ஜுலை மாத ராசி பலன்கள் 2026 - மகரம்

ஜுலை மாத ராசி பலன்கள் 2026 - மகரம்

வைராக்கியமும், மனவலிமையும் உங்களின் வாழ்வில் மலர செய்யும் மகர ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சனி மூன்றில் அமர்ந்து எடுக்கும் முயற்சிக்கு பக்க பலமாக அமைவார். கொடுத்த வாக்குறுதிகளை சீக்கிரம் நிறைவேற்றி தருவார். யோகாதிபதி சுக்கிரன் பார்வை ராசிக்கு அமைவது சிறப்பான வளர்ச்சியைப் பெற்று தரும். அரசியலில் முக்கிய பங்கு வசிப்பீர்கள். எதிர்பாராத தனவரவு கிடைக்க பெறுவீர்கள். சம பலமுள்ள நண்பர்களின் மூலம் வெற்றி பாதையை அடைவீர்கள். கூட்டு தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். பொது நிகழ்ச்சிகளில் உங்களின் பலத்தை காட்டுவீர்கள்.
 
தனஸ்தானத்தில் அமர்ந்த ராகு பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார். அதே நேரத்தில் எம்முடைய தடிப்பான பேச்சு மூலம் சிலரது பகையை உண்டாக்கி கொள்வீர்கள் என்பதால்… யாரையும் குறை கூறும் முன் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. மூன்றில் சனி யோக சனியாக செயல்படுவதும் குரு பார்வை பெறுவதால் சனி மேலும் பலம் பெற்று அமைவதும். உங்களின் செயல்களுக்கு பக்க பலமாக அமையும். யாரையும் நம்பி கொண்டு செயல்படாமல் உங்களின் முயற்சியால் வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீக சொத்துகள் அந்த பிரச்சனை பேசி தீர்க்கும் படி அமையும். 
 
சகோதரர்கள் இணைக்கமுடன் இதற்கு ஒத்துழைப்பு தருவார்கள். முறையான வழிமுறை களை கடைபிடித்து காரியத்தில் அனுகூலம் பெறுவீர்கள். பஞ்சமஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்ப்பது தொழிலிலும், உத்தியோகத்திலும் மேன்மை பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்களுக்கென்று மரியாதையும், வரவேற்பும் இருக்கும். ஆறாமிடத்தில் சூரியன் அமர்வது எட்டாமிட அதிபதி சூரியன் என்பதால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போல நல்ல அதிர்ஷ்டபலன் கிடைக்க பெறுவீர்கள். அதிகார அமைப்புகள் உங்களிடம் ஆலோசனை பெறுவார்கள். 
 
உங்களுக்கென்று ஒரு பாதையை வகுத்துக் கொள்வீர்கள். புதன் சேர்ந்து இருப்பது புத்தி கூர்மையுடன் செயல்படுவது ஆராய்ச்சியில் ஈடுபடுவது உங்களின் பலமாக அமையும். குரு பார்வை ராசிக்கு இருந்தாலும் குருவுக்கு ராசி நீச வீடாக இருப்பதால்.. குருவின் பலம் உங்களுக்கு நன்மையும், தீமையும் உண்டாகும். இருந்தாலும் குரு எப்பொழுதும் கெடுபலன்கள் அதிகம் தராத ராசி என்பதால் பலகீனமும், பலமும் சேர்ந்தே அனுபவிப்பீர்கள். சுக்கிரன் ராசியை பார்ப்பது பலமாக அமையும். யோகாதிபதியின் சுக்கிரன் ராசியை பார்ப்பது நன்மை பயக்கும். 
 
குறிப்பாக கலைத்துறையினருக்கு நல்ல காலமாக அமையும். நடிப்பு, பாடல் எழுதுதல், வசனம் தேர்ச்சி பெறுவீர்கள். தொழிற்சங்க பொறுப்புகளை சரியாக செய்வீர்கள். வேற்றுமையை மறந்து அனைவரையும் அரவணைத்து கொண்டு செயல்படுவீர்கள். அட்டமஸ்தானத்தில் கேது அமர்வது தனித்துவமாக செயல்படுவீர்கள். பொறுப்புகளை உணர்ந்து அதற்கு தகுந்தபடி செயல்படுவீர்கள். கொள்கையில் பிடிப்புடன் இருப்பீரகள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
நீலம், மஞ்சள், வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
சனி, வியாழன், வெள்ளி.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
16-07-2026 வியாழன் இரவு 12.04 முதல் 19-07-2026 ஞாயிறு அதிகாலை 05.09 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வெள்ளை நிற பூ வைத்து நெய் தீபமேற்றி பழவகைகளும் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் தடை நீங்கி சீக்கிரம் நடக்கும். பொருளாதாரமும் மேன்மை அடையும்.