சிரிப்பு - கனவுகளும் பலன்களும்

சிரிப்பு - கனவுகளும் பலன்களும்

நீங்கள் வாய்விட்டுச் சிரிப்பது போல் கனவு கண்டால் உங்களுக்கு மிகவும் மனச்சோர்வை உண்டு பண்ணக்கூடிய ஒரு நிகழ்ச்சி விரைவில் நடக்கக்கூடும். அந்த மனச்சோர்வுக்கு நீங்கள் ஆளாகாது இருக்க வேண்டுமானால், இன்னும் சிறிது காலம் வரையில் நீங்கள் எந்தச் சங்கதியிலும் அளவு கடந்த நம்பிக்கை வைக்கக்கூடாது. 

 உறுதியான வெற்றி ஏற்படும் வரையில் அவசரப்பட்டு மனக்கோட்டைகள் கட்டிவிடக் கூடாது. எதிலும் தோல்வி ஏற்படக்கூடும் என்று எதிர்பார்த்தே நீங்கள் உங்கள் திட்டங்களை வகுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கட்டாயம் வெற்றி அடைவீர்கள்.

பிறர் வாய்விட்டுச் சிரிப்பது போல் கனவு கண்டால் ஒரு முக்கியமான சங்கதியில் நீங்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகப் போகிறது. அப்படி நடந்து கொண்டால் பிறருடைய நகைப்புக்கு ஆளாவீர்கள். ஆகையால் எவருடைய ஆசை வார்த்தைகளையும் காதில் வாங்காமல் உங்களுடைய தன்னலப் பான்மையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சற்று பெருந்தனமையோடு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் பெருமைக்கு உரியவராக விளங்குவீர்கள்.

தமிழ்வாணன்