சகோதரர் அலோசிஸ் தெய்சே
நம்பிக்கையின் ஊற்றிலிருந்து பெற்றுக்கொள்வதற்காக கொல்கத்தாவில் நாம் அனைவரும் கூடியிருக்கின்றோம். உலகின் பல பாகங்களில் வன்முறையானது தலைவிரித்து ஆடினாலும் நற்செய்தியின் நம்பிக்கையில் நாம் நமது வாழ்க்கைகளை அமைத்துக்கொள்ள முயல்கிறோம். இந்த நம்பிக்கையை நாம் உருவாக்கவில்லை. தமது இன்னுயிரைக் தந்து மரணத்திலிருந்து உயிர்த்த கிறிஸ்துவிடமிருந்து அது வந்தது.
புனித சின்னப்பர் கூறுகின்றார் கடவுளுடைய அன்பானது தூய ஆவியினால் நமது இதயங்களுக்குள் ஊற்றப்படுகின்றது. இந்த நம்பிக்கை நம்மை ஏமாற்றாது என்கிறார். எனவே நாம் இந்த நம்பிக்கையை மற்றவர்களுக்கும் சொல்ல முடியும்.
இந்த உலகின் பெரும் மாற்றங்கள் எல்லாம் ஒவ்வொரு மனிதனின் மனமாற்றத்தின் மூலமாகவே உருவாக்கப்படுகின்றது. மாற்றுவது என்றால், நமக்குள் அன்பை நோக்கி இல்லாத அனைத்தையும் மாற்றியமைப்பதுதான். இதில் முக்கியமானது என்னவெனில் நமது தேர்வுதான் நம்பிக்கையை தேர்ந்தெடுப்பது, அன்பு செய்வதை தேர்ந்தெடுப்பது.
இந்தப் பாதையில் ஒன்றன் பின் ஒன்றான புதிய தொடக்கங்களுக்குச் செய்கின்றோம். கடவுள் நம்மை தேர்ந்தெடுத்திருக்கின்றார். கடவுள் நம் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்திருக்கின்றார். அவர் நம்மிடம் சொல்கின்றார் பயப்படாதே! உன்னை நான் பெயர் சொல்லி அழைத்திருக்கின்றேன்;. எனது பார்வைக்கு நீ பிரத்யேகமானவன். நான் உன்னை நேசிக்கின்றேன். சில வாரங்களுக்கு முன் நேசேயில், ஹைடியில் இருந்து வந்திருந்த மூன்று பேரை சந்தித்தேன். வறுமையின் உச்சத்தில் வாழும் நாட்டிலிருந்து வந்துள்ள அவர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்கின்றார்கள் என்பதை அறிந்தேன். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம், எதிர்காலம் முடக்கப்பட்ட பலர் வாழும் அந்நாட்டில் நம்பிக்கையைப் பரப்புகின்றனர்.
சகோதரர் ரோஜரும் அவருடன் எங்களில் சிலரும் அந்நாட்டில் கழித்த காலம் அப்போதுதான் நினைவுக்கு வந்தது. நான் அங்கு இரண்டு விஷயங்களை கண்டறிந்தேன். அவை என் நினைவில் இன்னமும் பசுமையாக உள்ளன. அங்கு ஞாயிறு திருப்பலி என்பது மிகவும் சந்தோஷமான விழாவாக அனுசரிக்கப்படுகின்றது. அவர்களது கடுமையான வறுமைக்குள்ளும் - சிலருக்கு உண்பதற்கு கூட எதுவும் இருக்காது – அந்த நிலையிலும் ஞாயிறு திருப்பலி ஒரு கொண்டாட்டமாகவே இருக்கின்றது. அந்த சந்தோஷம் எல்லாரையும் தொற்றிக் கொண்டது.
இனி அடுத்த கண்டுபிடிப்பு. எங்களுடைய வருகை அவர்களால் பெரிதும் உணரப்பட்டது. அவர்களுக்கு பண ரீதியாக எங்களால் அதிகம் உதவ முடியவில்லை. அவர்களுக்கு நிதி தேவைகள் அதிகம் இருந்தன. இருந்த போதிலும் நேரடியான எங்கள் பிரசன்னம் அவர்களுக்குத் தந்ததை பணம் பதிலீடு செய்யாது என்பதை தெரிந்து கொண்டேன்.
