நவம்பர் மாத ராசி பலன்கள் - 2026 - கடகம்

நவம்பர் மாத ராசி பலன்கள் - 2026 - கடகம்

திட்டமிட்ட செயல்பாடுகள் மூலம் சகல காரியமும் செய்திடும் கடக ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சந்திரன் பன்னிரெண்டில் அமர்ந்து ஆறாமிடத்தை பார்வை இடுவது வங்கி கடன் மூலம் தொழிலை விருத்தி செய்து கொள்வீர்கள். தனஸ்தானத்தில் குரு அமர்ந்து மறைவு ஸ்தானங்களை பார்வை இடுவது முன்னேற்றமான காலமாக அமையும். எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும்.
 
உங்களின் ராசியில் யோகாதிபதியான செவ்வாய் அமர்ந்து நீசம் பெற்று பார்க்குமிடம் மூலம் உங்களுக்கு சொந்த முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மறைமுக எதிரிகளை அடையாளம் காண்பீர்கள். பேச்சில் நிதானம் இருக்கும். அதிசார குரு கேதுவுடன் இணைவு பெறுவது தொழிலிலும், உத்தியோகத்திலும் முன்னேற்றமும் ஏற்றமும் பெறுவீர்கள். 
 
அட்டம ராகு சிறு இடையுறுகளை இதுவரை செய்து வந்த நிலையில்… இனி குரு பார்வை பெறுவதால் தடைகள் நீங்கி சுபிட்சம் பெற்று முன்னேற்றம் பெறுவீர்கள். சிலருக்கு தங்க நகைகள் வாங்கும் யோகம் கிடைக்கும். தெய்வ சிந்தனைகள் உண்டாகும். சுகஸ்தானத்தில் சூரியனுடன் சுக்கிரன் இணைவு பெறுவது நீச பங்க ராஜ யோக பலன்களை பெற்று தரும். சிலருக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும்.
 
சுகஸ்தானாதிபதி சுக்கிரன் பலம் பெற்று இருப்பது கலைத்துறையினருக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். கலைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். சரியான பாதையை தெரிவு செய்து பயணம் செய்வீர்கள். உங்களின் முயற்சி மேலும் உயர்வு பெற புதனின் மூலம் நன்மையாக அடையும். எதையும் சாதித்து காட்டவேண்டுமென்று எண்ணம் அதற்கான இலக்கை நோக்கி பயணம் செய்வீர்கள். முதலீடு இல்லாத தொழில் செய்பவருக்கு குறுகிய கால நல்ல பலன்கள் பயனுள்ளதாக அமையும். 
 
எட்டாமிட ராகு குரு பார்வை பெறுவதால் தடைகள் நீக்கி நல்ல பலனைப் பெறுவீர்கள். தடைபட்ட காரியம் கைகூடும். பாக்கிய ஸ்தானத்தில் சனி அமர்ந்து லாபஸ்தானத்தை பார்வை இடுவதால் கிடைக்க கூடிய பலன்களுக்கு சில தடை ஏற்பட்டு மீண்டும் வரவு வரும். செய்யும் தொழில் அதிக கடன் தருவதை தவிர்த்து முடிந்த வரை ரொக்க பரிவர்த்தனையை ஊக்கபடுத்தவது நல்லது. நிதானமாக செயல்படுவது நன்மை தரும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
வெண்மை, சிவப்பு, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
வடக்கு, வடமேற்கு, கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வியாழன், வெள்ளி, ஞாயிறு.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
17-11-2026 செவ்வாய் பகல் 01.04 முதல் 19-11-2026 வியாழன் இரவு 09.44 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு மாலை 04.30 - 06.00 ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி செவ்வரளி பூ மாலை சாற்றி வேண்டிக் கொள்ள சகலவித காரியத்திலும் வெற்றியையும், பொருளாதார மேன்மையையும் தரும்.