நவம்பர் மாத ராசி பலன்கள் - 2026 - சிம்மம்
காரியத்தில் கண்ணாக இருந்து கச்சிதமாக செய்து முடிக்கும் சிம்ம ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சூரியன் நீசம் பெற்று நீச பங்க ராஜயோக பலனை பெறுவதால் அரசியலிலும், உத்தியோகத்திலும் மேன்மை அடைவீர்கள். ராசியில் அதிசார குருவுடன் கேது இணைவு பெறுவது திடீரென்று சிலருக்கு அதிர்ஷ்ட பலன்கள் வந்து சேரும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். சிலருக்கு சிலரால் நன்மை கிட்டும். சொன்னபடி நடந்து கொள்வீர்கள்.
உங்களின் ராசிக்கு ராசியில் குருவுடன் கேது ஒரு நட்சத்திர பாதத்தில் இணைவு பெறுவது பண பலத்தை அதிகபடுத்தும். வரவேண்டிய தொகைகள் விரைவில் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவருக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆன்மீக பயணம் மேற்கொண்டு சுற்று பயணம் செல்வீர்கள். மூன்றாமிடத்தில் சூரியன் அமர்ந்து நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருந்து மேன்மை அடைய செய்வார்.
எதை சாதிக்க நினைத்தீர்களோ அந்த சாதனையாக வெல்லும் வாய்ப்பு அமையும். மூன்றாமிட அதிபதி சுக்கிரன் ஆட்சி பெற்று அமைவது கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகளும் கலைத்துறையின் மேலும் புதிய தொழில் நுட்ப வசதிகளை தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் உண்டாகும். தனஸ்தானாதிபதி புதன் மூன்றில் அமர்வது உங்களின் ஆற்றலை அதிகரிக்க செய்யும். எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவீர்கள்.
மனிதாபிமான உதவிகளை பிறருக்கு செய்து நற்பெயர் பெறுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு மூலம் உங்களின் வளர்ச்சி அதிகரிக்கும். அமைதியான வழியில் செல்லவே விரும்புவீர்கள். பிறரின் நலன் காப்பதில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஏழாமிட ராகு குரு பார்வை பெறுவதால் கல்யாண தடை நீங்கி திருமண வாய்ப்புகள் கிடைக்கும். அன்னிய சம்மந்தமாக அமையும்.
மறுமணம் செய்ய விரும்புவருக்கு நல்லவரன் அமையும். அட்டம சனியை குரு பார்வை இட்டதால் இதுவரை பாதிப்பு இன்றி இருந்தது குரு பார்வை இல்லாத சனியின் பாதிப்பு இருக்கும்.என்பதால் யாருக்கும் பிணயம் இடுவதை தவிர்க்கவும். சிறிய அளவு சொத்து வாங்கும் வாய்ப்பு அமையும். பணத்தட்டுபாடு நீங்கும். தாராளமாக பணபுழக்கம் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, திங்கள், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
19-11-2026 வியாழன் இரவு 09.45 முதல் 22-11-2026 ஞாயிறு அதிகாலை 03.57 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் (09.00 - 10.30) பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு எள் கலந்த அன்னம் நைவேத்தியம் வைத்து மனம் உருக வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.













