ஜுன் மாத ராசி பலன்கள் 2026 - மகரம்
வளமான சூழ்நிலையை உருவாக்க தொடர்ந்து பாடுபடும் மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிநாதன் மூன்றில் அமர்ந்து பாக்கியஸ்தானத்தை பார்வை இடுவதும் குரு பார்வை ராசிக்கு அமைவதும் உங்களின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும். ஒவ்வொரு காரியமும் தொடர்ந்து சிறப்புடன் அமைய வெற்றி பாதையை நோக்கி பயணம் செய்வீர்கள். நேர்மையே உங்களின் வாழ்வில் சிறப்பான திறவு கோலாக அமையும். கெடுபலன்கள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
உங்களின் ராசிக்கு ராகு இரண்டாமிடத்தில் அமர்ந்திருப்பது தன ஸ்தானம் பலம் பெற்று எதிரிபாராத பொருளாதார வளர்ச்சியை பெறுவீர்கள். வயதான தாத்தா பாட்டிகளுக்கு உடல் நல குறைவு வர வாய்ப்புண்டு. அவர்களை நன்றாக கவனித்துக் கொள்வது நல்லது. உங்களின் ராசிநாதன் சனி மூன்றாமிடத்தில் அமர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்வை இடுவது மனவலிமையும், தைரியமும் உண்டாகும். குரு பார்வை சனிக்கு இருப்பது இன்னும் பலமாக அமையும். குறுகிய கால முதலீடுகளில் தொழில் செய்து நல்ல வளம் பெறுவீர்கள். ஏழாமிடத்து அதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது இன்னும் சிறப்பான பலனை தரும். சனி கொடுத்தால் யார் தடுப்பார்?. சனி இனி உங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றுத்தை தருவார். சுய தொழில் செய்பவருக்கு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவருக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். காலத்தையும், நேரத்தையும் நிர்ணம் செய்து அதற்கு தகுந்தபடி செயல்படுவீர்கள். உங்களின் முயற்சிக்கு நல்லபலன் கிடைக்கும். உழைப்பிற்கு எப்பொழுதும் முக்கியத்துவம் தருவீர்கள்.
சுகஸ்தானாதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் செய்யும் தொழில் சிறப்பாக அமையும். உங்கள் யோகாதிபதி ஆறாமிடத்தில் இருந்தாலும் பண பரஸ்தானம் என்பதால் தொழில் நன்றாக இருக்கும். சமயத்தில் எதையும் சாதிக்கும் மனபலம் உண்டாகும். உடல் நலனில் மேன்மை உண்டாகும். தொழிலாளர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டு செயல்படுவீர்கள். அவர்களின் குறைகளை களைய வேண்டிய உதவிகளை செய்வீர்கள். நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவதுடன் கிடைக்கும். வருவாயில் சலுகைப் பெற்று தருவதில் அக்கறை கொண்டு செயல்படுவீர்கள். ஒவ்வொருவரிடம் நீங்கள் முக மலர்ச்சியுடன் பழகும் போது உங்களின் பேச்சின் தன்மை சிறப்பாக அமையும். கிடைத்ததை வைத்த வாழ பழகி கொள்வீர்கள். பஞ்சம ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்திருப்பது சனி பார்வை சூரியனுக்கு அமைவது தந்தை -மகன் உறவு பாதிக்கும். புத்திர தோசம் இருப்பவர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. அதற்கான காலமாக அமையும்.
சத்ரு ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று விரைய ஸ்தானத்தை பார்வை இடுவது செய்யும் தொழிலில் நஷ்டம் பெறாமல் அமையும். மேலும் உங்களின் யோகாதிபதி சுக்கிரனுடன் இணைவு பெறுவதால் எல்லாம் சுபமாக அமையும். உறவுகளை புதுப்பித்து கொள்வீர்கள். கேட்டது கிடைக்கும். கொடுத்தது விரைவில் வரும் நினைத்ததை அடைவீர்கள். குரு ஏழாமிடத்தில் உச்சம் பெற்று ராசியை பார்வை இடுவது உங்களின் பலம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் நல்ல பலன் கிடைக்கும். தங்க நகை வாங்கும் வாய்ப்பு அமையும். வங்கி கடன் வசதி அமையும். திருமணம் ஆகாதவருக்கு விரைவில் திருமணம் நடக்கும். காரிய அனுகூலமாக அமையும். செய்ததை சொல்லி காட்டமாட்டீர்கள். பிறருக்கு தெரியாமல் உதவி செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள். எந்த உதவியையும். மற்றவர்களிடமிருநது எதிர்பார்த்து இருக்காமல் தானே செயல்பட நல்லதையே நினைத்து நன்மை அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், மஞ்சள், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
19-06-2026 வெள்ளி மாலை 03.57 முதல் 21-06-2026 ஞாயிறு இரவு 09.16 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
அமாவாசை அன்று பித்ருகளுக்கு செய்ய வேண்டிய கர்ம காரியம் தவறாமல் செய்வது நல்லது. ஞாயிறு மாலை 04.30 - 06-00 ராகு காலத்தில் பைரவருக்கு ஐந்து நல்லெண்ணெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள உங்களின் சகல காரியமும் சிறப்பாக அமையும்.
















