுகிறது.
 
காவிரிக்கரையில் பற்பல புண்ணியத்தலங்களும் அமைந்துள்ளன. சோழ மன்னர்களால் சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டவை. அவற்றுள் தஞ்சைப் பெரியகோவில் உலகப் பிரசித்தி பெற்றது. கோபுரமும் பெரிது. கோயிலும் பெரிது. கருவறையிலுள்ள சிவலிங்கமும் மிகவும் பெரியது. பாறைக்றகளே இல்லாத இந்த இடத்தில் இவ்வளவு பெரிய கோயிலை எப்படிக்கட்டினார்கள் என்பது இன்றளவும் எல்லோரையும் வியக்கவைக்கும் செய்தியாகும். மாட்டுப்பொங்கல், ஆடிப்பெருக்கு போன்ற புண்ணிய குடும்பமாக அமர்ந்து உணவு உண்பதை இன்றளவும் காவேரி கரையில் வாழும் மக்கள் செய்து வருகிறார்கள்.
 
- டொக்டர் லக்ஷ்மி வி்ஸ்வநாதன்