எனவே நாமும் மற்றவர்களிடம் போகத் துணிவோம் நம் கைகள் வெறுமையாக இருந்தாலும் பரவாயில்லை. சில சமயங்களில் நெடுந்தூரம் செல்ல வேண்டியிருக்கும் ஆனால் நம்மை நெருங்கியிருப்பவர்களிடமும் நாம் செல்ல வேண்டும். நம்மிடம் உடனடியாக தீர்வுகள் இல்லாத போதும் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லாத போதும் செல்லவேண்டு;;ம். நாம் அவர்களிடம் இருப்பதே அவர்களது வலியை வருத்தத்தைக் குறைக்கும். நம்பிக்கை உணர்வை ஊட்டும்.
உலகம் முழுவதும் நமது சமூகங்கள்; மிகவும் நவீனமானவைகளாக மாறிவருகின்றன. இருந்த போதிலும் மிக அதிக அளவில் வறுமை உள்ளது. மிகப்பெரிய பிரச்சனைகளைப் பார்க்கும் போது ஒரு வித விரக்கியுணர்வு தோன்றக் கூடும். ஆனால் இந்நாட்களில் நாம் நம்பிக்கை சின்னங்கள் நோக்கி நமது பார்வையைத் திருப்பியிருக்கின்றோம். மிக மோசமான மனித துயரங்களிலும் கூட நம்பிக்கை நிலவுவதை நம்மால் பார்க்க முடிகின்றது. தீமையை விட கடவுள் வலிமையானவர், அவர் களத்தில் இருக்கிறார். அவர் புதிய ஒன்றை உருவாக்குகின்றார் என நம்புகிறவர்கள் மத்தியில் அந்த நம்பிக்கை பரவுகின்றது.
நம்பிக்கை என்பது எளிதான வார்த்தை அல்ல. இந்த வார்த்தையில் ஒரு விண்ணப்பம் இருப்பதைக் காணலாம். நமது வாழ்க்கையை துறக்க, துணிச்சலான முடிவுகள் எடுக்க, சிரமங்கள் இல்லாத வாழ்க்கைக்காக காத்திருப்பதை நற்செய்தி சொல்லும் நம்பிக்கை சொல்வதில்லை. மாறாக நாம் இந்த கஷ்டமான தருணங்களை கடந்து செல்வோம் என்கிற நம்பிக்கையையும் தீமையை எதிர்கொள்ளவும்தான் கற்றுக் கொடுக்கின்றது.
நாம் எங்கிருந்த போதிலும், இது நம் எல்லாருக்குமான உண்மையாக உள்ளது. கடினமான சூழ்நிலைகளைக் கண்டு பயந்திட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி பயப்பட வேண்டாம். கடவுள் அவரோடு கூட நம்மை படைப்பாளியாக்கியுள்ளார், நம்மிடம் கொஞ்சம் செல்வங்கள் இருந்த போதிலும், ஏசு கிறிஸ்து எழையாக, ஏழைகளுக்கு மத்தியில் பிறந்தார். அவரே சிக்கலான தருனங்களில் கூட அவற்றை சந்திக்கும் தைரியத்தைக் கொடுக்கிறார். நமது வாழ்க்கையை நம்பிக்கையின் வாழ்க்கையாக வாழ அவர் கட்டளையிடுகின்றார்.
புனித சின்னப்பர் எழுதுகிறார். “அந்த எதிர்நோக்கு ஒரு போதும் ஏமற்றம் தராது.” ஏனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியால் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது (உரோமையர் 5.5)
நம்பிக்கையை அன்பு செய்வதை தேர்ந்தெடுப்பது என்பதற்கு என்னை பொறுத்த அளவில் என்ன அர்த்தம்
இந்த நவின உலகில் வறுமை ஒழியவில்லை. அதிகமாக கண்டுகொள்ளப்படாதவர்களை மறைந்துவிடாமலிருக்க நாம் என்ன செய்ய போகிறோம். வறுமையை ஒழிக்க நம்முடைய பங்களிப்பு என்ன?
நம்மிடம் உடனடி தீர்வுகள் இல்லையென்றாலும், வார்த்தைகளேயின்றி இருந்தாலும், நம்முடைய பிரசன்னமே வலிமையும், வருத்தத்தையும் குறைக்கும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நான் எங்கு என்னுடைய பிரசன்னத்தை கொடுக்கப் போகிறேன்?
