ஜுன் மாத ராசி பலன்கள் 2026 - மேஷம்

ஜுன் மாத ராசி பலன்கள் 2026 - மேஷம்

தனக்கென்று ஒரு கொள்கை வகுத்து செயல்டும் மேஷ ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியில் ஆட்சி பெற்றிருப்பதும், சூரியன் தன ஸ்தானத்தில் அமா்வதும், மறைவு ஸ்தானங்களை குரு பார்வை பெறுவதும் நன்மையும், சுப பலன்களையும். பொருளாதார மேன்மையும் உண்டாகும். 
 
ராசியில் செவ்வாய் அமா்ந்து கொடுக்கல்- வாங்கலில்  சிறப்பான வளா்ச்சியை பெற்று தருவார். மனவலிமையும் எதிர்கால திட்டங்களுக்கு ஊக்கமும் தருவார். விவசாயம் விளை பொருள் விற்பனை , பாதுகாப்பு பணியில் இருப்பவருக்கு தைரியமும், துணிச்சலும் தருவார். பஞ்சமாதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் அமா்வது பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவீா்கள். எதை தேடி அலைந்தீா்களோ,,,! அதனை அடைவதற்கு உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும். வார்த்தை ஜால பேச்சால் பிறரிடம் காரியம் சாதிக்கும் திறனும் உண்டாகும்.
 
சுகஸ்தானத்தில் குரு அமர்ந்து எட்டாமிடம் தொழில் ஸ்தானம், விரைய ஸ்தானத்தை பார்வை செய்வது.. குரு பார்வை இருக்கும் வரை விரைய சனியின் தாக்கம் இருக்காது. நல்ல பலனை பெறுவீா்கள்.. தேவையற்ற செலவுகள் குறையும். உடல் ரிதியான  துன்பம் நீங்கி, மன அமைதி பெறுவீா்கள். செய்யும் தொழிலில் பண  முடக்கம் குறையும். புதிய தொழில் முயற்சியை கைவிட்டு, இருக்கும் தொழிலை வளப்படுத்தி கொள்வீா்கள் குறைந்த பட்ச முதலீடுகளில் நல்ல லாபம் பெறுவீா்கள்.
 
பஞ்சம ஸ்தானத்தில் கேது இருந்து சில காரிய தடைகளை தருவார். இருப்பினும் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி கொள்வவீர்கள். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். சோதனை காலங்களில் நினைத்ததை அடைவீா்கள். பாதுகாப்பு பணியில் திறம்பட செயல்பட்டு மேன்மை அடைவீா்கள். உழைப்பாளா்களுக்கு சற்று அதிகமான வேலை பளு இருக்கும். நல்லவா்களுக்கு உதவி செய்வதில் தடை இருக்காது. ஒரு வேலையை திரும்ப செய்யும் படியான சூழ்நிலை உருவாகும். பொது வாழ்விற்கான ஈடுபாடுகளை இனி குறைத்து கொள்வீா்கள். சேமிப்புகள் கரையும். வெளி நபர்களிடம் பழகும் போது சற்று கவனம் தேவை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
கிழக்கு, வடமேற்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
செவ்வாய், வியாழன், ஞாயிறு.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
26-06-2026 வெள்ளி மாலை 03.08 முதல் 28-06-2026 ஞாயிறு இரவு 2.42 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு மாலை 04.30 - 06.00 ராகு காலத்தில் பைரவருக்கு எட்டு நல்லெண்ணெய் தீபமேற்றி மிளகு பொங்கல் நைவேத்தியம் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் சிறப்பாக அமையும்.