அவிட்ட நட்சத்திற்கான பைரவர் திருத்தம்!

அவிட்ட நட்சத்திற்கான பைரவர் திருத்தம்!

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய பைரவர் சீர்காழி பிரம்மபுரீசுவரர் கோயிலில் அஷ்ட பைரவர் சந்நிதி - பிரதி வெள்ளிக்கிழமை மட்டுமே மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இச்சந்நிதி திறந்திருக்கும். மற்றைய தினங்களில் செல்வோர் சட்டநாதரை வழிபட்டு வரலாம்.

 
அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய மற்றும் ஒரு பைரவர் ஆற்கமூர் - பைரவர் ஆவார்.
 
தலபெருமை
 
சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தெற்கு நுழைவு வாசலின் உள்ளே இடதுபுறத்தில் (மேற்குதிசை) அஷ்டபைரவர் சந்நிதி உள்ளது.
 
அதை பைரவர்கள் சிலைகள் ஒரு விசாலமான அறையின் நான்கு சுவர்களில் இருக்கும் மாடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டள்ளன. இந்த அறை சட்டைநாதரின் பள்ளியறையாகப் பாவிக்கப்படுகிறது. இந்த சந்நிதியின் மேற்கட்டப்பட்ட சிறிய கோபுரத்தில் அஷ்ட பைரவர்கள் எட்டு திசையை நோக்ிகய நிலையில் உள்ளதாகச் சுதைவேலைப்பாட்டு உருவங்களாகச் சித்திரிக்கப்பட்டள்ளன. இந்த அறையில் ஒரு ஊஞ்சல் உண்டு. அதன்மேல் சட்டைநாதரின் படம் வைக்கப்பட்டிருக்கிறது. ஊஞ்சலுக்கு அடியில் முள் ஆணிகள் கொண்ட பாதக்குறடுகளும் காணப்படுகின்றன. இந்தசந்நிதியில் சுக்கிரலிங்கம். சுக்கிரவிநாயகர் ஆகிய இரண்டு இறைவர்களின் கருங்கல் விக்கிரங்கள், அறைக்கு வெளியே மேல்புறம் கிழக்குநோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டள்ளன.
 
பிரதி வெள்ளிக்கிழமை தோறும் இந்த சந்நிதியில் அஷ்டபைரவர் அபிஷேகமும் வழிபாடும் குறிப்பிடத்தக்கவை. அன்றைய தினம் நடைபெறும் பூஜையில் வடை பாசிப்பருப்புப் பாயசம், சுக்கு கலந்த வெல்லச் சர்க்கரை முதலியவை படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. பூஜையின் போது இந்த அஷ்டபைரவர் அறை முழுவதும் சாம்பிராணிப் புகையிட்டு மணம் பரப்பப்டுகிறது. அதன் பின்பு ஆண்கள் சட்டை அணியாமலும் பெண்கள் தலையில் பூ அணியாமலும் அந்த அறையில் சென்று வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.
 
பிரதி வெள்ளிக்கிழமை இரவு சட்டைநாதரின் அம்சமாக விளங்கும் புத்ரலிங்கத்திற்கு இரவு பத்து மணிக்க அபிஷேகம் நடைபெறுகின்றது. அதன்பின் சட்டைநாதர் சந்ந்தியில் புணுகு சார்த்தி முடிந்தவுடன் வழிபாடு நிறைவடைகின்றது. இந்த சட்டைநாதர் பேரில் தருமை ஆதீனம் பத்தாவது பட்டம் பெற்ற ஸ்ரீலஸ்ரீநீசிவஞான தேசிகஸ்வாமிகள் 30 பாடல்கள் கொண்ட “ஆபத்துத்தாராணமாலை” என்ற ஸ்தோத்திர பாமாலை ஒன்றைப்பாடி அருளியிருக்கிறார்.
 
“பெருகாரணியத்தில் யான் சென்ற போதும் பெரும்பொருளால் வருகாதல் கொண்டிர விற்றுயில் போதுமிம் மண்டலத்தில் துருவாதியர்கள் சபையிற்செல் போதுந் துணையெனக்கு வருவாயுனை நம்பினேன் காழியா பதுந்தாரணனே”
 
இது தவிர சீர்காழியின் தேரோடும் வீதியில் மேற்குவீதியும் வடக்கு வீதியும் சந்திக்கும் வீதிமுனையில் ஸ்வர்ண ஆகர்ஷணபைரவர் என்ற பெயரில் ஒரு தனிக்கோவிலும் உண்டு. ஒட்டக்கூத்தர் இங்கு வழிபாடு செய்து அதன்பின்பு தக்கயாகப்பரணி என்று ஒரு நூலைபாடினார் என்பது செவிவழிச் செய்தி.
 
தல அமைவிடம்
 
தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் சீர்காழி உள்ளது.
 
ஆறாகாமூர் - அவிட்டம் நட்சத்திரகாரர்ள் வழிபடவேண்டிய மற்றொரு பைரவர். சேலம் ஆத்தூர் அருகே உள்ள ஆறாகாமூர் ஸ்ரீகாமநாதீஸ்வரர் ஆலயத்தில் விளங்கும் அஸ்டபுஜபைவர்.
 
தல அமைவிடம்
 
சின்ன சேலத்திலிருந்து 4 கி.மீ. சேலம் ஆத்தூரிலிருந்து 20 கி.மீ. 
 
- S.L.S. பழனியப்பன்