இந்நாட்களில் எத்தகைய நம்பிக்கை ஒளியை – சின்னங்களை நாம் காண்கின்றோம்? அவை நமக்கு நமது பங்கு உறுப்பினர்களுக்கு எத்தகைய நம்பிக்கையை அவை ஊட்டுகின்றன?
சமாதானத்திற்கான வழிகளைத் தயாரிப்பதற்காக நாம் இங்கு கூடியிருக்கின்றோம். ஆனால் உலகின் அநேக பகுதிகளில் வாழும் மக்கள் அநிதிகளையும், சிக்கலான தருணங்களையும் அனுபவித்து வருகின்றனர். வன்முறையை நாம் எவ்வாறு சமாதானம் மூலம் எதிர்கொள்வது? குழந்தைகளுக்கு அமைதியான எதிர்காலத்தை எப்படி உருவாக்குவது? நமது வலிகளை, வேதனைகளை புதிய தலைமுறைக்கு கடத்தாமல் இருப்பது எப்படி?
தீர்க்க தரிசியான எரேமியாவின் வார்த்தைகளைக் கேட்பது மிகவும் முக்கியமானது. எதிர்காலச் சமாதனத்துக்காக கடவுள் உன்னை தயரிக்கின்றார். கடவுள்; ஒருவனே சமாதானத்தைக் கொடுக்கிறார். நாம் முதலில் அதைப் பெறவேண்டும், அப்போதுதான்; பிறருக்கு அதை பரிமாற்றம் செய்ய முடியும். நமது இருப்பின் அடியாழத்தில் சமாதானத்தைப் பெற வேண்டும்.
இறைவன் கொடுக்கும் சமாதானமானது நமது இதயத்தில் தொடங்குகின்றது. அது நமது வாழ்க்கையையே மாற்றியமைக்கக் கூடியது. ஆழ்மன சமாதானம் என்பது நாம் மனதுக்குள் உருவாக்கும் ஒரு உணர்வு அல்ல. உயிர்த்தெழுந்த கடவுள் நம்மை நேசிக்கும் அவரின் பிரசன்னத்தின் வழியாக நமது இதயத்திற்குள் சமாதானம் பிறக்கின்றது. அவர் வன்முறையை, வெறுப்பை, மரணத்தைக் கடந்து சென்றவர். அவர் சொன்னார் உங்களுடன் சமாதானம் இருப்பதாக என்று. இவ்வார்த்தைகள் நம்முள்ளத்தில் எதிர்ரெலித்துக் கொண்டிருப்பது நல்லது.
கிறிஸ்துவே நமது சமாதானம். எனவே சமாதானத்தின் வழியில் துணிச்சலான முடிவுகள் எடுத்து அவரை பின்பற்றி செல்வது என்பது நமது கையில்தான் உள்ளது. நம்மால் செய்யக் கூடியதெல்லாம் சின்ன விஷயங்களே ஆனாலும் அவற்றை நாம் செய்தாக வேண்டும். பிரமாண்டமான செபங்கள் உலகை மாற்றி அமைப்பதில்லை. மாறாக மானுடத்தின் நல்ல தன்மையை தினம் தினம் தொடர்ந்து காப்பாற்றி உருவாக்குவதினாலேயே அது நிகழ்கின்றது.
நமது திருச்சபையில், நமது இளைஞர் குழுக்களும்;. பங்குகளும், அமைப்புகளும் மனம் நிறைந்த நல்லெண்ணத்திற்கும் மன்னிக்கும் குணத்திற்கும் தலையாய இடங்களாக விளங்க வேண்டும். அவை நாம் ஒருவரை ஒருவர் வரவேற்கும், ஆதரவு தரும் இடங்களாக பலவீனமானவர்களிடம் அக்கறை செலுத்தும் இடங்களாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அது எவ்வளவு சந்தோஷத்தைத்; தரும்.
அண்மையில் நிகழ்ந்த மத்திய கிழக்கு சிக்கலின் போது லெபனான் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத் தலைவர் எங்களுக்கு இவ்வாறு எழுதினார். சமாதான இதயம். இது சகோதரர் ரோஜர் மற்றும் தேசேயை சார்ந்த சகோதரர்களுக்கு பிடித்தமான ஒரு விஷயம். அது சாத்தியமே. சமாதான இதயம் என்பது கற்பனை இல்லை. இந்த துன்பங்களுக்கு மத்தியில் வெறுப்பானது நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் சூழ்நிலையில், எங்கள் பலவீனமான தருணங்களில் பழிதீர்க்கும் ஆர்வம் எங்களை சூழ்ந்து கொள்ளும் நிலையிலும், சமாதானத்தை நான் நம்புகின்றேன்.
