ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - மகரம்

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - மகரம்

மன உறுதியும், பிறருக்கு உதவி செய்யும் குணமும் கொண்ட மகர ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஏழரை சனி முடிவுக்கு வருவதும், ஆறாமிடத்து குரு ஆரம்பத்தில் சில சிக்கல்களை தந்தாலும், மே முதல் குரு பார்வை ராசிக்கு வருவதும் உங்களின் வளர்ச்சிக்கு இனி உறுதுணையாக அமையும். எதை செய்தாலும் அதில் உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் படியான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வீர்கள். திட்டமிட்ட காரியங்களை சரியாக செய்து முடிப்பீர்கள்.
 
ராசிநாதன் சனி வரும் 06.03.2026 முதல் மீனத்திற்கு செல்வது உங்களின் முயற்சிகளுக்கு பக்கபலமாக அமையும். எடுத்த காரியம் துலங்கும். சொன்னபடி சில நேரம் நடக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும். ராகு ஆண்டு இறுதியில் ராசியில் வந்து அமர்வதும் குருவுடன் கேது அமர்வதும் உங்களின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். தனஸ்தானத்தில் ஆரம்பத்தில் இருந்து வந்த ராகுவால் பொருளாதார தடையும், திருமண தடையும் உண்டாகும். குரு பார்வை பெற்றவுடன் திருமண தடை நீங்கும்.
 
வரும் 26.05.2026 முதல் குரு கடகத்தில் உச்சம் பெற்று அமர்வதும் ராசியை பார்வை இடுவதும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். இனி உங்களின் கொள்கைகளை தீர்மானித்து அதன்படி நடந்தால் எல்லாம் நன்மையாக அமையும். குரு பார்க்க கோடி நன்மை என்பது போல உங்களுக்கு குரு பார்வையால் எடுத்த காரியம் வெற்றியை தரும். யாரையும் நம்பிகொண்டிருக்காமல் உங்களின் வளர்ச்சி பாதையை உருவாக்கி கொள்வீர்கள். பொது விடயங்களில் உங்களின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும். கலைதுறையினருக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும். தொழிலாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கும். சரியான வழிபாட்டை தெரிவு செய்து நல்ல பலனை அடைவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
மஞ்சள், நீலம், வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
தெற்கு, தென் கிழக்கு, வடக்கு.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
8, 3, 6.
 
அதிர்ஷ்ட மாதம்:
 
மார்ச், ஜுன், செப்டம்பர், நவம்பர்.
 
பரிகாரங்கள்:
 
ஞாயிறு மாலை ராகு காலத்தில் (04.30 - 06.00) நவகிரக வழிபாடு செய்வதும். பைரவருக்கு அரளி பூ மாலையும் தயிர் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள வெற்றியை முழுமையாக அடைவீர்கள்.