மே மாத ராசி பலன்கள் 2026 - கும்பம்

மே மாத ராசி பலன்கள் 2026 - கும்பம்

சோதனைகளை சாதனையாக்கி கொண்டு தொடர்ந்து செயல்படும் கும்ப ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சனி தனஸ்தானத்தில் அமர்ந்து லாப ஸ்தானத்தை பார்வை இடுவதும் லாப ஸ்தானத்தை குரு பார்வை இடுவதும் செய்யும் தொழிலில் கூடுதல் முன்னேற்றம் காண்பீர்கள். வரவுக்கு மீறிய செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை விடாமுயற்சி செய்து வெற்றி பெறுவீர்கள். பொறுப்புடன் காரியத்தை செயல்படுத்துவீர்கள்.
 
உங்களின் தன ஸ்தானாதிபதி குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்வை இடுவது காரிய அனுகூலமாக அமையும். ஜென்ம ராகுவின் தாக்கம் குறையும். உஷ்ண சம்பந்தமான உடல் உபாதை உண்டாக்கும். எதையும் பொறுமையும் நிதானமுடனும் செய்வது நல்லது. அரசியலில் தந்திரமாக செயல்பட்டு உங்களை வீழ்த்த நினைத்தவரை அடையாளம் காண்பீர்கள். பொது விடயங்களில் எந்த சமாதானமும் செய்து கொள்ள மாட்டீர்கள். சுமை போல தெரிந்தாலும் அதனை வலிமையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். சிலருக்கு திருமண முயற்சி நன்மையை தரும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி மேன்மை அடைவீர்கள்.
 
கலைத்துறையினருக்கு வெளியூர் சென்று தங்கி வரும் சந்தர்ப்பம் அமையும். அரசியல் வாதிகளின் சந்திப்பு உங்களின் எதிர்கால நன்மைக்கு உதவியாக அமையும். உங்களின் குடும்ப ஒற்றுமைக்காக சில நேரம் பல விடயங்களை விட்டு கொடுத்து போக வேண்டி வரும். செய்யும் தொழிலை தெய்வமாக நினைக்கும் நீங்கள் ராசிநாதனுடன் தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் இணைவு பெறுவது எந்த தொழிலாக இருந்தாலும் சற்று கவனமுடன் செயல்படுவீர்கள். உங்களின் நீண்ட நாள் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
 
மறைவு ஸ்தானாதிபதி குரு மறைவு பெறுவது கெட்டவன் கெட்டில் கிட்டிடும் ராஜ யோகம் என்பது போல உங்களுக்கு செயலிலும், பொருளாதாரத்திலும் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். வாகன வசதிகள் சொந்த வீடு கட்டுதல், வசதியான கார்களில் பவனி வருவதும் நடக்கும். விளையாட்டு துறையில் நல்ல போட்டியை சந்தித்து அதன் மூலம் நன்மை பெறுவீர்கள். குடும்பத்தில் பிரிவினை நீங்கி ஒற்றுமை உணர்வுடன் இருப்பீர்கள். கருத்து வேறுபாடுகளுடன் இருந்தவர்கள் மீண்டும் இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவருக்கு இடமாற்றம் உண்டாகும். எந்தவித சோதனைகளாக இருந்தாலும் அதனை சாதனையாக மாற்றி விடுவீர்கள். ஆன்மீக தொண்டுகளில் ஈடுபாடு கொள்வீர்கள். நண்பரின் வீட்டு நிகழ்ச்சியில் தொடர்ந்து பல உதவிகளை செய்து வருவீர்கள். ஏழாமிட கேது கூட்டுத்தொழிலில் சில உதவிகளை செய்வார். படைய நண்பரின் தொடர்பு உதவியாக அமையும். ஆன்லைன் வர்த்தகம் முதலீடுகளை கவனமுடன் செய்வது நல்லது. சூரியனின் உச்சபலன் உங்களின் முயற்சிகளுக்கு ஏற்ப நல்ல பலன் அடைய செய்யும். 
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
நீலம், ஆரஞ்சு, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
மேற்கு, வடகிழக்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வெள்ளி, சனி, ஞாயிறு.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
25-05-2026 திங்கள் பகல் 01.25 முதல் 27-05-2025 புதன் இரவு 09.23 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமை ராகு காலத்தில் பைரவர் வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபமிட்டு சிவப்பு திரியில் போட்டு தயிர் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள எல்லாம் நன்மையாக அமையும்.