சமாதானத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதற்கான வழிகளைப் பொறுத்தமட்டில் கிறிஸ்கவர்கள் பிரத்தியேகமான ஒன்றைப் பெற்றிருக்கின்றனர். திருச்சபையின் திருப்பலிதான் அது. கிறிஸ்துவை பின்பற்றுபவர்களை ஒன்றிணைப்பதோடு மனித குடும்பங்களில் சமாதானத்தின் பெருங்கொடையாக அது திகழ்கின்றது.
கிறிஸ்தவர்களிடையேயான ஒன்றிணைப்புதான் நற்செய்திக்கு நம்பகத்தன்மையைக் கொடுக்கின்றது. கடவுளின் வார்த்தைக்கு உயிர்கொடுக்கின்றது. மக்கள் மத்தியில் அதைப் பேச வைக்கின்றது. வன்முறை கையோங்கியிருக்கும் இவ்வுலகில், மிக கஷ்டமான தருணங்களிலும் இந்த ஒன்றிணைப்பு அந்த கடினமான சூழ்நிலைகளையும் மீறி நிற்க உதவும் பிரகாசமான சின்னமாக விளங்குகின்றது.
கிறிஸ்தவர்களுக்கு இடையேயான ஒற்றுமை தானாக வருவது அல்ல. நாம் ஒவ்வொருவர்களுக்குமான மன்னித்தலில் வாழ வேண்டுமெனில் ஒவ்வொரு முறையும் நாம் அதை திரும்ப தொடங்க வேண்டும்.
நாம் கிறிஸ்துவை நோக்குகையில் பொதுவான, செபத்திற்காக நாம் அனைவரும் கூற வரும் போது அவர் நம்மை இணைக்கிறார். செபத்தின் போது நாம் ஒருவருக்கொருவர் சொந்தமானவர் என்பதை தொடர்ந்து ஏற்றுக் கொள்கின்றோம் தாழ்மையுடன்.
முன்பெல்லாவற்றையும் விட இன்று மனிதர்கள், இனங்கள், தலைமுறைகளைப் பிரிக்கும் தடைகளைக் கடந்து ஒருமித்து வாழும் சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. ஆம் எதிர்காலத்தில் உலகில் சமாதானத்தை உருவாக்க நம்மமால் முடியும்! கடவுள் நமது சுவாசத்தை, ஆவியைக் கொடுக்கிறார் எனவே நமது வாழ்க்கையின் மூலம் சமாதானத்தின் சாட்சிகளாக விளங்க முடியும்.
ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர். நீங்கள் என்னிடம் வந்து கூக்குரலிட்டு மன்றாடுவீர்கள்! அப்;பொழுது நான் உங்களுக்கு செவி கொடுப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள், உங்கள் முழு இதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது நீங்கள் என்னை கண்டடைவீர்கள். ஆம், நீங்கள் என்னைக் கண்டடைவீர்கள், என்கிறார் ஆண்டவர். அடிமைத்தனத்தினின்று உங்களை விரட்டியடித்துள்ள எல்லா மக்களினங்களினின்றும், இடங்களினின்றும் கூட்டிச் சேர்ப்பேன், என்கிறார் ஆண்டவர். எந்த இடத்தினின்று உங்களை நான் நாடுகடத்தினேனோ அந்த இடத்திற்கே உங்களைத் திருப்பக் கொண்டு வருவேன். (எரேமியா 29: 11-14)
எத்தகைய அநீதிகளை சிக்கல் மிகுந்த தருணங்களில் நாம் அறிந்திருக்கின்றோம்? அவற்றால் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறோம்?
சமாதானத்தை காட்டுவதற்கான நமது அனுபவங்கள் என்னென்ன (நண்பர்கள் மத்தியில் (நமது பங்குகளில், கிராமங்களில், நகரங்களில்…) எத்தகைய இடர்பாடுகளை நாம் எதிர்கொண்டோம்? என்ன விஷயங்களை நாம் புதிதாக கண்டறிந்தோம்?
