பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026 - மீனம்
அன்பும், பெருந்தன்மையும் கொண்டு விளங்கும் மீன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுகஸ்தானத்தில் அமர்ந்து வரைவு ஸ்தானங்களையும், தொழில் ஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் வாழ்வில் வசந்த காலமாக அமையும். பல கோடி கடன்களை கூட எளிதில் அடைக்கமுடியும் சக்தியை பெறுவீர்கள். இதுவரை உங்களை ஏமாற்றி கொண்டிருந்தவரை அடையாளம் கண்டு கொள்வீர்கள். சரியான நேரத்திற்கு காரியங்களை செயல்படுத்தி மேன்மையை பெறுவீர்கள். கால சூழ்நிலைகளுக்கு ஏற்றாற் போல் உங்களை வளைந்து கொடுத்து கொள்வீர்கள். விரையஸ்தானத்தை குரு பார்வையால் அதிலிருந்து விடுதலை பெறுவீர்கள். அவசியமான செலவுகள் தவிர வேறு செலவுகள் குறையும்.
லாபஸ்தானத்தில் தனாதிபதி செல்வாய் அமர்ந்து உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வார். வருமானம் தடையின்றி கிடைக்கும். எதிர்கால சந்ததிகளை கருத்திக் கொண்டு செயல்படுவீர்கள். உங்கள் சுயதொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். அரசாங்க பணியில் இருப்பவருக்கு பதவி இல்லாத தொழிலில் நல்ல லாபம் கிடைக்க பெறுவீர்கள். கலைத்துறையினர் கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மக்கள் மத்தியில் நற்பெயர் உண்டாகும். பாரபட்சமின்றி எதையும் உரிமையுடன் எடுத்து செல்வீர்கள். குறிப்பாக கஷ்டத்தில் இருப்பவருக்கு உதவி செய்வீர்கள்.
கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும். மனைவி விரும்பும் பொருளை வாங்கி கொடுத்து மகிழ செய்வீர்கள். வெளிநாட்டு தொடர்புகள் நல்ல மேன்மையை தரும். வெளிநாட்டு தொழில் செய்பவர்களுக்கும், ஆன்லைன் மூலம் வர்த்தக தொடர்பு இருப்பவருக்கு எதிர்பார்த்த நல்ல பலன்களை இனி பெறுவீர்கள். பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வமுடன் இருந்து வருவீர்கள். கொடுத்த இடத்தில் இருந்து படிப்படியாக பணம் வந்து சேரும். தங்க நகைகளை கவனமுடன் வைத்து கொள்வது நல்லது. அடவு வைக்கும் போது கல் உப்பு மேல் வைத்து பின்பு அடவு வைக்கவும். சிக்கீரமே வீடு திரும்பும். களவு போகாது. தர்ம காரியங்களை தொடர்ந்து செய்து வருவீர்கள். பண புழக்கம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், சிவப்பு, வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், வெள்ளி, ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
07-02-2026 சனி மாலை 04.01 முதல் 09-02-2026 திங்கள் இரவு 08.59 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் பைரவர் வழிபாடுகள் செய்து மிளகு 11 கருப்பு, நீல துணியில் கட்டி நல்லெண்ணெய் தீபம் ஏற்று தயிர் அன்னம் நைவேத்தியம் வைத்து வரும். பக்தர்களுக்கு வழங்கி வர நினைத்த காரியம் உடனே கைகூடும்.
கணித்தவர்:
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554.
















