தண்ணீரில் தியானம்!

தண்ணீரில் தியானம்!

உங்களின் முன்பு வாயகன்ற பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதற்கு முன்பு அமர்ந்து கொண்டு தியானத்தில் அரைப்பார்வை நிலைத்துக் கொண்டபடி அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருங்கள்.
 
உங்களின் முன் இருக்கும் பாத்திரத்தின் நீரில் உங்களின் தியான சக்தி பாய்வதாக எண்ணி, நீரைவிட்டு பார்வையை விலக்காமல் அதில் தியானத்தில் நிலைத்திடுங்கள்.
 
நீண்ட நேரம் ஒரு 30 நிமிடம் இப்படி உங்களின் சூரியனின் கதிர்களைக் கொண்ட வலதுகண் பார்வையிலும், உங்களின் சந்திரனின் சக்தி கொண்ட இடது கண் பார்வையிலும் அடுத்து அஆக்கினியை நடுவாகக் கொண்ட உங்களது நெற்றி நடு புருவமைய பார்வையையும் நீரின் மிது செலுத்துங்கள்.
 
சூரியக்கதிர்கள் சந்திரக்கதிர்கள் அக்கினிக்கதிர்கள் சேர்ந்த சக்தி அதை நீரில் தங்களின் அரிதுயில் தியானத்தின் மூலம் அந்த நீருக்குள் பாய்ச்சுங்கள்.
 
மேலும் பஞ்ச பூதங்களில் நீர் ஒன்று என்பதாலும் நீரிலிருந்து உயரிய பல காரியங்களை ஒளி உட்பட உண்டாக்கப் பயன்படும் ஒரு சக்தி இந்த நீர் என்பதாலும் இது மற்ற சக்திகளை எளிதில் தன்னுள் கிரகித்துக் கொள்ளும் என்பதாலும் இப்படி சக்தி பாய்ச்சும் முறையில் உங்களின் சக்தி நிச்சயம். நீருக்குள் பாய்ச்சப்படும்.
 
அத்துடன் உங்கள் வலது கைகளில் உள்ள 5 விரல்களையும் ஒரு சேர குவித்து, இதன் வழியாக பஞ்சசக்திகள் நீரில் பாய்வதாக உங்களுக்குள்ளே கற்பித்துக் கொண்டு நீரில் சுத்தமாக அலம்பிக் கொண்ட உங்களது வலது கைவிரல்களை நீருக்கு மேல் குவித்து வைத்தால் அதில் உங்களது கட்டை விரலில் இருந்து அக்னி சக்தியும் ஆட்காட்டிவிரலில் இருந்து காற்று சக்தியும் பாம்பு விரலில் இருந்து ஆகாய சக்தியும் மோதிர விரலில் இருந்து நிலச்சத்தும் சுண்டு விரலில் இருந்து நீர்ச்சத்தும் அந்த நீரில் சேர்ந்து 5 வகை பஞ்ச சக்திகள் நீருடன் சேரும்.
 
இன்னும் அந்த தண்ணீருக்கு சக்தி ஊட்ட வேண்டும். அந்த நீரில் ஒரு குவளை எடுத்து அதில் நாம் உச்சரிக்கும் மந்திரம், “ஓம் நமச்சிவாய” என்று 1008 தடவை கூறினால் அந்த நீரில் அநேக சக்திகள் இதனால் ஒன்றுகூடி இப்போது சேர்ந்து கொண்டிருக்கும்.
 
இந்த நீரை என் உடல் இன்று முழுக்க சக்தியுடன் இருக்க வேண்டும் என்று கூறி, இந்த நீரின் மூலம் என் உடலுக்கு சக்தி கிடைக்கிறது என்று ஆழ் மனநிலையில் இதை உட்கொண்டால் சக்தி உண்மையிலேயே உங்களுக்கு கிட்டும்.
 
மேலும் விரத நாட்களில் அல்லது பசி எடுக்காத நாட்களில் அல்லது வயிறு வலி கோளாறுகளுடன் இருக்கும் நாட்களில் வயிற்றில் நாலைந்து குவளை நீர் குடித்துவிட்டு உங்கள் தியானத்தை உட்கார்ந்து அந்த வயிற்று நீரில் சக்திகள் ஆழ் மனத்தில் இருந்து கலப்பதாகவும் அந்தசக்தி உங்களின் வயிற்றின் அஜீரண மற்றும் வலிகளை குணப்படுத்துவதாகவும் நினைத்து தியானத்தால் உங்களின் நம்பிக்கை 100% இருந்தால் நிச்சயம் உங்கள் வயிற்றின் பிரச்சினைகள் அதில் அகன்றுவிடும்.
 
மூலிகை, பொடி மருந்துகளை பயன்படுத்துவோர் தேனைக் காட்டிலும் நீரில் மூலிகை பொடிகளை கலந்து அதை வடிகட்டிக் குடித்தால் மூலிகை சத்துகளும்நீரின் சக்தியும் சேர்ந்து ஒட்டு மொத்தமாக கூடுதல் சக்தியை உங்களுக்கு கொடுக்கும் தினமும் 6 லிட்டர் நீரை குடிப்பது நீர்சத்து உடலில் சேரவும், உங்கள் இளமை அதில் கூடவும் பலனளிக்கும்.
 
மற்றும் இளமையை என்றைக்கும் உங்களுக்குள்ளே பராமரிக்க உங்களது இரு கைகளில் உள்ள கடைசி விரலான கண்டு விரலை கைகளின் பெருவிரலோடு சேர்த்து பத்மாசனத்தில் அமர்ந்து தொடைகளில் இருகைகளையும் வைத்து தியானித்தால் நீர் சக்தியை கொடுக்கும், இந்த சுண்டுவிரல் சக்தியில் உங்கள் உடலில், நீர்சத்துக்கள் கூடி அதில் உங்களின் இளமையானது என்றைக்கும் காக்கப்படும்.
 
- உதயதீபன்