ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் - 2026 - ரிஷபம்
வளமான வாழ்க்கைக்கான வசதிகளை செய்து கொள்ளும் ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுகஸ்தானத்தில் கேதுவுடன் இணைந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவது… செய்யும் தொழிலில் மேன்மை அடைவீர்கள். எடுத்த காரியத்தை விடாமுயற்சி மூலம் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கொடுத்த பணமும், வர வேண்டிய பணமும் விரைவில் கிடைக்கும். உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களின் யோகாதிபதி சனியின் பார்வை ராசிக்கு இருப்பதால் ஆரோக்கியமான அணுகுமுறைகள் வளர்ச்சியை பெற்று தரும்.
உங்களின் ராசியில் களத்திர ஸ்தானாதிபதி அமர்ந்து களத்திர ஸ்தானத்தை பார்வை இடுவதால் கணவன் மனைவி இடையேயான உறவுகள் பலப்படும். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வீர்கள். சிலருக்கு திருமண தடை நீங்கி நல்ல வரன் அமையும். பெண்களில் சிலருக்கு முக்கியத்துவம் கிடைக்கும். சுமையாக இருந்த பல விடயங்கள்… நல்ல தீர்வு கிடைக்க வாய்ப்பாக அமையும்.
மூன்றாமிடத்தில் குரு அமர்ந்து களத்திர ஸ்தானத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும், லாபத்தையும் பார்வை இடுவது திருமண முயற்சிகள் நன்மையை தரும். செய்யும் தொழிலிலும் உத்தியோகத்திலும் முன்னேற்றம் அமையும். யாரை வைத்து வளம் பெற வேண்டுமென்று நினைத்தீர்களோ… அவரே உங்களுக்கு உதவிகளை செய்வார்.
சுகஸ்தானாதிபதி சூரியன் மூன்றில் அமர்வது தைரியமும், துணிச்சலும் விடாமுயற்சிக்கு வெற்றியையும் பெற்று தருவார். சூரியன் வீட்டில் ராசிநாதன் கேதுவுடன் இணைவு பெறுவது தனித்துவமான நிலைகளும், எதையும் சாதிக்கும் மனவலிமையும் பெற்று மேன்மை அடைவீர்கள். சுறுசுறுப்பான செயல்பாடுகளால் உடனே தீர்வுகளை அடைவீர்கள். கலைதுறையினருக்கு கலை ஆர்வத்தால் வாய்ப்புகளும், முன்னேற்றமும் அமையும்.
சோதனை காலங்களில் உங்களுக்கு உதவி செய்தவர்களை மறக்காமல் வெற்றி பாதையில் பயணம் செய்வீர்கள். எதற்கு துணிவுடன் செயல்படும். உங்களுக்கு தொழில் ஸ்தானத்தில் சந்திரனுடன் ராகு இணைவு பெறுவது நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். சனி கொடுத்தால் யார் தடுப்பார்? காற்றுள்ள போதே துற்றிக் கொள்வது நல்லது. நமக்கு எது சாதகமான சூழ்நிலையோ...அதனை பயன்படுத்தி செயல்படுவதன் மூலம் நன்மை அடைவீர்கள். சரியான பாதையை தெரிவு செய்து பயணம் செய்வதன் மூலம் நினைத்ததை அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, வடகிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, ஞாயிறு,
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
22-08-2026 சனி மாலை 05.16 முதல் 25-08-2026 செவ்வாய் அதிகாலை 04.54 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வெள்ளை நிறப் பூ வைத்து நெய் தீபம் ஏற்றி வேண்டுதலை சொல்லி வர நினைத்த காரியம் சீக்கிரம் நடக்கும். சிறுதர்மம் செய்து வருவது மிக சிறப்பு.
















