சோதிடக்கலைக்கு விஞ்ஞான விளக்கம்!

சோதிடக்கலைக்கு விஞ்ஞான விளக்கம்!

சோதிடகட் கலையை அதன் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர்களில் மிக முக்கியமானவர் தாலமி என்ற அறிஞர் அதுவரையில் சோதிடக் கலையில் பலவிதமான மூட நம்பிக்கைகள். ஆதாரமற்ற நம்பிக்கைகள், கடவுள், அமானுஷ்யம் என பல விஷயங்களும் கலந்திருந்தன.

மார்கஸ் மனிலியஸ் சோதிடக் கலையின் விஞ்ஞானக் கணக்குகளை ஒழுங்குபடுத்தி அதை ஒரு விஞ்ஞானமாக மாற்றினார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கிரகங்களை மந்திர சக்தி கொண்டவையாகவே அவர் கருதினார். கிரகங்களின் இருப்பு, சுற்றுப்பாதை குறித்த பல விஞ்ஞான உண்மைகளை மார்கஸ் மனிலியஸ் தனது புத்தகத்தில் தந்திருக்கிறார்.

ஆனால் கிரகங்கள் எவ்வாறு பூமியின் மீதும் உயிர்களின் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது குறித்து அவர் எந்த விளக்கமும் தனது நூலில் தரவில்லை. ஒவ்வொரு கிரகமும் இந்த இடத்தில் இருந்தால் பூமியில் இப்படிப்பட்ட மாறுதல்கள் நிகழும் என்று மட்டுமே மார்கஸ் மனிலியஸின் நூல்களில் உள்ளது.

இந்த மாற்றங்கள் எப்படி, ஏன் நிகழுகின்றன என்பதற்கான விளக்கங்கள் எதுவும் இல்லை. “அது அப்படித்தான்” என்ற ரீதியில்தான் அவரது புத்தகத்தின் செய்திகள் உள்ளன.

முதன் முதலாக சோதிடக் கலையை முழுக்க முழுக்க ஒரு விஞ்ஞானக் கலை என்ற கோணத்தில் அணுகியது தாலமிதான் சோதிடக்கலை குறித்து இவர் மிக முக்கியமான இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். கி.பி.15-ஆம் நூற்றாண்டு வரையில் சுமார் 1500 ஆண்டுகள் இந்த இரு புத்தகங்களே சோதிடக் கலைக்கு ஆதாரமான புத்தகங்களாக உலகம் முழுவதும் இருந்து வந்தன.

பின்னாளில் இந்தியா அரேபியா, ஐரோப்பா புத்தகங்களே அந்தந்த நாடுகளில் மொழி பெயர்க்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டன. இன்று நவீன சோதிடத்தில் உபயோகத்திலிருக்கும் பல கணக்குகள் தாலமியின் புத்தகங்களின் அடிப்படையில் உருவானவையே.

அல்மாஜெஸ்ட்

தாலமி எழுதிய முதல் புத்தகம் “அல்மாஜெஸ்ட்” (Almagest). சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் சுற்றுப்பாதைகள் நகரும் வேகம். அவற்றின் இருப்பைக் கணக்கிடும் முறைகள் என முழுக்க முழுக்க சோதிடக் கணக்குகளைக் கொண்டது இந்தப் புத்தகம்.

கி.மு.1500 வரையில் இந்தப் புத்தகமே சோதிடக் கலையின் கணக்குகளுக்குப் பயன்படுத்தப்பட்டது 15-ஆம் நூற்றாண்டிற்குப் பின் காப்பர் நிக்கஸ். கலிலியோ போன்ற விஞ்ஞான மேதைகளின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னரே தாலமியின் அல்மாஜெஸ்டில் உள்ள குறைகளும் குற்றங்களும் தெரிய வந்தன.

பூமி மையக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே தாலமியின் கணக்குகள் அனைத்தும் அமைந்திருந்தன. கி.பி. முதலாம் நூற்றாண்டின் விஞ்ஞான அடிப்படையில் தாலமியின் கணக்குகள் மிகவும் துல்லியமானவையாகவே இருந்தன. ஆனால் பூமிதான் இந்த பிரபஞ்சத்தின் மையம். பிற கோள்களும் நட்சத்திரங்களும் பூமியையே சுற்றி வருகின்றன என்ற அடிப்படையில் கணக்கிட்டதால் ஆங்காங்கே சில தவறுகள் உள்ளன.

ஆனால் சுமார் 2000 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு விஞ்ஞானப் புத்தகம் 1500 ஆண்டுகளுக்கு நிலைத்து நின்றது என்பது மலைக்க வைக்கும் ஒரு சாதனை! தாலமியின் விஞ்ஞான அறிவுக்கும் கணிதத் திறமைக்கும் சாட்சியமாக அமைந்துள்ளது இந்த அல்மாஜெஸ்ட் என்ற புத்தகம்.

இந்தப் புத்தகத்திலுள்ள கணக்குகளில் சுமார் 60 சதவிகிதம் இன்றும் உண்மை என்றே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. சூரினுக்கும் பூமிக்கும் இடையே உள்ள கிரகங்களின் கற்று குறித்த கணக்குகளும், சூரியன், சந்திரன், நட்சத்திரக் கூட்டங்கள் குறித்த கணக்குகளும் பெரும்பாலும் சரியாகவே உள்ளன.

