ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - கன்னி

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - கன்னி

துணிச்சலும், வைராக்கியமும் கொண்டு விளங்கும் கன்னி ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் புதன் சுகஸ்தானத்தில் அமர்வதும் குரு புதன் பரிவர்த்தனை யோகம் பெறுவதும் மூன்று பெயர்ச்சிகளில் மார்ச் மாதம் சனி ராசியை பார்கிறார். அடுத்து மே மாதம் குரு லாபஸ்தானத்தில் அமர்கிறார். நவம்பர் மாத்தில் ராகு / கேது பெயர்ச்சி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவும், லாபஸ்தானத்தில் கேதுவும் குருவுடன் இணைவு பெற்று வளம் பல தந்து வாழ்வில் உயர வழிவகுத்து தருவார்.
 
இதுவரை உங்களுக்கு ஆறாமிடத்தில் சனி அமர்ந்து கடன் எதிரிகளிடமிருந்து மீட்டு தர வழிவகுத்த சனி, கண்டக சனியாக அமர்வது உங்களின் கூட்டுத் தொழில் மிக சிறப்பாக அமையும், வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளும் அமையும். மிகவும் சிறப்பான வளர்ச்சியை பெற்று தருவார். கணவன் மனைவி உறவு சில நேரம் பிரச்சனைகளை தரும். ஆன்லைன் வர்த்தகம் சிறப்பாக அமையும். ஆயுள் காப்பீடு தொகை வந்து உங்களுக்கு பொருளாதார வளத்தை பெற்று தரும். எதிர் காலத்திற்கு தகுந்த திட்டங்களை உருவாக்கிக் கொள்வீர்கள்.
 
குரு மே மாதம் உங்களுக்கு லாபஸ்தானத்தில் உச்சம் பெற்று அமர்வது நீங்கள் செய்யும் தொழிலில் நன்மையை தரும். கண்டக சனியை குரு பார்ப்பதால் சனியின் தாக்கம் அதிகமில்லாமல் பார்த்து கொள்வார். நவம்பரில் கேது குருவுடன் இணையும் போது எதிர்பாராத அதிர்ஷ்ட பலன் தேடி வரும். எதையும் எதிர்பாராமல் நீங்கள் உங்களின் கடமையை செய்வீர்கள். ஆன்மீக பணிகளில் தொடர்ந்து செயல்படுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
பச்சை, நீலம், மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
தெற்கு, தென் மேற்கு, வடக்கு.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
5, 6, 3.
 
அதிர்ஷ்ட மாதம்:
 
மார்ச், மே, ஜுலை, ஆகஸ்ட்.
 
பரிகாரங்கள்:
 
சனிக்கிழமைகளில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு எள் கலந்த அன்னம் செய்து வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் அனுகூலமாகும். வெற்றியை தரும்.