ஜுலை மாத ராசி பலன்கள் 2026 - மீனம்

ஜுலை மாத ராசி பலன்கள் 2026 - மீனம்

எதையும் மறைக்காமல் வெளிபடையாக பேசி செயல்படும் மீன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்வை இடுவது மனவலிமையும் தைரியமும் கொண்டு செயல்படுவீர்கள். ஆன்மீக செயல்களில் அதிக ஈடுபாடுகளை கொண்டு செயல்படுவீர்கள். முக்கிய கருத்துகளை மையம் கொண்டு செயலில் ஈடுபடுவீர்கள். ஜென்ம சனி இருப்பதால் உங்களின் ராசிநாதன் பார்வையால் எந்த பாதிப்பும் தராது. குடுமபத்தில் உண்டாகும். குழப்பங்களை கண்டு மன வருத்தம் அடைவீர்கள். குறுகிய காலத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கும்..
 
உங்களின் ராசியில் சனி அமர்ந்து இருந்தாலும் உச்ச குருவின் பார்வைபடுவதால் சனியால் எந்த பாதிப்பும் இருக்காது. காலில் பாத எரிச்சல் இருந்து மறையும். தொழிலில் இருந்த நெருக்கடி குறையும். முன்பு இருந்த்து போல் தொழிலில் இனி செயல்பட முடியாது. இன்றைய கால கட்டத்திற்கு தகுந்தபடி தொழிலில் சில நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும். தனாதிபதி செவ்வாய் மூன்றில் அமர்ந்து உங்களின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பை தருவார்.
 
நீண்ட கால நிலம் சார்ந்த பிரச்சனைக்கு விடாமல் அலைந்து உங்களுக்கு சாதகமாக அமைத்து கொள்வீர்கள். சுகஸ்தானாதிபதியுடன் சூரியன் இணைவு பெறுவது. உடல் உஷ்ணம் சார்ந்த பிரச்சனை உண்டாகி மறையும். கருத்து வேறுபாடுகளுடன் பிரிந்த தம்பதிகளும், நண்பர்களும் இணைவார்கள். மாணவர்களின் கல்வி கனவு நிறைவேறும். அமைதியான சூழ்நிலையை மிகவும் விரும்புவீர்கள். வெளிநாடு பயணம் சிறப்பான வளர்ச்சியைத் தரும்.
 
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசிநாதன் குருவுடன் அட்டம ஸ்தானாதிபதி சுக்கிரன் இணைவு பெறுவது. பொருளாதார நிலையில் நல்ல வளர்ச்சியை பெற்றாலும் ஏதாவது சிறு சிறு தடை வந்து செயல் தாமதமாகும். பொது வாழ்வில் சிலருக்கு ஆர்வம் இருந்தாலும் அதிக ஈடுபாடு கொள்ள மாட்டீர்கள். வரவு செலவு கணக்கிடும் போது உங்களின் பங்கு தாரர்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டி வரும். ஆன்மீகத்தின் ஈடுபாடுகள் அதிகம் இருக்கும்.
 
தனக்கு வேண்டியதை தானே தேர்வு செய்து கொள்வீர்கள். ஆறாமிடத்தில் கேது அமர்ந்து வயிறு சார்ந்த பிரச்சனைகளை தருவது சிலருக்கு கஷ்டமாக இருக்கும். மருத்துவமனையில் அனைத்து பரிசோதனை செய்த பின்பு உடலில் எதுவும் இல்லை என்று சொன்ன பின்பும் உடலைப் பற்றி கவலைபடுவீர்கள். தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து, செய்யும் தொழிலில் கவனம் செலுத்தி.., தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். சொன்ன சொல்லை தட்டாமல் செயல்படுவீர்கள். அனைவரையும் சகித்து கொண்டு, கொடுத்து வாழ்வது உங்களுக்கு பழக்கமாகி விட்ட ஒன்று என்பதும்…. எதையும் பற்றி கவலை படாமல் உங்களின் செயலை செய்து வருவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
மஞ்சள், வெண்மை, சிவப்பு,
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வியாழன், ஞாயிறு, திங்கள்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
21-07-2026 செவ்வாய் பகல் 12.42 முதல் 23-07-2026 வியாழன் இரவு 10.34 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்து துளசியை சாற்றி நெய் தீபம் ஏற்றி, வர எல்லாம் திறம்பட நடந்து பயம் நீங்கி மனவலிமை பெறுவீர்கள். வெள்ளிக் கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வர நினைத்த காரியம் கைகூடும்.
 
கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554.