ஜுன் மாத ராசி பலன்கள் 2026 - துலாம்

ஜுன் மாத ராசி பலன்கள் 2026 - துலாம்

துரிதமாக காரியத்தை செயல்படுத்தும் துலாம் ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்தும், ஏழாமாதிபதியான செவ்வாய் பார்வை பெறுவதும் உங்களின் சீரிய பணிகள் விரைந்து முடிப்பதுடன் காரியத்தை செயல்படுத்துவதில், ஆர்வம் செலுத்துவீர்கள். அரசியலில் ஆர்வமாக இருக்கும். நீங்கள் வெளியிலிருந்து வரும் விமர்சனங்களை எதிர்கொள்வீர்கள். வெற்றி பயணம் தொடரும்.
 
ராசிநாதனின் அருள் பார்வை மூன்றாமிடத்தில் அமைவது உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் அமையும். கொடுக்கல் வாங்கலில் சிறந்த முன்னேற்றம் உண்டாகும். காரிய அனுகூலம் உண்டாகும். சந்திரன் தனஸ்தானத்தில் பலம் பெற்று அமைவது. பொருளாதாரத்தில் மேன்மையை அடைவீர்கள். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உணவகம் நடத்துபவர்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடக்கும். செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து செயல்படுவீர்கள். பஞ்சமஸ்தானத்தில் ராகு இருந்து உங்களின் கர்மவினைகளை நீக்கும்படி பரிகார பூஜைகளை செய்து அதிலிருந்து விடுபட உதவி செய்வார். குலதெய்வம் தெரியாதவர்களுக்கு குலதெய்வம் தெரியவரும். புத்திர, புத்திரிகள் சந்தான விருத்திக்கு வழி கிடைக்கும்.
 
ஆறாமிடத்தில் சனி அமர்ந்து உடல் நலனில் அடிக்கடி பிரச்சனை வரும். பாதத்தில் எரிச்சல், மனஅழுத்தம் திடீர் கடன்படுதல், தேவையற்ற பகைமை உணர்வுகள் ஏற்படுதல் போன்ற அவஸ்தைகள் உண்டாகும். நினைத்த காரியம் சிறிது தடைபட்டாலும் விரைவில் நிறைவேறும். கடவுள் மீது பாரம் போட்டு உங்கள் செயலை தொடர்ந்து செய்தால் எல்லாமும் ஜெயம் உண்டாகும். இருப்பினும் சனி இருக்குமிடம் சிறப்பு என்பது போல எதிரிகளின் சூழ்ச்சிகளை தெரிந்து கொண்டு விரைவில் விடுதலை பெறுவீர்கள். குரு பார்வை சனிக்கு கிடைப்பது சனியால் வரும் துன்பம் நீங்கும் சுபிட்சம் பெறுவீர்கள்.
 
ஏழாமிட செவ்வாய் பெண்களுக்கு திருமணம் சார்ந்த முயற்சிகள்  கைகூடும். நிலம் சார்ந்த பிரச்சனைகள் சுமூகமான தீர்வு கிட்டும் அமைதியாக எல்லாவற்றையும் செய்து முடிப்பீர்கள். பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொள்வீர்கள். அட்டம ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்து அரசு உத்தியோகம், அரசு பதவிகளை பெறும் வாய்ப்பு சிலருக்கு அமையும். பாக்கியஸ்தானத்தில் பாக்கியாதிபதி புதனுடன் ராசியாதிபதி சுக்கிரன் இணைவு பெறுவது எத்தனை தடைகள் வந்தாலும் அதனை உடைத்து பலம் பெறுவீர்கள். எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். தொழில் ஸ்தானத்தில் குரு உச்சம் பெற்றிருப்பது நினைத்து காரியத்தை ஜெயிக்க வைக்கும் திறன் பெறுவீர்கள். குரு பத்தில் தனித்திருந்தால் பதவி பறிபோகும் என்பார்கள். இம்மாதம் புதன் சுக்கிரன் சேர்க்கை வரை அத்தகைய துன்பம் வராது என்றாலும் பணிபுரியுமிடத்தில் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்காமல் புரிந்து கொண்டு சகித்து கொண்டு இருந்துவிட்டால் எல்லாம் சரியாகி விடும். லாப கேது உங்களுக்கு தேவைகளுக்கு சகல வசதிகளையும் கொடுத்து உதவி செய்வார். இம்மாதம் உங்களுக்கு நல்ல மாதமாக அமையும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
வெண்மை, பச்சை, ஓரஞ்சு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
மேற்கு, வடமேற்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வெள்ளி, செவ்வாய், புதன்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
13-06-2026 சனி காலை 07.27 முதல் 15-06-2026 திங்கள் காலை 09.52 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் ராகு காலத்தில் (09.00 முதல் 10.30 வரை) நவகிரக வழிபாடு செய்து ஒன்பது நல்லெண்ணெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள தடைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.