ஜுன் மாத ராசி பலன்கள் 2026 - கடகம்

ஜுன் மாத ராசி பலன்கள் 2026 - கடகம்

காலத்தையும், சூழ்நிலையும் அறிந்து அதற்கேற்ப செயல்படும் கடக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசிநாதன் நீசமாகி இருப்பதும் ராசியில் குரு உச்சம் பெற்று நீச சந்திரனை உச்ச பார்வையாக பார்ப்பதும் நீசபங்க ராஜயோக பலனை பெற்று தரும். அரசியலிலும், முக்கிய அரசு பதவியிலும் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வுகள் உண்டாகும். யாருக்கும் எதிலும் எந்த சூழ்நிலையிலும் கொடுத்த வாக்கை நிறைவேற்றி தருவீர்கள்.
 
உங்களின் ராசியில் குரு உச்சம் பெற்றிருப்பதால்.. நீங்கள் எடுத்த காரியம் ஜெயம் உண்டாகும். ராசிநாதன் நீசமாகி, பார்வை பெறுவது இன்னும் பல சிறப்புகளை பெறுவீர்கள். எதிர்பாராத பதவி உயர்வு, முக்கிய பொறுப்புகள் வகிக்கும் வாய்ப்புகள் அமையும். அரசியல்வாதிகளுக்கு இது சரியான முன்னேற்றத்தை பெற்று தரும். கொடுத்த இடத்தில் பணம், பொருள் விரைவில் கிடைக்க பெறுவீர்கள். தன ஸ்தானத்தில் கேது அமர்வது உங்களின் பொருளாதாரம் மேன்மையை அடையும் வாய்ப்புகள் அமையும். ராசிநாதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்வது பூர்வீக சொத்துகள் சார்ந்த பேச்சு சுமூகமான சூழ்நிலையை பெற்று தரும். காரியத்தில் கவனம் செலுத்தி சிறப்பான செய்து முடிப்பீர்கள்.
 
பொது துறைகளில் பணிபுரிந்து வருபவருக்கு சிறப்பு சலுகைகளும், சேவை செய்வதில் நிறைய மாற்றங்களையும் செய்வார்கள். இதனால் புதிய சேவையை தொடர வேண்டிவரும். பல தடைகளை நீங்கி புதிய வழிமுறைகளை செயல் படுத்துவீர்கள். அட்டமஸ்தானத்தில் ராகு இருந்து சில தடைகளை செய்து வந்தாலும் பெரிய பாதிப்பை தரமாட்டார். இனி பாக்கிய ஸ்தானத்தில் சனி அமர்வதும் சனியால் வளம் பெறும் நிலை உருவாகும். பாக்கியஸ்தானதிபதி சனியை பார்ப்பது இன்னும் சிறப்பு. கருத்து வேறுபாடுகளை களைந்து மன மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். உழைப்புக்கு முக்கியம்  தருவீர்கள். தொழிலுக்கு முதலாளியாக இருந்தாலும் உழைப்பதை மட்டும் விடமாட்டீர்கள்.
 
உங்களின் தொழில் ஸ்தானாதிபதியும், யோகாதிபதியுமான செவ்வாய் ஆட்சி பெற்று ராசியை பார்வை இடுவதும் குருவை பார்ப்பதும் தொழிலில் சிறப்பாக வளர்ச்சியை பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை உண்டாக நீங்கள் எடுக்கும் முயற்சி நல்ல பலனை பெற்று தரும். தொழில் முதலீடுகள் மூலம் நல்ல வரும்படி கிடைக்கும். லாபஸ்தானத்தில் சூரியன் அமர்ந்து சந்திரனை பார்ப்பது கொடுத்த வைத்த பலனாக அமையும். தனாதிபதி லாபஸ்தானத்தில் அமர்ந்து பூர்வ புண்ணியஸ்தானத்தை பார்ப்பது ஜென்ம சாபங்கள், தோசங்களை பரிகாரம் மூலம் சரி செய்து கொள்ள சரியான நேரமாக அமையும். கருத்து வேறுபாடுகளுடன் பிரிந்தவர்கள் இனி இணைவார்கள். முக்கிய பிரமுகரின் சந்தித்து பேசுவதன் மூலம் எதிர்கால நற்பலன்களின் மேன்மை அடைவீர்கள். பொது வாழ்வில் மேன்மை அடைவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள் அமையும் கலைஞர்கள் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
வெண்மை, சிவப்பு, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
வடக்கு, வடமேற்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
திங்கள், செவ்வாய், வியாழன்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
06-06-2026 சனி மாலை 04.16 முதல் 08-06-2026 திங்கள் இரவு 11.23 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
புதன், சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில் சென்று மகாலெட்சுமியை வணங்கி தாமரை பூ வைத்து நெய் தீபம் ஏற்றி வணங்கி வர உங்களின் பொருளாதாரம் மேன்மை அடையும்.