பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026 - சிம்மம்

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026 - சிம்மம்

மனவலிமையும், துணிச்சலும் கொண்டு விளங்கும் சிம்ம ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சூரியன் ஆறில் அமர்ந்து விரையத்தை பார்வை இடுவதும், செவ்வாயும் சத்ருவாக அமர்ந்து பார்வை இடுவதும் நீண்ட நாள் வியாதிகள் உங்களை விட்டு மறையும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். மேலும் செய்வதை செய்தலும், சொல்வதை செயல்படுத்துவதும் நிகழும். மனிதாபிமானமுள்ள காரியங்கள் கைகூடும். நல்ல காரியங்களை துணிச்சலுடன் செய்வீர்கள். பண்பானவர்களின் அன்பை பெறுவீர்கள். எதையும் துணிச்சலுடன் செய்து வளம் பெறுவீர்கள்.
 
லாபஸ்தானத்தில் குரு அமர்ந்து பஞ்சமஸ்தானத்தை பார்ப்பதால் உங்களின் பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சனைகள் சுமூகமாக அமையும். முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சாதகமான ஒரு சூழ்நிலை அமையும். களத்திர ஸ்தான பலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். தேவையற்ற பிரச்சனைகளை விட்டுவிட்டு நல்ல பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் தந்து வளம் பெறுவீர்கள். விரையாதிபதி ஆட்சி பெற்று இருப்பதால் சேமிப்பு குறையும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற.. சரியான வழியை தெரிவு செய்வீர்கள். யாரையும் அவமதிக்கமாட்டீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிக்கொள்வீர்கள்.
 
ராசியில் கேது அமர்ந்திருப்பது உங்களின் ஆன்மீக பயணம் பல சூட்சுமங்களை அறியும் வாய்ப்பை பெற்று தரும். இதுவரை அறியாத பல விடயங்களை அறிந்து கொள்வீர்கள் . எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இருக்க நினைப்பீர்கள். கலைதுறையினர் முன்னேற்ற பாதையை நோக்கி பயணம் செய்வீர்கள். எதை செய்தால் உயரலாம் என்பதை அறிந்து செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் சித்தி அடையவும், ஆராய்ச்சி பூர்வமான நற்சிந்தனைகளும் உண்டாகும். கணவன் மனைவி  உறவு சற்று சஞ்சலத்துடன் இருந்தாலும், உங்களின் தெளிவான மனநிலையால் எல்லாம் சரிசெய்து விடுவீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். எடுத்த காரியம் முடிக்கும் வரை அதை விடாமல் செயல்படுத்துவீர்கள். ஆன்மீக பயணம் சிறப்பாக அமையும். பார்க்கும் இடங்களை மீண்டும் பார்க்க தோன்றும் எதிர்காலம் கவனிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். அதனை அறிந்து சில காரியங்களை மாற்றிக் கொள்ள வேண்டி வரும். அரசியலில் உங்களின் செல்வாக்கு மேலோங்கும். இனி வளம் பெறுவீர்கள். பண பலம் சிறப்பாக அமையும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
சிவப்பு, மஞ்சள், பச்சை.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
ஞாயிறு, செவ்வாய், புதன்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
19-02-2026 வியாழன் மாலை 04.12 முதல் 21-02-2026 சனி இரவு 08.17 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனி, ஞாயிறுகளில் பைரவர் வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்வதும், செவ்வாய், வெள்ளி கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வதும் சிறப்பான நிலை அடைய வழிகட்டும் பொருளாதாரத்தை வளப்படுத்தும்.