ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் - 2026 - தனுசு
எதையும் சாதிக்கும் மனவலிமை கொண்டு செயல்படும் தனுசு ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் அட்டம ஸ்தானத்தில் அமர்ந்து விரைய ஸ்தானத்தையும், தனஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் பொருளாதார நிலை மேன்மை அடையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிரமம் கொள்வீர்கள். அர்த்தாஷ்ட சனி நடந்தாலும் குருவின் பார்வையால் சனியின் தாக்கம் இருக்காது. உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைக்கும். சொல்லிலும் செயலிலும் வல்லமை பெற்ற உங்களுக்கு தனி திறமைகளும் எழுச்சியான மனநிலையும் கொண்டு விளங்குவீர்கள். தேவைகள் நிறைவேறும் காலம்.
அட்டமாதிபதி மூன்றில் ராகுவுடன் இணைவு பெற்று இருப்பது உங்களின் விடாமுயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். புதிய முயற்சிகள் இருந்தாலும் அதற்கு தற்சமயம் சிறு தடை வரும். இனி உங்களின் வாழ்க்கை சூழ்நிலைகளை மாற்றிக் கொள்வீர்கள். சரியான பாதையை தெரிவு செய்து அதில் பயணம் செய்வீர்கள். உங்களுக்கு பலன் கிடைக்கிறதோ இல்லையோ உங்களை சார்ந்தவர்களுக்கு உங்களால் நற்பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
போட்டி போட்டுக் கொண்டு செயல்படுவது உங்களின் கொள்கையல்ல. எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். தர்ம சிந்தனையும் விட்டுக் கொடுக்கும் மன பான்மையும் உங்களுக்கு பழகிப்போன விடயம். அர்த்தாஷ்டம சனியாக இருந்தாலும் ராசிநாதன் குருவின் பார்வை இருப்பதால் பெரிய பாதிப்பை தரமாட்டார். உழைப்பு இருக்கும். உழைப்பிற்கு தகுந்த ஊதியம் இருக்கும். மற்றவரை போல சோம்பேறிதனமாக இருக்கமாட்டீர்கள். சுறுசுறுப்பாய் இருப்பீர்கள்.
விரைய ஸ்தானாதிபதி செவ்வாய் ஆறில் அமர்ந்து ராசியை பார்வை இடுவது உங்களுக்கு மன துணிச்சலையும் எம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் வெற்றியையும் பெற்று தரும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். உங்களின் யோகாதிபதி சூரியன் எட்டில் மறைவு பெற்றாலும் ராசிநாதனுடன் இணைவு பெற்று பலம் பெறுவது அரசியலிலும், உத்தியோகத்திலும் நல்ல மதிப்பை பெறுவீர்கள். உங்களின் பேச்சை கேட்க சிலர் உங்களை சுற்றி அருகில் எப்பொழுதும் இருப்பார்கள். பேச்சு வன்மையை பெருக்கி கொண்டு திறமையாக பேசுவீர்கள்.
உங்களின் அன்பிற்கு பலரும் கட்டுபடும் அளவிற்கு செல்வாக்கு பெறுவீர்கள். பாக்கிய ஸ்தானத்தில் லாபாதிபதி சுக்கிரன் அமர்ந்து இருப்பது உங்களின் தொழிலும், உத்தி யோகத்திலும் அதிகாரத்தின் உச்ச பலன்களை அடைவீர்கள். கருத்து வேறுபாடுகளால் பிரிந்த உறவுகள் உங்களை தேடி வருவார்கள். விட்டு கொடுத்த எல்லோரையும் அரவனைத்து கொள்வீர்கள். நினைத்ததை சாதிக்க எதையும் செய்ய துணிவீர்கள். புத்துணர்வுகளுடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினருக்கு மேன்மையும் புதிய வாய்ப்புகளும் கிடைத்து பொருளாதாரத்தில் வளம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், வெண்மை, சிவப்பு, ஆரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, தெற்கு, தென்மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், வெள்ளி, ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
11-08-2026 செவ்வாய் அதிகாலை 04.53 முதல் 13-08-2026 வியாழன் காலை 08.07 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை 04.30 - 06.00 ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு மிளகு கலந்த அன்னம் வைத்து உங்களின் வேண்டுதலை சொல்லி வர விரைவில் நீங்கள் வேண்டிய வேண்டுதல் நிறைவேறும்.
















