பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026 - துலாம்
காலத்தையும், நேரத்தை வீணடிக்காமல் காரியம் செய்யும் துலாம் ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுகஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவது சிறப்பான நற்பலன்களை பெற்று தரும். இனி செய் தொழிலிலும் வளம் பெற செய்யும். உங்களின் தொழில்ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று இருப்பதால் இருக்கும் தொழிலில் பல நன்மைகள் உண்டாகும். எதையும் செயல்படும் முன்பு யோசித்து செய்வது உங்களின் வாழ்க்கைக்கு நல்லது. யோகாதிபதி சனி தனஸ்தானத்தை பார்வை இடுவதால் பல நன்மைகள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை உரிய நேரத்தில் காப்பாற்றி விடுவீர்கள்.
உங்களின் ராசிக்கு குரு பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்வை இடுவது செய்யும் உத்தியோகத்தில் மேன்மை பெறுவீர்கள். அறிவாற்றல் பெருகும். எதையும் சரியான நோக்கத்தில் செய்து பலன் பெறுவீர்கள். சுகஸ்தான பார்வை ராசிநாதனை பார்ப்பதால் மேலும் பலம் பெறுவீர்கள். குறைந்த முதலீடுகளில் செய்யும் எந்த காரியமும் வெற்றியை பெற்று தரும். வரும் வாடிக்கையாளர்களிடம் முக மலர்ச்சியுடனும், சனிவுடனும் பேசும் திறமை உண்டாகும். கலைத்துறையினருக்கு கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமையும். கணவன் மனைவி வரவு நன்றாக இருக்கும். புத்திர பாக்கியம் சிலருக்கு அமையும். வெளிநாட்டு தொடர்புகள் சிலருக்கு அமையும். ஒரு விடயத்தை தெரிவு செய்தால் அதனை கடைசி வரை பின்பற்றுவீர்கள்.
உங்களின் யோகாதிபதி சனி ஏழாமிடத்தை பார்ப்பது செய்யும் தொழிலில் கூட்டு தொழிலில் சிலருக்கு பிரச்சனை வந்து மறையும். சிறு சேமிப்பு, ஆயுள்காப்பீடு முதலீடுகளில் சிலருக்கு சேமிக்கும் பாக்கியம் கிட்டும். வருவதை முன்கூட்டியே ஆய்வு செய்து பலன் பெறுவீர்கள். பஞ்சம ஸ்தானத்தில் ராகு இருந்து பல தடைகளை தந்தாலும் குரு பார்வை பெறுவதால் தடைபட்டு பின்பு கிடைக்கும். முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு உங்களின் எதிர்கால பலனை தரும் வாய்ப்பாக அமையும். சுதந்திரமாக இருக்கவே எண்ணுவீர்கள். யாரையும் புண்படுத்த மாட்டீர்கள். பிறருக்கு உதவி செய்வதில் பெருமை கொள்வீர்கள். தனக்கென்று எதையும் வைத்து கொள்ளமாட்டீர்கள். இரக்க குணம் உங்களின் பிறவி குணம். கொடுப்பவர் கெட்டு போவது இல்லை. எதை சரியாக செய்கின்றோமே அதனை விரைவில் செய்து பயன் பெற நினைப்பீர்கள். வளமான வாழ்க்கை அர்த்தமுள்ளதுதானா என சுய ஆய்வு செய்து கொள்வீர்கள். தொழிலை மதித்து நடப்பீர்கள். எதனை சுமைகள் வந்தாலும் அதனை எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். பண வரவு பொருளாதார தேவையை நிறைவு செய்யும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, நீலம், மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, திங்கள்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
23-02-2026 திங்கள் இரவு 11.04 முதல் 25-02-2026 புதன் இரவு 01.22 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை தோறும் ஆஞ்நேயர் வழிபாடு செய்து வெற்றிலை மாலை சாற்றி ராம மந்திரம் சொல்லி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாம் சிறப்பாக அமையும். கிடைக்க வேண்டிய வசதிகள் விரைவில் கிடைக்கும்.
















