விடயம் எதுவாக இருந்தாலும் விரும்பி செய்யும் மேஷ வாசகர்களே!
இம்மாதம் உங்களின் பாக்கிய ஸ்தானத்தை சூரியன் பார்வை இடுவது சிறப்பான பலனாக அமையும். விரைய ஸ்தானத்தையும், விரைய சனியையும் குரு பார்வை இடுவதால் பாதிப்பு எதுவும் இருக்காது மூன்றில் சூரியன் அமர்ந்து கீர்த்தியை தருவார். எடுத்த காரியம் ஜெயம் நினைத்த காரியம் கைகூடும்.
ராசிநாதனே தனஸ்தானத்தில் அமர்வது நல்ல வளர்ச்சிக்கு வழிவகுக்கும். முன் மாதிரியான செயல்களை உண்டாகும். செய்யும் செயலிலும், எடுக்கும் முயற்சியும் கைகொடுக்கும். யாரை நம்பி செயல்பட்டீர்களோ அவர் கடைசியில் கைவிடுவார். எனினும் மனம் தளராமல் அதை முடிப்பீர்கள். பசியோடு இருக்கும் ஏழைகளுக்கு சிறு தான தர்மம் செய்யுங்கள். உங்களுக்கு நல்ல வளர்ச்சியை பெற்று தரும்.
சூரியன் மூன்றில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தை பார்வை இடுவது நல்ல சிறந்த நிர்வாக திறமை செயல்களில். உறுதியான முடிவு எடுத்தல், பேச்சில் கண்ணியம் எடுத்தல் தீர்க்கமான சொற்கள். நேர்மைக்கு துணை நின்று உதவுதல் இருக்கும். புதனுடன் சூரியன் இணைவது கணித மேதைகள் போல செயல்படும் திறன் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்பு அமையும். நீங்கள் விரும்பிய பாடமே அமையும்.
சுகஸ்தானத்தில் குரு உச்சம் பெற்று சுக்கிரனுடன் இணைவு பெறுவதால் புதிய வாகனம் வாங்குதல் வீடு கட்டும் வாய்ப்பு அமையும். உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டி வரும். எதிர்ப்புகள் குறையும். பஞ்சமஸ்தானத்தில் கேது இருப்பது எந்த காரியத்திலும் தடையை ஏற்படுத்துவார். எனினும் நீங்கள் உறுதியுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். சுக ஸ்தானாதிபதி சந்திரன் பாக்கிய ஸ்தானத்தில் அமர்வது மிகவும் நல்ல காரியம் நிறைவேறும். லாபஸ்தானத்தில் ராகு அமர்வது தொழிலில் கூடுதல் முன்னேற்றம் உண்டாகும்.
குடும்ப ஒற்றுமைக்கு பாடுபடுவீர்கள். சுமையாக இருந்த சில காரியம் சிறப்பாக அமையும். நல்ல செல்வாக்கு உள்ள அன்பரின் நட்பு உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். பொது வாழ்வில் சமநிலையை அடைவீர்கள். பணியாளர்களுக்கு வேலை பளு அதிகம் இருக்கும். கலைத்துறையினர் சில நிகழ்ச்சி சிறப்பாக அமையும். முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு பாதுகாப்பு தரும். தேவைகளுக்கு பண வரவு இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஆரஞ்சு, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், புதன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
23-07-2026 வியாழன் இரவு 10.35 முதல் 26-07-2026 ஞாயிறு காலை 10.03 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் (காலை 09.00 - 10.30) பைரவர் வழிபாடு செய்து எட்டு மண் அகல் விளக்கு நல்லெண்ணெயில் எள் திரி போட்டு தயிர் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள சனியின் பாதிப்பு குறையும். எடுத்த காரியத்தில் வெற்றியை தரும்.
