ஜுன் மாத ராசி பலன்கள் 2026 - ரிஷபம்
தைரியமும், துணிச்சலும் கொண்டு செயல்படும் ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதும், குரு மூன்றில் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்வை இடுவதும், தொழில் ஸ்தானத்தில் ராகு அமர்ந்து இருப்பது உங்களின் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். நினைத்த காரியம் கைகூடும். வெளிநாடு யோகம் உண்டாகும். கொடுத்த இடத்தில் தடையின்றி பணவரவு இருக்கும் கெடுபலன்கள் குறைந்து, நன்மை உண்டாகும்.
ராசியில் சூரியன் அமர்ந்திருப்பதால் மனவலிமையும், கடமை உணர்வும் கொண்டு விளங்குவீர்கள். அரசியலில் உங்களின் நேர்மை பாராட்டும்படி அமையும். தொய்வில்லாத அரசியலில் உங்களின் தலைமையின் கீழ் பணி செய்யும் வாய்ப்பு அமையும். சொன்னபடி செய்தால் சகல நலன்களும் கிடைக்கும் என்பது உங்களுக்கு சத்தியமாக அமையும். வாழ்க்கையில் இதுவரை பல்வேறு சோதனைகளால் பாதிப்பை அடைந்தீர்கள். இனி அதுபோல கஷ்டங்கள் வராது. தனித்துவத்துடன் உங்களின் பங்கு சிறப்பாக அமையும். நீங்கள் செய்யும் தொழிலுக்கு உங்களின் வாரிசுகள் உடனிருந்து உதவிகளை செய்வார்கள்.
மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் பெறுவார்கள். பொது வாழ்வில் பிறரின் கஷ்டத்தை உணர்ந்து உதவி செய்வீர்கள். வைத்தியச் செலவு இருக்கும். இருந்தாலும் உடல்நலனில் பெரிய பாதிப்பு ஏதுவும் இருக்காது. உங்களின் ஒவ்வொரு காரியமும் வெற்றியை தரும். முடிந்தளவு கோபத்தை விடுத்து சமரச உணர்வுகளை கொண்டு விளங்குவது நன்மையை தரும். அரசு, அரசாங்க பணியில் இருப்பவர்களுக்கு வேலையில் இருந்த பணி சுமை இனி படிப்படியாக குறையும். சுதந்திரமான செயல்பாடு இருக்கும்.
தனஸ்தானாதிபதி புதன் ராசிநாதன் சுக்கிரனுடன் இணைந்து தனஸ்தானத்தில் இணைவு பெறுவது பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவீர்கள். கலைத் துறையினருக்கு நல்ல காலமாக இருக்கும். வெளியூர் நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி பாராட்டைப் பெறுவீர்கள். குரு மூன்றில் அமர்ந்து களத்திர ஸ்தானத்தை பார்வை இடுவதால் திருமண வாய்ப்பு அமையும். சிலருக்கு புத்திர புத்திரிகளின் திருமண வாய்ப்பு அமையும். கொடுக்கல் வாங்கலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் பூர்வீக சொத்து சார்ந்த விடயங்கள் சுமூகமாக பேசி தீர்ப்பீர்கள். யாரையும் நம்பிக்கை கொண்டு இருக்காமல் உங்களின் காரியத்தை நீங்களே செய்து கொள்வீர்கள். வாகனம் புதுப்பித்தல், புதிய வாகனம் வாங்குதல் வாய்ப்பு அமையும். பெண்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆடம்பரத்தில் அதிகம் விருப்பம் இல்லாமல் எளிமையாக இருக்க எண்ணுவீர்கள். சாதனைகளை செய்ய எத்தனை சோதனை வந்தாலும் எதிர்கொண்டு செயல்படுவீர்கள். உறவுகளில் இருந்து வந்த விரிசல் மறைந்து, நன்மை பெறுவீர்கள். பாதுகாப்பான சூழ்நிலைகளை உருவாக்கி கொள்வீர்கள். இன்ப சுற்றுலா செல்வதற்கு சிலருக்கு வாய்ப்பு அமையும். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, பச்சை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, ஞாயிறு,
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
01-06-2026 திங்கள் இரவு 07.20 முதல் 04-06-2026 வியாழன் காலை 06.41 மணி வரையும்.
28-06-2026 ஞாயிறு இரவு 02.43 முதல் 01-07-2026 புதன் பகல் 02.08 மணி வரையும்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமை காலை 06.00 - 07.00 மணி வரை விநாயகர் கோவில் சென்று விநாயகருக்கு எருக்கம்பூ மாலை / அருகம்புல் மாலை சாற்றி, தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி அவல் பொரிகடலை வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றி தரும்.
















