திருக்கோஷ்டியூர் திவ்ய திருத்தலம்!

திருக்கோஷ்டியூர் திவ்ய திருத்தலம்!

அருள்மிகு சௌமிய நாராயணப் பெருமாள் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது. நரசிம்ம அவதாரம் தோன்ற காரணமாயின் 3ம்-4ம் அவதாரத்திற்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. காசி அரசன் புதன் மகன் புரூரவஷ் சக்கரவர்த்தியால் அஷ்டாங்க திவ்யவிமானம் கட்டப்பட்டது. இதன் மண்டபங்கள் பிற்கால பாண்டியர்கள், வானதிராயர்கள், தஞ்சை நாயக்கர்களால் கட்டப்பட்டவை ஏகாதசி மண்டபம் நகரத்தார்களால் கட்டப்பட்டது.

 
சிறப்பு: இத்திருத்தலம் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தின் புருஷஷசூக்ததில் விளங்கியபடி பரமபதம், அந்தர்யாமித்துவம், வியூக அவதாரம், விபவ அவதாரம் ஆகிய திருமேனிகளை அர்ச்சை திருமேனிகளாகக் கொண்டு கூத்தாடியும், கிடந்தும் நின்றும், இருந்தும் ஆச்சார்ய வைபத்துடன் அஷ்டாங்க தின்பவிமானத்தில் சிறந்து விளங்குகிறது. கருவறையில் கதம்பமுனி, காசிராஜன் மதுனகடபர், இந்திரன் ஆகியோர்களடன் பெருமாள் காட்சி தருகிறார்.
 
வரலாறு - ஹிரண்யவதம் நிகழும் பொருட்டு அசுரன் உட்புகாத கதம்ப மகரிஷியின் ஆச்சிரம பகுதியில் தேவரும், மூவரும் கோஷ்டியாக அசுரவதத்திற்கு இயைந்த அவதாரம் இறைவன் மேற்கொள்ள ஆலோசித்த திவ்யதேசம்.
 
ஆச்சார்ய பிரவாபம் - ஸ்ரீ ராமானுஜப் பெருந்தகை திருக்கோட்டியூர் நம்பிகளிடத்தில் 18 முறை வருகை தந்து, திருமந்திர உபதேசம் பெற்று மனிதன இனம் உய்யும் பொருட்டு உயர்ந்த கோபுரத்தின் நின்று மக்கள் அனைவருக்கும் உபதேசம் செய்த திவ்யதேசம். செல்வநம்பிகள் வாழ்ந்த திருத்தலம் பாண்டியன் அவையில் பரத்துவ நிர்ணயம் செய்யப் பெற்ற திருத்தலம்.
 
ஆண்டாள் இத்திருத்தல கண்ணனையே ஆய்ப்பாடிக் கண்ணனாக, தான் கோபியராக இந்த ஊரே ஆய்ப்பாடியாக பாடி பரவிய தலம்.
 
மாசி பௌர்ணமி தெப்பத் திருவிழா இங்கு மிகவும் பிரசித்த்தி பெற்றதாகும். இங்கு பக்தர்கள் விளக்கேற்றி பிரார்த்தனை மேற்கொள்வார்கள்.
 
தலைஅமைவிடம் தமிழ்நாட்டில் திருப்பத்தூர் சிவகங்கை பேருந்து மார்க்கத்தில் திருப்புத்தூரிலிருந்து 10 கி.மீ. தென்மேற்கே உள்ளது.
 
- S.L.S. பழனியப்பன்.