பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026 - மிதுனம்
மனதில் தெளிவான முடிவுகளை எடுத்து செயல்படுத்தும் மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து மூன்றாமிடத்தை பார்வை இடுவது உங்களின் அன்றாட பணிகளில் கவனமுடனும் சிறப்பாகவும் செயல்படுவீர்கள். எதையும் முன்கூட்டியே தீர்மானம் செய்து பலன் பெறுவீர்கள். காரண காரியம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டீர்கள். பொருளாதாரத்தை பெருக்க கூடிய விடயங்களை ஆய்வு செய்து செயல்படுத்துவீர்கள்.
உங்களின் ராசியில் குரு அமர்ந்து ஜென்ம குருவாக அமைவது உடல் நலனின் அக்கறை எடுத்துக் கொள்வதும் நல்லது. குரு பார்க்க கோடி நன்மை என்பது போல பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறும். சனி / ராகுவை குரு பார்ப்பது உங்களின் செயல்பாடுகளில் ஒரு உத்வேகம் உண்டாகும். தேங்கி கிடந்து முடங்கிய பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை காண்பீர்கள். சோதனை காலங்களில் உங்களை கவனித்து கொண்டவர்களை எப்பொழுதும் மறக்காதீர்கள். யாரையும் நம்பி கொண்டு இருக்காமல். உங்களின் பணியை சிறப்பாக செய்து முடித்து விடுவீர்கள். காலத்தையும், நேரத்தையும் வீண் செய்யாமல் உரிய காலத்தில் எதையும் செய்து முடிப்பீர்கள். சுற்றுலா சென்று வருதல், கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்குபற்றுதல் ஆடம்பர பொருட்கள் வாங்குதல் போன்ற நிகழ்வுகள் அமையும்.
அரசியலிலும் பொது வாழ்விலும் சிறந்த ஆலோசகராக இருப்பீர்கள். உங்களின் அனுபவத்தை பிறருக்கு பயன்படும் படி சொல்வீர்கள். கலைத்துறையினருக்கு எல்லா நிகழ்ச்சிகளும் முக்கியத்துவம் பெறும். எதையும் பிறரிடம் ஆலோசனை பெற வேண்டிய அவசியமில்லாமல் நீங்களே எல்லாவற்றையும் சிறப்பாக செய்வீர்கள். ஞாபக சக்தி அதிகரிக்கும். சிலருக்கு வேறு இடத்திற்கு பணிபுரிய வேண்டிவரும். வெளிநாடு செல்ல முயற்சி எடுப்பவர்களுக்கு விரைவில் விசா கிடைக்க பெற்று பணி புரிவீர்கள். எப்பொழுதும் தன்னை சுற்றி அமைதி இருக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். அதற்கான பக்குவத்தை நீங்கள் அடைவீர்கள். எதை செய்தாலும் அதில் நியாயம் இருக்கும் படி பார்ப்பீர்கள். சுறுசுறுப்பாக இருந்து செயல்பட்டு வளம் பெறுவீர்கள். பண பலம் நன்றாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
14-02-2026 சனிக்கிழமை இரவு 01.31 முதல் 17-02-2026 செவ்வாய் கிழமை காலை 10.04 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரையும், நரசிம்ம பெருமாளையும் விளக்கு ஏற்றி வழிபட்டு. உங்களின் வேண்டுதலை சொல்லி வர மிக விரைவில் உங்களின் எண்ணமும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையும் பெறுவீர்கள்.
















