ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் - 2026 - விருச்சிகம்
மனவலிமையும், வைராக்கியமும் கொண்டு செயல்படும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து ராசியையும், தனஸ்தானத்தையும் பார்வை இடுவது சிறப்பான பலன்களை பெற்று தரும். குருவின் பார்வை ராசிக்கு இருப்பது உடல் ஆரோக்கியம், மனவலிமை எடுத்த காரியம் வெற்றியை தரும். நீண்ட நாள் பிரச்சனைகள் நல்ல முடிவை தரும். விளையாட்டு வீரர்களுக்கு நிறைய சவால்களையும், போட்டியையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். அனைவரும் வேண்டியதை செய்யும் பண்பை பெறுவீர்கள்.
சுகஸ்தானத்தில் உங்களின் யோகாதிபதி சந்திரனுடன் ராகு இணைவு பெறுவது தடைபட்ட காரியங்கள் சிறப்பாக நடக்கும். சிறுதடைகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள். வாகனம் புதுப்பித்தல் புதிய வாகனம் வாங்குதல் போன்ற வாய்ப்புகள் அமையும். சிலருக்கு திருமண முயற்சிகள் கைகூடும். பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த காரியங்களை எடுத்து செய்து மேன்மை அடைய வழிகளை வகுத்து தருவீர்கள். ஐந்தாமிடத்து சனி சத்ருகளையும், மனோவியாதியும் விரட்டி மேன்மை அடைய செய்வார்.
குரு பார்வை சனிக்கு கிடைப்பது குலதெய்வ வழிபாடு இஷ்ட தெய்வ அனுகிரகம் கிடைக்க பெறுவீர்கள். முதலீடுகள் இல்லாத தொழில்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்து ராசியை பார்வை இடுவது நல்ல வரன் அமைவதுடன் வாழ்வில் செழிப்பான முன்னேற்றம் உண்டாகும். ஆசைபட்ட வரன் அமைய நினைப்பவர் களுக்கு இது நல்ல முன்னேற்றமாக அமையும். பாதுகாப்பு துறையில் பணிபுரிபவருக்கு நல்ல மதிப்பும் கூடுதல் மரியாதையும் கிடைக்கும்.
பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்து தர்ம கர்மாதிபதி பலனை பெறுவீர்கள். தான தர்ம காரியங்களையும், கோவில் திருப்பணி வேலையும் செய்து தர சிலருக்கு வாய்ப்புகள் அமையும். அட்டமாதிபதியும் லாபாதிபதிமான புதன் உங்களின் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருந்து நன்மையை பெற்று தருவார்கள். பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று குருவின் பார்வை ராசிக்கு இருப்பது அனைத்து நன்மைகளையும் பெறும். நல்ல வாய்ப்பு களை அமைத்து தருவார். செய்யும் தொழிலிலும், பார்க்கும் உத்தியோகத்திலும் வளர்ச்சியை பெறுவீர்கள்.
யாருக்கும் தீங்குகள் செய்ய நினைக்கமாட்டீர்கள். தன்னுடன் பணிபுரியும் தொழிலாளர்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு அவர்களுடன் சேர்ந்து நியாயமான போராட்டங்களில் பங்குபற்றி, கடைசி வரை அவர்களின் கோரிக்கைகளை நிறைவேறி தர உடன் உதவி செய்வீர்கள். உங்களின் தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்து சுகஸ்தானத்தை பார்வை இடுவது புதிய வாகனத்தில் பவனி வருவீர்கள். வீடு கட்டுவதற்கு முயற்சிகள் எடுத்தால் அதற்கான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சரியான பாதைகளை தெரிவு செய்து பயணம் செய்வீர்கள். கலைத்துறையினருக்கு சுக்கிரன் கேது இணைவு நல்ல முன்னேற்றமும், நன்மையும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஆரஞ்சு, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
08-08-2026 சனி இரவு 02.27 முதல் 11-08-2026 செவ்வாய் அதிகாலை 04.52 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வதும் உங்களின் பல காரியங்களுக்கு பக்க பலமாக இருந்து அருள் புரிவார்கள் எடுத்த நல்ல காரியங்கள் வெற்றியை தரும்.
