ஜுலை மாத ராசி பலன்கள் 2026 - மேஷம்

ஜுலை மாத ராசி பலன்கள் 2026 - விருச்சிகம்
சுறுசுறுப்பாக எப்பொழுதுமு் இயங்கிக் கொண்டு இருக்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பது சிறப்பான பலன்களை பெற்று தரும். நண்பர்களின் தொடர்பு மேலும் நல்ல வளர்ச்சியை தரும். கருத்து வேறுபாடுகள் மறைந்து நன்மை பெறுவீர்கள். அரசியலில் மாற்றங்களை அமைத்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். தொழிற்சங்க நண்பர்களின் உதவி கிடைக்கும்.
உங்களின் ராசிக்கு தனஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து பணப்புழக்கத்தை ஊக்குவிப்பார். தாராளமான பொருளாதார நிலை இருக்கும் ராசிக்கு குரு பார்வையை பெறுவது இன்றும் பல நற்பலன்களை பெற வாய்ப்புகள் அமையும். சுகஸ்தானத்தில் ராகு அமர்வது புதிய வாகனம் வாங்குதல். வீடு கட்டுவதற்கு இடவசதிகள், கட்டுமான பொருட்கள் சேகரித்து கொள்வீர்கள். தாயாருக்கு உடல் நலகுறைவு வந்து மறையும். பஞ்சம ஸ்தானத்தில் சனி அமர்ந்து தனஸ்தானத்தையும், லாபஸ்தானத்தையும் பார்ப்பது செய்யும் தொழில் வளர்ச்சியை பெறுவீர்கள்.
காரணமின்றி எந்த செயலையும் செய்ய மாட்டீர்கள். குலதெய்வ வழிபாடு செய்தல், ஆன்மீக சுற்றுலா சென்று வருவது போன்ற வாய்ப்பு அமையும். தொழிற்சங்க சங்கத்தில் முக்கிய பொறுப்பு வசிப்பீர்கள். அதற்காக கடுமையாக உழைத்து அனைவரிடமும் பாராட்டு பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமைக்கு அயராது பாடுபடுவீர்கள். உங்களின் ஒவ்வொரு முயற்சியும் சாதகமான சூழ்நிலை உருவாக்கும். ஏழாமிடத்து செவ்வாய் உறுதுணையாக இருந்து பல காரியங்களை வளம் பெற செய்வார்.
அட்டம ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி சூரியன் அமர்வது சிலருக்கு அரசு சார்ந்த பணி கிடைக்க வாய்ப்பு அமையும். அரசியலிலும், பொது வாழ்விலும் தனி அந்தஸ்து பெறுவீர்கள். கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நல்ல காலம் என்பதால் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். அதன் அட்டமத்தில் ஆட்சி பெற்று இருப்பது கடமையை செய்ய உத்தரவு பெறுவீர்கள். காரியம் செய்யும் போது பொது நலனே முக்கியம் என்று தோன்றும் அளவுக்கு ஈடுபாடு கொள்வீர்கள்.
பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று குருவுடன் சுக்கிரன் இணைவு பெறுவது சகல பாக்கியங்களும் தடையின்றி பெறுவதற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். உறுதியான முடிவு எடுப்பது. குறுகிய காலத்தில் முடித்து கொடுப்பது போன்ற செயல்கள் சில நேரம் உங்களையே ஆச்சரியபடுத்தும் கலைத்துறையினருக்கு ஏற்றமான காலமாக அமையும். தொழில் ஸ்தானத்தில் கேது வியாபாரம் சார்ந்து வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்து வளம் பெற செய்வார். கிடைத்த இது வைத்து வாழ பழகி கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஆரஞ்சு, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
12-07-2026 ஞாயிறு மாலை 06.14 முதல் 14-07-2026 செவ்வாய் இரவு 08.42 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை 04.30 - 06.00 ராகு காலத்தில் நவகிரக தரிசனம் செய்து பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு அரளி பூ சாத்தி தயிர் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் சித்தியாகும். கேட்டது தடையின்றி கிடைக்கும்.