“வன்முறையும் வெறுப்பும் கையோங்கியுள்ள இன்றைய உலகில் நம்முனைய ஒன்றினைப்பு மூலம் நாம் ஒரு சின்னத்தைத் தருவோம் அது நமது கடினமான சூழல்களிலும் ஒளி வீசி பிரகாசிக்கும்” நாம் வாழும் இடங்களில் இந்த ஒன்றினைப்பு நிஜமாக எத்தகைய முதற்படிகளை நாம் எடுக்கமுடியும்?
நம்பிக்கைக்கான புனித பயணத்தில் கலந்து கொள்வதற்காகவே கல்கத்தாவிற்கு வந்தோம் என்பதை நேற்றே உங்களிடம் கூறினேன். எந்தவிதமான நம்பிக்கையைப்பற்றி நாம் பேசப்போகின்றோம்? கடவுள் மீதும் மற்றவர்கள் மீதும் வைக்கும் நம்பிக்கை பற்றியது அது.
கடவுள் மீது நம்பிக்கை வைக்கும், கடவுள் சொல்வதைக் கேட்கும், கடவுளினால் தொடப்பட்டு மாற்றப்படும் இதயத்தை அவருடன் மிகவும் நெருக்கமாக உள்ள இதயத்தைத் கொடுக்கும்படி தூய ஆவியிடம் நாங்கள் கேட்கிறோம்.
கடவுள் எங்கள் இதயங்களுடன் பேசுகின்றார், செபங்களின் போது எங்களையே நாங்கள் அவர் முன் வைக்கின்றோம். நாம் எப்படி இருக்கின்றோமோ அப்படியே நமது நல்ல விஷயங்களோடு கூடவே, நமது இருளான பகுதிகளோடும் நாம் நமது மனித தனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் ஏழ்மையானவர்கள் என்பதை ஏற்கவேண்டும்.
சில சமயங்களில் நாம் ஒரு சில வார்த்தைகளை மட்டுமே சொல்கிறோம், சில சமயங்களில் அவர் முன் நம்மை சமர்ப்பிக்கின்றோம். சகோதரர் ரோஜர் கூறுவார், “சிறு பெருமூச்சு கூட செபமாகலாம்” என்று.
உருமாற்றமும், மனமாற்றமும் செபத்தின் மூலமாக நமக்கு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இருளானது தூய ஆவியின் பிரசன்னத்தினால் ஒளியாக்கப்படும். நமது பலவீனங்கள் மற்றும் குறைபாடுகள் எனும்; கதவுகள் வழிதான் கடவுள் நமக்குள் நுழைகிறார். பாதைக்கு தடைபோட்ட முட்கள் எரிவதன் மூலம் நமது பாதைக்கு ஒளி ஏற்படுகின்றது.
நமது செபங்களில் சில சமயங்களில் அர்த்தங்களுக்குப் பதில் வெறுமையே இருந்தாலும் கடவுளுடனான நெருக்கம் புதுப்பிக்கப்படுகின்றது. நீண்ட நெடு நேரம் செபம் செய்ய வேண்டும் என நாம் கோரப்படவில்லை. ஆனால் ஏதாவது ஒரு விதத்தில் கடவுளை நோக்கி நாம் திரும்புவோம்.
நாம் கடவுளின் மீது அதிக நம்பிக்கை வைக்கும்போது நம்பிக்கையான மனித உறவுகளை உருவாக்க முடியும் என்பதை இதன் மூலம் கண்டறிவோம்.
நம்பிக்கையின் புனித பயணத்தை உலகின் பல நாடுகளிலுமிருந்து வந்திருக்கும் இளைஞர்களுடன்; தொடரும் போது மனிதர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர், விதிவிலக்குகள் இன்றி கடவுளானவர் எல்லோருடனும் இணைக்கப்பட்டிருக்கின்றார் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. கிறிஸ்தவர்களுடன் நாம் உறவுகளை உருவாக்கிக் கொள்ளும் அதே நேரத்தில், நம்முடைய மத நம்பிக்கைகளை புரிந்து கொள்ளாத பிறருடனும் நாம் நமது நம்பிக்கையை விரிவு படுத்திக்கொள்ளும் வழிகளை எதிர் நோக்கியிருக்கின்றோம்.
