ஜுலை மாத ராசி பலன்கள் 2026 - கும்பம்
உறுதியும், தன்னம்பிக்கையும் கொண்டு விளங்கும் கும்ப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தன ஸ்தானத்தில் அமர்ந்தும் சனியை குரு பார்வை இடுவது பொருளாதாரத்தில் மேன்மை அடையவும். தொழிலில் நினைத்தபடி வருமானத்தை அதிகரிக்கவும். நல்ல சந்தர்ப்பம் அமையும். ராசியில் ராகு இருப்பது அடிக்கடி ஞாபக மறதி வரும் என்பதால் அன்றாட பணிகளை குறிப்பு எடுத்துக் கொள்வது நல்லது. சோதனை காலங்களை கூட எளிதில் எடுத்து கொள்வீர்கள். மனதில் எதையும் வைத்துக் கொள்ளவே மாட்டீர்கள். புர்வ புண்ணியாதிபதி புதன் ஆட்சி பெற்று சூரியன் இணைவு பெறுவது. கூட்டு தொழில் சிறப்பாக அமையும்.
ஆன்லைன் வர்த்தகம் நன்றாக இருக்கும். பேச்சுக்கு கூட நீங்கள் எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. குலதெய்வ வழிபாடு செய்வது முன்னோர்களுக்கு நினைத்து அன்னதானம் இடுவதும் உங்களின் கஷ்டங்களுக்கு நல்ல பலனை பெற்று தரும். மாணவர்களின் உயர்கல்வி கனவு நிறைவேறும். விரும்பிய பாடம் கிடைக்க பெறுவீர்கள். ஆறாமிடத்தில் தன காரகனும், யோகாதிபதி சுக்கிரனும் இணைவு பெறுவது.
வங்கி மூலம் கடன் பெறுதல், வாங்கி கடனை அடைத்தல் பொது வாழ்வில் பட்ட அவமானங்களிலிருந்து விடுதலை பெறுதல் போன்ற நிகழ்வுகள் நடக்கும். விரையஸ்தானத்தில் குரு பார்வை இடுவது தேவையற்ற செலவுகள் குறையும். அத்தியவாசியமான சில வேலைகளை தள்ளி போடாமல் உடனே செய்து விடுவது நல்லது. பொது நலன் கருதி சில விடயங்களில் மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவீர்கள்.
சாதாரண காரியங்களை பொறுமையுடன் செய்து அவசரமான விடயங்களை உடனே செய்வீர்கள். ஏழாமிட கேது கணவன் - மனைவி உறுவுகளில் இணைக்கமாக இருக்க செய்வார். கூட்டாக செய்யும் தொழிலில் சிறுதடை வந்தாலும் அதனை எளிதில் சரி செய்வீர்கள். செய்யும் தொழிலை தெய்வமாக மதிப்பீர்கள். அதே நேரத்தில் தனக்கு விருப்பமான தொழிலை செய்யவே விரும்புவீர்கள்.
லாப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து இருப்பது பணப்புழக்கம் நன்றாக இருக்கும். வரவேண்டிய இடத்தில் பணம் வந்து சேரும் தொழில் குரு பார்வையால் ஓரளவுக்கு நன்றாக இயங்கும். கலைத்துறையின் முன்னேற்றம் காண்பீர்கள். சக நண்பர்களிடம் கவனமாக இருந்து உங்களை விட்டு கொடுக்காமல் செயல்படுவீர்கள். மனஅமைதி தரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், ஆரஞ்சு, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, ஞாயிறு, திங்கள்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
19-07-2026 ஞாயிறு அதிகாலை 05.10 முதல் 21-07-2026 செவ்வாய் பகல் 12.41 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும். செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியருக்கு ஒரு நெய் தீபம் ஏற்றி சிவப்பு நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.
















