ஜுன் மாத ராசி பலன்கள் 2026 - தனுசு

ஜுன் மாத ராசி பலன்கள் 2026 - தனுசு

தன் பலம் அறிந்து எதிரியிடம் மோத நினைக்கும் தனுசு ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு அட்டம ஸ்தானத்தில் அமர்ந்து விரைய ஸ்தானத்தையும், தன ஸ்தானத்தையும் பார்வை இடுவது பொருளாதார சிக்கல்கள் விலகி நன்மை பெறுவீர்கள். குரு பார்க்குமிடம் சிறப்பு என்பதால் நன்மை கிடைக்க பெறுவீர்கள். மூன்றாமிட ராகு உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலனை தருவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியின் மேன்மை உண்டாகும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற பாடுபடுவீர்கள்.
 
எந்த காரியமாக இருந்தாலும் சனி வீட்டில் ராகு பலம் பொருந்தி இருப்பதால் அனைத்து முயற்சிகளிலும் மேன்மை பெறுவீர்கள். இளைய சகோதரர் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். ராகு உங்களின் ராசியை பார்வை இடுவதால் மறைமுகமான உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். சனி அர்த்தாஷ்டம சனியாக இருந்தாலும் உங்களின் ராசிநாதனின் வீடு என்பதாலும் உச்ச குரு பார்வைகளுக்கு இருப்பதால் சனியால் கெடுபலன்கள் இருக்காது. சனி கொடுத்தால் யார் தடுப்பார்? என்பது போல வாகன வசதி, சொந்த வீடு கனவுகள் நிறைவேறுவதற்கு முயற்சி எடுத்தால் நல்ல பலன் கிடைக்க பெறுவீர்கள். தாயார் உடல் நிலை சரியாகி மீண்டும் மருத்துவ செலவுகள் உண்டாக வாய்ப்பு அமையும். தாயாரின் உடல்நலனை போன பாதுகாப்பது நல்லது. பஞ்சம ஸ்தானாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதும் ராசிநாதன் குருவை பார்வை இடுவது உங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் செய்யும் தொழில் மேன்மை அடைவதற்கும் எதுவாக அமையும்.
 
உங்களின் யோகாதிபதி சூரியன் ஆறாமிடத்தில் அமர்வதும் விரைய ஸ்தானத்தில் சந்திரன் மீது பார்வை இடுவதும் யோக பலன்களை தரும். எதிர்பாராத நற்பலன்களை பெறுவீர்கள். அரசு பணியிலிருந்து வருவர்களுக்கு அதிகாரிகளில் நெருக்கடிகள் குறைத்து வளம் பெறுவீர்கள். செய்யும் தொழிலை தெய்வமாக ஏற்று செயல்படுவீர்கள். அரசியலிலும் உங்களின் செல்வாக்கு மேன்மை அமையும். தனிப்பட்ட உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். உரிமையுடன் உங்களின் பேச்சும், வன்மையும் சிறந்து விளங்கும். ஏழாமிடத்தில் புதன் ஆட்சி பெற்று சுக்கரனுடன் இணைவு பெற்று ராசியை பார்வை இடுவது தைரியமும், தெம்பும் வைராக்கியமாக காரியத்தை செயல்படுத்துவீர்கள்.
 
அட்டம ஸ்தானத்தில் குரு அமர்வதால் கொடுக்கல், வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பிணையமிடுவதை தவிர்ப்பது நல்லது, புத்திர, புத்திரிகளின் கல்விக்காக செலவு செய்ய வேண்டி வரும். அதற்காக சிலருக்கு கடன்படும் நிலை உண்டாகும். உயர்கல்வி பயில மாணவர்களுக்கு வாய்ப்பு அமையும். உச்ச குருவாக இருந்தாலும் அட்டம ஸ்தானத்தில் இருப்பதால் உங்களின் ராசிநாதன் என்பதால் கெடுபலன்கள் குறையும். பாக்கிய ஸ்தானத்தில் கேது அமர்ந்து லாப ஸ்தானத்தை பார்வை இடுவது செய்யும் தொழில் லாப கரமான சூழ்நிலை அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியின் போது சிறு சிறு தவறுகள் நடக்க வாய்ப்பு அமையும் என்பதால் கவனம் பணி செய்வது நல்லது. பொது வாழ்வில் இனி உங்களின் செல்வாக்கு பெருகும். எதை பற்றியும் கவலைபடாமல் உங்களின் பணியை சிறப்பாக செய்வீர்கள். கொடுத்ததை திருப்பி, கேட்டால் பகையாகிவிடுமோ என்று நினைக்காமல் கொடுத்த இடத்தில் கேட்டு வாங்கி கொள்வது நல்லது. பாதுகாப்பு கருதி நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். கலைத்துறை யினருக்கு முன்பைவிட சிறப்பான வளர்ச்சி இருக்கும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
மஞ்சள், ஆரஞ்சு, வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வியாழன், வெள்ளி, செவ்வாய்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
17-06-2026 புதன் கிழமை பகல் 12.25 முதல் 19-06-2026 வெள்ளிக்கிழமை பகல் 3.56 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வியாழக்கிழமைகளில் தட்சணாமூர்த்திக்கு மூன்று நெய் தீபம் ஏற்றி எலுமிச்சை சாதம் வைத்து வேண்டிக் கொள்ள தடைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். செய்யும் தொழிலில் பிரச்சனையின்றி நலம் பெறுவீர்கள்.