பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026 - ரிஷபம்

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026 - ரிஷபம்

தனக்கென்று கொள்கையை ஏற்படுத்தி செயல்படும் ரிஷப ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் லாபாதிபதி குரு அமர்ந்து மறைவு ஸ்தானங்களை பார்வை இடுவது தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவது சிறப்பான நல்ல பலன்களை பெறுவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் மேன்மை அடைவீர்கள். முக்கிய கோணத்தில் எதையும் செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள். ராசிநாதன் சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து மூன்றாமிடத்தை பார்வை இடுவது உங்களின் முயற்சிக்கு நல்ல பலனை பெற்று தரும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
 
உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியும், யோகாதிபதியுமான சனி பகவான் ஆட்சி பெற்று விரைய ஸ்தானத்தை பார்வை இடுவதும் ராகுவுடன் இணைவு பெறுவதும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு அதற்கு வாய்ப்பு அமையும். கொடுத்த வாக்குறுதிகளை சிறப்பாக செயல்படுத்தி நன்மை பெறுவீர்கள். செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து மேலும் வளர்ச்சியை பெறும் சூழ்நிலைகளை பெறுவீர்கள். மூன்றாமிடத்தில் சந்திரன் உங்களின் முயற்சிக்கு உறுதுணை செய்வார். உங்களின் கலை பயணம் சிறப்பாக அமையும். புதிய ஒப்பந்தங்களும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வளம் பெறுவீர்கள். சிறு உடல் உபாதைகள் வந்து மறையும்.
 
வாகனங்களை இயக்கி வருமானம் பார்க்கும் அன்பர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். சுமையாக இருந்த பல காரியம் நன்றாக இயங்கி செல்வாக்கும் வருமானமும் பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் மேலோங்கி வருவீர்கள். சோதனைகள் எத்தனை இனி வந்தாலும் அதிலிருந்து வெல்வீர்கள். மருத்துவம் சார்ந்த தொழில் செய்பவருக்கு வருமானம் அதிகரிக்கும். பொது விடயங்களில் உங்களின் செயல்பாடுகள் பாராட்டும் படி அமையும். அடுத்த வரை கேட்டு செய்த பல காரியங்கள் இனி நீங்கள் செயல்படுத்துவீர்கள். தீய நண்பர்களின் நட்பு தொடராமல் விட்டு விலகி விடுவீர்கள். கருத்து வேற்றுமையுடன் இருந்தவர்கள் இனி இணைத்து உறவு பலபடுத்திக் கொள்வீர்கள். ஆன்மீகமும், பிறரை மதிக்கும் தனிமையும். உங்களின் எதிர் காலத்தை மேன்மை பெற செய்யும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
வெண்மை, மஞ்சள், ஓரஞ்சு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
தெற்கு, தென்மேற்கு, மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வெள்ளி, சனி, ஞாயிறு,
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
12-02-2026 வியாழன் மாலை 02.43 முதல் 14-02-2026 சனி இரவு 01.30 மணைி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
கோவிலில் உழவார பணிகள் செய்வது சகல வளமும் பெற்று தரும். சுப்ரமணியரை அடிக்கடி  விரதமிருந்து வணங்கி, வேண்டுதல்களை சொல்லி வருவது சிறப்பான பலன்களை பெற்று தரும்.