பூமிக்கு அப்பால் சனி கிரகம் வரையுள்ள (வெளி வட்ட) கிரகங்களின் கணக்குகளில்தான் பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக வீனஸ் (சுக்கிரன்) கிரகம் குறித்த கணக்குகளில் பல தவறுகள் உள்ளன.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகம் எங்கே இருக்கும் என்பதைக் கணக்கிடும் அட்டவணைகள் மார்க்ஸ் மனிலியஸின் புத்தகத்திலேயே இருந்திருக்கிறது. அதிலுள்ள சில தவறுகளைச் சரி செய்து. அதை மேலும் எளிமையாக்கி துல்லியமான நீண்ட ஒரு அட்டவணையை அல்மாஜெஸ்ட் புத்தகத்தில் தாலமி தந்திருக்கிறார்.

சோதிடர்களின் ஜாதகம் கணிக்கும் வேலையை இந்த அட்டவணை எளிமையாக்கியதோடு கணிப்புகள் துல்லியமாக இருக்கவம் இந்தப் புத்தகம் உலகம் முழுவதிலுமுள்ள சோதிடர்களுக்கு உதவியிருக்கிறது.

ஒரு குழந்தையின் ஜாதகத்தை கரு உருவான நேரத்தில் அடிப்படையில் கணிப்பதா அல்லது குழந்தை பிறந்த நேரத்தில் அடிப்படையில் கணிப்பதா என்ற சர்ச்சையும் குழப்பமும் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்ததும் தாலமியின் அல்மாஜெஸ்ட் புத்தகம் தான்.

கரு உருவான நேரத்தில் கிரகங்கள் எந்த நிலையில் இருந்தன என்பது மிக மிக முக்கியமானதுதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு கரு எந்த நேரத்தில் உருவானது என்பதை எவராலும் துல்லியமாகக் கூற முடியாது. எனவே பிறந்த நேரத்தின் அடிப்படையில் ஜாதகத்தைக் கணிப்பதே சரியான முறை என்று தனது அல்மாஜெஸ்ட் நூலில் மிகத் தெளிவாக எழுதினார் தாலமி.

பிற நட்சத்திரங்கள்

தாலமியின் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சோடியாக்கில் உள்ள நட்சத்திரக் கூட்டங்களைத் தவிர மேலும் பல நட்சத்திரக் கூட்டங்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் சோதிடக் கலையைப் பொறுத்தவரையில் சோடியாக்கிலுள்ள 12 நட்சத்திரக் கூட்டங்களே பூமியின் மேல் தாக்கங்களை உருவாக்கும் என எண்ணப்பட்டு அவற்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டது.

தாலமி, தனது அல்மாஜெஸ்ட் புத்தகத்தில் இதற்கு மாறான ஒரு கருத்தை முன் வைத்தார். சோடியாக்கின் வெளியே உள்ள நட்சத்திரக் கூட்டங்கள், சோடியாக்கின் தெற்கே உள்ள நட்சத்திரக் கூட்டங்கள் என இரு பகுதிகளாகப் பிரித்தார்.

எந்தெந்த நட்சத்திரக் கூட்டங்கள் எங்கே இருக்கும் போது நற்பலன்களைத் தரும். எங்கே இருக்கும் போது தீய பலன்களைத் தரும் என்ற ஒரு பட்டியலும் தாலமியின் நூலில் தரப்பட்டிருந்தது.

சோடியாக்கின் உட்பிரிவுகள்

சோடியாக்கிலுள்ள ஒவ்வொரு வீட்டையும் 12 சம பாகங்களாகப் பிரித்து (டோடிகேட்டிமோரியா) ஒவ்வொரு பாகத்திற்குமான பலனை மார்கஸ் மனிலியஸ் தனது புத்தகத்தில் எழுதினார் என்பதை ஏற்கெனவே கண்டோம். ஆனால் இந்த முறை சரியானது அல்ல என்று எண்ணி தாலமி. அதை மாற்றி, வேறு ஒரு புதிய உட்பிரிவு முறையை அறிமுகப்படுத்தினார்.

சோடியாக்கின் ஒவ்வொரு வீடம் ஐந்து சம பாகங்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பாகத்திற்கும் தனித்தனி குணநலன்கள் ஒரு கிரகம் ஒவ்வொரு பாகத்தில் நிற்கும் போதும் எத்தகைய பலன்களைத் தரும் என்ற விளக்கமம் தாலமியால் தரப்பட்டுள்ளது.

இந்த ஒவ்வொரு பாகத்திற்கும் லத்தீன் மொழியில் “ஹோரிய” (Horia) என்ற பெயரையும் சூட்டினார் தாலமி. ஹோரியா என்றால் “எல்லை” (Boundry, Limit) என்று பொருள். இந்திய சோதிடத்தில் தற்போது வழக்கிலுள்ள ஹோரை (ஓரை) என்ற சொல் இந்த ஹோரியாவிலிருந்து வந்ததுதான்!

- ஜான் பி.நாயகம்