எல்லாருக்கும், இன்னமும் அதிகமாக வெளியில் தெரியும் வண்ணம் தங்கள் நம்பிக்கையை வெளிக்காட்டுவதற்கு உலகமெங்கிலும் பரவியுள்ள இளைஞர்கள் விரும்புகின்றார்கள். வெறுப்பு மற்றும் அக்கறைகாட்டாமை போன்ற குணங்களுக்கு அப்பாற்பட்டு இருப்பவர்களைப் போலாகிவிடுவோமா எனும் கேள்வியை அவர்கள் எழுப்புகின்றார்கள். இத்தகைய வெறுப்பின் சுவர்கள் மக்களுக்கு இடையில், கண்டங்களுக்கு இடையில், அவ்வளவு ஏன் நம் ஒவ்வொரு நபர்களுக்கும் அருகாமையிலேயே நமது இதயங்களிலேயே கூட ஏற்பட்டு வருகின்றன. கடவுள் நம்மை சுதந்திரமானவர்களாக, பொறுப்புள்ளவர்களாக உருவாக்கினார். தூய ஆவியின் மூலம் அவர் நமக்குள் வாழ்கிறார். ஆனால் அவர் நம்முடைய இருதயத்தை எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக கடவுள் நமக்குள் படைப்பாற்றலை தூண்டுகின்றார். பொறுப்புணர்வை வலுப்படுத்துகின்றார். நம்மைச் சுற்றி நிகழ்பவைகளைப் புரிந்து கொள்ளும் தெளிவான பார்வையையும், தைரியத்தையும் அளிக்கின்றார்.
சமீபத்தில் நான் இரண்டு சகோதரர்களுடன்; ரஷ்யா சென்றிருந்தேன். கடந்த நூற்றாண்டு முழுவதும் அவர்கள் அனுபவித்த சொல்லெணா துயரத்தை இப்போதும் அந்தச் சமுகத்தில் பார்க்க முடிகின்றது. ரஷ்யாவில் நான் ஒன்றைப் புரிந்து கொண்டேன். எது அவர்களை எதிர்த்து நிற்கச் செய்தது; கொடுமையான காலங்களைக் கடக்க உதவிசெய்தது என்றால் அது இறைவன்; மீது அவர்கள் வைத்த நம்பிக்கைதான். ரஷ்யாவில் உள்ள இறைபற்றாளர்களுக்கு இறைவனில் நம்பிக்கை என்பது மானுடத்தின் நல்ல தன்மை மீது நம்பிக்கை வைப்பதோடு பிரிக்கவியலாத வகையில் இணைக்கப்பட்டிருக்கிறது. நன்மையின் மீதான நம்பிக்கை தீமையை விட வலிமையானது. அவர்களைப் போலவே நாமும் சூழ்நிலைகள் மிகவும் கடுமையானதாக மாறும்போது இந்த உலகில் நம்பிக்கை கொண்ட மனிதர்களாக மாறுவதற்காக அழைக்கப்பட்டுள்ளோம். நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் இந்நாட்களில் இயேசுவின் உவமைகளுள் ஒன்று நிருபணமாகியுள்ளது. கடவுள் திருச்சபையானது ஒரு பெரிய மரம் போன்றது நான்கு திசைகளையும் சார்ந்த மக்கள் அதற்குள் வரவேற்கப்படுவார்கள் என்பதுதான் அது.
மேலும் அவர் இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம். அது கடுகு விதைக்கு ஒப்பாகும்;. அது நிலத்தில் விதைக்கப்படும்போது உலகிலுள்ள எல்லா விதைகளையும் விட சிறியது. அது விதைக்கப்பட்டவுடன் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விட பெரிதாகி வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்கு பெருங்கிளைகளை விடும் என்றார். (மாற்கு 4:30-32)
நம்பிக்கையின் உறவுகளை எப்படி உருவாக்கமுடியும்? வெறுப்பு மற்றும் கண்டு கொள்ளாத தனத்தை எப்படி எதிர்கொள்ளமுடியும்.
மனித நல்லுணர்வு நீமையைவிட சக்தி வாய்ந்தது என்பதை எப்போதாவது எனது வாழ்கையில் கண்டிருக்கின்றேனா?
இறைவன் எந்த பேதமின்றி அனைத்து மனிதரையும் இணைத்துள்ளார். திருச்சபையானது நான்கு புறங்களிலிருந்து வரும் மக்களை வரவேற்கும் மரம் போளுள்ளது. நம்முடைய தினசரி வாழ்க்கையில் கடவுள் கொடுத்த ஒற்றுமையை எங்கு காண்கிறோம். நம்முடைய வாழ்க்கையிலும், பங்குகளிலும் மற்றவர்களை எப்படி நம்மால் வரவேற்க முடியும்.