ஸ்ரீ பராபவ தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - மீனம்

ஸ்ரீ பராபவ தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - மீனம்

அன்பாக அனைவரையும் அரவணைத்து கொண்டு செயல்படும் மீன ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு சுகஸ்தானத்தில் அமர்ந்து விரையஸ்தானத்தை பார்வை இடுவதும் லாப விரையஸ்தானாதிபதி சனி ஜென்ம சனியாக ராசியில் அமர்வதும் வைகாசியில் குரு பார்வை ராசிக்கு அமைவதால் ஜென்ம சனி தாக்கமின்றி உடல்நலனில் முன்னேற்றம் காண்பீர்கள். எதை செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்படி செய்வீர்கள். குறைவின்றி தொழிலில் வெற்றியை காண்பீர்கள்.
 
இந்த ஆண்டு ஏழரை சனியின் ஜென்ம சனியாக அமர்ந்து முதல் பகுதியாக லாபாதிபதியின் பலனை சனி பகவான் தருவார். செய்யும் தொழிலில் பொருளாதார தடைகள் வராது. அதே நேரத்தில் தாமதமாக வரவு வந்து சேரும். தரவேண்டிய இடத்தில் பல முறை கேட்டு பின்பு கிடைக்க பெறுவீர்கள். பல உடல் உபாதைகளிலிருந்து படிப்படியாக விடுதலை பெறுவீர்கள். ஆன்மீக தேடலில் இருப்பவருக்கு புதிய நண்பர்கள் மூலம் சில நல்ல தகவல்கள் கிடைக்க பெறுவீர்கள். இதுவரை தேடிக் கொண்டு இருந்த பல அற்புதமான விடயங்களை அறியும் வாய்ப்பை பெறுவீர்கள். செய்யும் தொழிலில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். எதை நினைத்து கவலைபட்டீர்களோ அது விரைவில் நடக்கும். எடுத்த காரியம் தடையின்றி நடக்கும் எந்த இடத்திலும் உண்மையை பேசுவதற்கு சிறிது கூட தயக்கமாட்டீர்கள். சவாலாக பல காரியங்களை நீங்களே முன்னின்று நடத்தி வெற்றி காண்பீர்கள். எந்த விடயத்தையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்காமல் தெளிவாக புரிந்து செயல்படுவீர்கள். அமைதியான சூழ்நிலையில் விருப்பம் கொள்வீர்கள்.
 
இனி ராசிநாதன் குரு ஆரம்பத்தில் சுகஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தையும், விரைய ஸ்தானத்தையும் பார்ப்பது தொழிலில் நஷ்டமின்றி சுமாராக நடக்கும். 26-05-2026 முதல் குரு பெயர்ச்சியாக கடகத்தில் உச்சம் பெற்று ராசியை பார்வை இடும்போது மிகவும் சிறப்பாக தொழிலிலும், உத்தியோகத்திலும் செயல்படுவீர்கள். திறமையான நிர்வாக கோப்புகளுடன் உங்களின் ஒவ்வொரு செயலும் தெளிவாக அமையும். குறைந்தபட்ச முதலீடுகளால் செய்யும் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையும். எடுத்த காரியத்தை முடிக்கும் வரையிலும் உங்களின் எண்ணம் வேறு செயலுக்கு வராது. கொடுத்த வாக்குறுதிகளை முழுவதும் நிறைவேற்றி விடுவீர்கள்.
 
13-11-2026 முதல் ராகு / கேது பஞ்சம ஸ்தானத்தில் கேதுவும் லாப ஸ்தானத்தில் ராகுவும் அமர்வதும் ராசிநாதன் குருவுடன் கேது இணைவு பெறுவது பெரும் பாக்கியமாக அமையும் எடுத்ததெல்லாம் நன்மையாக அமையும். லாப ஸ்தானத்தில் அமையும். வெளிநாட்டு நண்பர்கள் மூலம் விரைவில் நற்பலன்களையும். ஆதரவையும் பெற்று தொழிலில் சாதகமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வீர்கள். அடிக்கடி வெளியூர் சென்றுவர வேண்டியவரும். மாணவர்களுக்கு கல்வி பயில உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். ஆன்மீக சேவைகளை செய்வீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு,
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
1, 3, 9.
 
பரிகாரங்கள்:
 
அரசமர விநாயகரையும், வன்னி மரத்தையும் ஒன்பது முறை சுற்றி வந்து எருக்கம் பூ மாலை சாற்றி தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள நினைத்த காரியம் கைகூடும் உங்களின் தொழிலில் வளம் பெறுவீர்கள்.
 
கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554