ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் - 2026 - சிம்மம்

வளமான சிந்தனையும், வலிமையான செயலும் கொண்ட சிம்ம ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் மறைவு பெற்று அட்டம ஸ்தானத்தினை பார்வை இடுவது அரசு பதவி அந்தஸ்து பெறும் வாய்ப்பு சிலருக்கு சுய ஜாதக அமைப்ப படி அமையும். அரசியலிலும், உத்தியோகத்திலும் வளம் பெறுவீர்கள். சாதாரண செயல்களை கூட பார்த்து பார்த்து செய்து பலன் பெறுவீர்கள். உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். எதையும் மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கை முடிவுகளை எடுப்பீர்கள்.
 
உங்களின் ராசியில் தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் கேதுவுடன் அமர்வது சிறப்பான நல்ல பலன்களை பெற்று தரும். செய்யும் தொழிலில் உண்மையாக பாடுபட்டு மேன்மையையும், பொருளாதார நன்மையும் பெறுவீர்கள். தனக்கு தானே பல விடயங்களுக்கு நிவாரணம் தேடிக் கொள்வீர்கள். பெண் பார்க்கும் படலம் ஆரம்பமானாலும் இரண்டு மாதம் பொறுத்து இருக்க வேண்டும். களத்திரஸ்தானத்தில் சந்திரனும் ராகுவும் இணைவு பெறுவது வித்தியாசமான அனுபவத்தை பெறுவீர்கள். 
 
கருத்து வேறுபாடுகள் மனைவியிடம் இருந்தாலும் விட்டு கொடுக்காமல் மனைவிடம் நல்ல அன்பை தருவீர்கள். சில நேரம் இவ்வளவு பாசம் உள்ளுக்குள் இருந்ததா..! என்று வியக்கும்படி உங்களின் செயல்கள் இருக்கும். நல்ல நண்பர்களின் நட்பு இருந்தாலும் சில தீய பழக்க நண்பர்கள் நட்பு கிடைக்கும் இருந்தாலும் ஒரு லிமிட்டுக்கு மேல் அவர்களிடம் தொடர்பு கொள்ள மாட்டீர்கள். ஆக்கப்பூர்வமான காரியங்களில் அவர்களை பயன்படுத்தி விட்டு பின்பு விட்டு விடுவீர்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
 
அட்டம சனி குருவின் பார்வையால் கடுமையான பலன்கள் குறையும். ஆறாமிடத்து சனி எட்டில் அமர்வது பெரிய பாதிப்பை தருவதில்லை என்பதால் திடீர் அதிர்ஷ்ட பலன்கள் அமைவதும். இதுவரை கொடுக்காதவர் கூட வலிய வந்து உதவி செய்வது ஆச்சரியமாக இருக்கும். சனி கொடுத்தால் யார் தடுப்பார்.? ஏழாமிட சனியின் பலன் பிற்பலனாக அமைவது சற்று ஆறுதலாக அமையும். தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். உங்களின் யோகாதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து தர்ம தர்மாதிபதி பலனையும் தருவார். 
 
ஆலயம் கூட்டுதல், அன்னதானமிடல் என பல விடயங்களில் தர்ம காரியங்களை செய்தல் போன்ற பலன்களை அடைவீர்கள். ஆசைபட்ட காரியங்கள் விரைவில் நடக்கும். ராசிநாதன் பனிரெண்டில் மறைவு பெறுவது அதிகார பலம் சற்று தாமதமாகும். மற்றபடி எதுவும் இனி நடக்காமல் இருக்காது. லாபாதிபதி புதன் விரையத்தில் இருப்பது பணம் வரவேண்டியது சற்று தடைபடும். விரையத்தில் உச்சம் பெற்ற குருவால் பெண் பொருள் சேர்க்கையும் சேமிப்புகளையும் அதிகரிக்கும். உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள். சோதனைகளை சாதனைகளுக்குவீர்கள். நல்ல முடிவுகளை எடுக்க எந்த உதவியுமின்றி செயல்படுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
சிவப்பு, ஆரஞ்சு, வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
ஞாயிறு, வெள்ளி, செவ்வாய்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
02-08-2026 ஞாயிறு மாலை 03.15 முதல் 04-08-2026 செவ்வாய் இரவு 08.29 மணி வரையும்.
29-08-2026 சனி இரவு 10.59 முதல் 01-09-2026 செவ்வாய் அதிகாலை 04.27 மணி வரையும்
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு அன்று மாலை 04.30 - 06.00 மணிக்கு ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு தயிர் அன்னம் நைவேத்தியமிட்டு உங்களின் வேண்டுதலை சொல்ல நீங்கள் நினைத்த காரியம் உடனே கைகூடும்.