அக்டோபர் மாத ராசி பலன்கள் - 2026 - மகரம்

அக்டோபர் மாத ராசி பலன்கள் - 2026 - மகரம்

குறித்த நேரத்தில் எதையும் செய்து காட்டும் மகர ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் மூன்றாமிடத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவதும் குரு பார்வை ராசிநாதனுக்கு கிடைக்கப் பெறுவதும் நல்ல பலனை பெற்று தருவார்கள். சுய முயற்சிக்கு விரைவில் பலன் கிடைக்க பெறுவீர்கள். ராசிக்கு செவ்வாய் குருவின் பார்வையால் மேலும் பலம் பெற்று வளம் பெறுவீர்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சியை அடைவீர்கள்.
 
தனஸ்தானத்தில் ராகு அமர்வது சில காரிய தடை உண்டானாலும் உங்களின் பேச்சு திறமையால் காரிய அனுகூலம் பெறுவீர்கள். ராசிநாதன் சனியின் வக்கிரகதி உங்களின் வளர்ச்சி வழிவகுக்கும். தனிப்பட்ட காரியங்களில் கவனம் செலுத்தி மேன்மையை அடைவீர்கள். சந்திரன் பஞ்சம ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் காரிய அனுகூலம் பெறுவீர்கள். 
 
சிலருக்கு காதலை வெளிபடுத்தி, உறுதி செய்து கொள்வீர்கள். மனதில் பட்டதை தைரியமாக வெளிபடுத்துவீர்கள். களத்திர ஸ்தானத்தில் செவ்வாயும், குருவும் இணைவு ஊர் மெச்சும் வகையில் நடக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வருமானத்தையும் சிறு சேமிப்பையும் செய்து வளம் பெறுவீர்கள்.
 
குரு பார்க்க கோடி நன்மை என்பது போல குரு லாபஸ்தானத்தை பார்வை இடுவது செய்யும் தொழிலிலும், உத்தியோகத்தில் மேன்மை பெறுவீர்கள். எட்டாமிட கேது காரிய தடை தந்தாலும் சுப கிரகத்தின் பார்வையால் எதிர்பாராத அதிர்ஷ்ட பலன்களை பெற்று வளம் பெறுவீர்கள். 
 
பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் அமர்வது உங்களின் தந்தைக்கு உடல்நல குறைவுகள் ஏற்பட வாய்ப்பு அமையும். பித்ரு தோசம் இருப்பவர் தோசத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பு அமையும். தொழில் ஸ்தானத்தில் புதனும் சுக்கிரனும் இணைவு பெறுவது வேலை வாய்ப்பும் புதிய தொழில் அமைக்க உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
நீலம், ஆரஞ்சு, மஞ்சள்.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
சனி, செவ்வாய், வியாழன்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
06-10-2026 செவ்வாய் இரவு 11.56 முதல் 09-10-2026 வெள்ளி அதிகாலை 04.21 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமைகளில் நவகிரக வழிபாடுகள் செய்து மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி ஒன்பது முறை வலம் வந்து புளி அன்னம் வைத்து தானம் செய்து வர தடைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.