சனி பெயர்ச்சி பலன்கள் - 2026 - கடகம்
காலத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி பணியாற்றும் கடக ராசி வாசகர்களே!
உங்களி்ன் ராசிக்கு களத்திர ஸ்தானாதிபதியும், அட்டம் ஸ்தானாதிபதியுமான சனி பகவான் ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து லாபஸ்தானத்தையும், முயற்சி ஸ்தானத்தையும், சத்ரு (ஆறு) ஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் எதிர்கால நலன்களில் பல்வேறு சோதனைகளை சாதனைகளாக மாற்றி அமைக்கும் காலமாக இனி அமையும். எதையும் முன்கூட்டியே அறிவீர்கள்.
உங்களின் ராசிக்கு இதுவரை அட்டம சனியாக இருந்து பல தோல்விகளையும் அவமானமும் அடைந்தீர்கள். இனி அதிலிருந்து விடுபட்டு, சனி பாக்கியஸ்தானத்தில் அமர்வதும் நட்பான நல்ல பலன்களை பெறுவீர்கள். வாகன வசதிகளையும், வாகனம் மூலம் ஆதாயம் பெறுவதும், முதலீடுகள் குறைவாக இருந்தாலும் உங்களுக்கு அதில் நல்ல லாபம் கிடைக்கும்படியான சூழ்நிலைகளும் இனி அமையும்.
சோதனைகளை வென்று நல்ல நிலைக்கு வரும் வாய்ப்புகள் அமையும். அரசியலிலும், பொதுவான விடயங்களிலும் நீங்கள் எண்ணியபடி பல காரியம் சித்தியாகும். வரவுக்குள் செலவு செய்வதும் ஜென்ம குரு வரும் போது ஆன்மீகத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பித்ருகளுக்கு செய்ய வேண்டிய கடன் நிவர்த்தியாகும் வாய்ப்பையும் பெறுவீர்கள். கலைதுறையினருக்கு புதிய வாய்ப்புகள் பெற்று விரைவில் பிரபலமாவீர்கள். தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம், பதவி உயர்வு கிடைத்து மேன்மை பெறுவீர்கள். சாமானியர் கூட இனி உங்களிடம் தொடர்பு கொண்டு வாழ்வில் முன்னேற அறிவுரைகளை பெறுவார்கள். உங்களின் முயற்சி மிகவும் சிறப்பாக அமையும்.
பாக்கியஸ்தானத்தில் எந்த கிரகம் அமர்ந்து இருந்தாலும் கெடு பலன்களை தருவீர்கள். அது போல சனி பகவான் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார். ஓராண்டு முழுவதும் குரு சனியை பார்க்கும் காலம் உங்களின் சகல காரியமும் வெற்றி தரும்.
பரிகாரங்கள்:
சனிக்கிழமைகளில் விநாயகர் வழிபாடு செய்து அருகம்புல் மாலை சாற்றி தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி எள் கலந்த அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள எல்லா காரியம் திறம்பட நடக்கும். பொருளாதாரம் பெருகும்.
















