மே மாத ராசி பலன்கள் 2026 - மீனம்
ஆழமான சிந்தனையுடன் தொடர்ந்து செயல்பட்டு வரும் மீன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு நான்கில் அமர்ந்தும் பாக்கியாதிபதி செவ்வாய் ராசியில் அமர்வதும் உங்களுக்கு எடுத்த காரியம் சிறப்பாக அமையும். தடைபட்ட காரியம் மீண்டும் செயல்படதுவங்கும். எதையும் நினைத்த கவலைபடாமல் செயல்பட நன்மை பெறுவீர்கள். பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
தன ஸ்தானத்தில் களத்திர ஸ்தானாதிபதி புதனுடன் சூரியன் இணைந்து உச்சம் பெறுவது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி தருவீர்கள். அதிக தூர பயணம் சென்று வருவீர்கள். மனசஞ்சலம் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். ஆன்மீக சிந்தனை உண்டாகும். தொழில் ரீதியான ஆலோசனைகளை பெறுவீர்கள். உங்களின் தொழில் ஸ்தானத்தை குரு பார்வை இடுவது சொந்த தொழிலில் கூடுதல் ஆதாயம் பெறுவீர்கள். அரசியலில் நல்ல ஆலோசகராக இருப்பீர்கள். வெளிநாட்டு தொடர்பு உங்களுக்கு எதிர்கால நலனுக்கு உறுதுணையாக அமையும். வளர்ச்சி பாதையில் முன்னேறி செல்வீர்கள். வெளிநாட்டு வேலை தேடுபவருக்கு நல்ல வேலை கிடைக்கும்.
சொந்த தொழில் நடத்தி வருபவருக்கு தொழிலாளர் சம்மந்தமான குறைபாடுகள் இருக்கும் நல்ல பணிக்கு வந்த சிறிது காலத்திலேயே வேலையாட்கள் வராமல் நின்று விடுவார். தொழிலாளர்களின் மீது நல்ல உள்ளம் கொண்டு அரவணைத்து செல்தல் நல்லது. பாதுகாப்பு கவசமாக உங்களுக்கு எப்பொழுதும் உங்களின் உறவினர்கள் இருப்பது உங்களுக்கு வசதியாக இருக்கும். ஆன்மீக தொண்டுகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களின் ராசியில் சனி செவ்வாய் சேர்க்கை குழப்பமான சூழ்நிலையை உருவாக்கினாலும் எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்று அறிந்து செயல்படுவீர்கள். மூன்றாமிடத்து அதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று இருப்பது உங்களின் முயற்சிக்கு நல்ல பலன் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு வளர்ச்சி கிடைக்கும். இசை கலைஞர்கள் இசையில் மேலோங்கி வளர்ச்சி பாதையில் பயணம் செய்வீர்கள். எதையும் விட்டு கொடுத்தவர் கெட்டதில்லை என்பது போல சிலருக்கு சோதனைகள் வந்து மறையும். உடல்நலனில் கவனம் செலுத்தவேண்டி வரும். பாதம், வயிறு, இடுப்பு சார்ந்த உறுப்புகளல் பாதிப்பை தரும். இறை வழிபாடு செய்து வருபவருக்கு கஷ்டங்கள் நீங்கி நன்மை உண்டாகும். சூரியன் வீட்டில் அமர்ந்த கேது வயிற்றில் பாதிப்பை தருவார் என்பதால் விநாயகர் வழிபாடு செய்து உஷ்ணத்தை குறைத்து கொள்வது நல்லது உறவுகளில் சிலருக்கு விரிசல்கள் நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் காரியத்திற்கு தடையின்றி நடக்கும். ஏழரை சனி ஜென்ம சனிமாக இருந்தாலும் கெடுபலன்கள் வராது. மாணவர்களுக்கு ஆன்மீக மகான்கள், குருமார்கள் சந்திப்பு உங்களுக்கு நன்மையை பெற்று தரும். தனஸ்தானத்தில் புதன் அமர்ந்து பணவரவையும், தேவைகளை அறிந்து வருமானத்தை கூட்டி கொள்ளும் வாய்ப்பை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், பச்சை, வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடகிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், வெள்ளி, திங்கள்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
27-05-2026 புதன் இரவு 09.24 முதல் 30-05-2026 சனி காலை 07.41 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை ராகு காலத்தில் 04.30 - 06.00 மணிக்கு நவகிரக வழிபாடு செய்து வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி எலுமிச்சை மாலை போட்டு தயிர் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள சகல தோசமும் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
கணித்தவர்:
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554
















