அரிசி வகைகளும் அதன் மருத்துவக் குணங்களும்!

அரிசி வகைகளும் அதன் மருத்துவக் குணங்களும்!

சம்பா, பச்சையரிசி, சிவப்பரிசி, உடையல், பொன்னி என்று நாம் அறிந்திருக்கக்கூடிய அரிசி வகைகள் மிகச் சிலவே! ஆனால், நாம் அறிந்திராத, அதுவும் மருத்துவ குணங்கள் உடைய அரிசி வகைகள் ஏராளம், ஏராளம்! அவற்றை நமது முன்னோர்கள் உணவுக்காகவும், நல்ல மருத்துவ ஆதரவுக்காகவும் சாப்பிட்டு வந்திருக்கின்றனர்.
 
இவ்வாறான ஒரு சில அரிசி வகைகள் மற்றும் அவற்றின் குணங்கள் பற்றிப் பார்ப்போம்.
 
கருப்பு கவுணி அரிசி: அக்கால ராஜ வம்சத்தினரின் தெரிவு. நீரிழிவு, புற்றுநோய்க்கு அருமருந்து இந்த அரிசி.
 
மாப்பிள்ளை சம்பா: நரம்பு, உடல் வலுவாகும், ஆண்மை கூடும்.
 
பூங்கார் அரிசி: பெண்களுக்குப் பொருத்தமானது. சுகப்பிரசவத்துக்கும், தாய்ப்பால் ஊறவும் மகத்தானது. குழியடிச்சான் அரிசியும் தாய்ப்பால் ஊறச் சிறந்தது. 
 
காட்டுயானம் அரிசி: நீரிழிவு, மலச்சிக்கல், புற்றுநோய் போன்ற நோய்கள் குணமாகும். 

கருத்தக்கார் அரிசி: மூலநோய், மலச்சிக்கல் போன்ற நோய்களை விரட்ட வல்லவை.
 
காலாநமக் அரிசி: புத்தர் பெருமான் உண்டது இந்த அரிசியே! மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சீராகும்.
 
மூங்கில் அரிசி: மூட்டு வலி முழங்கால் வலிக்கு உகந்தது.
 
அறுபதாம் குறுவை அரிசி: எலும்புப் பிரச்சனைகளுக்கு நிவாரணி.
 
இலுப்பைப் பூ சம்பா அரிசி: பக்க வாதத்திற்கு அருமருந்தாகவும் கால், கை வலிகளுக்கு நிவாரணமுமாகும்.
 
தங்கச் சம்பா அரிசி: பல், இதயம் வலுவாகும். 
 
கருங்குறுவை அரிசி: உடல் வலுவை மீட்டுக் கொடுக்கும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
 
கருடன் சம்பா அரிசி: இரத்தம், உடல், மனம் – மூன்றையும் சுத்தமாக்கும்.
 
கார் அரிசி: தோல் நோய் சரியாகும். 
 
குடை வாழை அரிசி: குடல் சுத்தமாகும்.
 
கிச்சிலி சம்பா அரிசி: இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து செறிந்தது.
 
நீலம் சம்பா அரிசி: இரத்தச் சோகை நீக்கும்.
 
சீரகச் சம்பா அரிசி: உடல் அழகைக் கூட்டுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
 
தூய மல்லி அரிசி: உடல் உள் உறுப்புகளை வலுவாக்கும்.
 
சேலம் சன்னா அரிசி: தசை, நரம்பு, எலும்பு வலுவாகும். 
 
பிசினி அரிசி: மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும்.
 
சூரக்குறுவை அரிசி: உடல் சிறுத்து அழகு கூடும்.
 
வாலான் சம்பா அரிசி: பெண்களின் இடுப்பு வலுப்பெற்று சுகப்பிரசவத்துக்கு உதவும். இடை மெலிந்து அழகு கூடும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 
 
வாடன் சம்பா அரிசி: அமைதியான தூக்கம் வரும்.

மேலே தரப்பட்டுள்ள பட்டியல் சிறியது. இதைவிட இன்னும் பல்வேறு மகத்துவங்கள் நிறைந்த அரிசி வகைகளும் இருக்கின்றன. இன்றைய நிலவரப்படி இதுபோன்ற அரிசி வகைகள் மிகக் குறைவாகவே பயிரிடப்படுகின்றன. தேடிப் பார்த்து வாங்கிப் பயன்படுத்தினால் நிச்சயம் பலன் உண்டு.