அக்டோபர் மாத ராசி பலன்கள் - 2026 - துலாம்
எதையும் திறமையுடனும், துணிச்சலுடனும் செய்யும் துலாம் ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியிலேயே அமர்ந்து ஏழாமிடத்தை பார்வை இடுவது செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் ஸ்தானத்தில் பலம் உங்களின் செய்யும் தொழில் சிறப்பாக அமையும். லாப ஸ்தானத்தில் கேது அமர்வது தடைபட்ட காரியம் கைகூடும். சுறுசுறுப்பாக இயங்குவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
உங்களின் ராசியில் பாக்கியாதிபதி புதனுடன் ராசிநாதன் சுக்கிரன் இணைவு பெறுவது மனவலிமையும், நேர்மை மற்றும் உண்மையுடன் செயல்படுவீர்கள். எதிலும் சாதூர்யமாக செயல்படுவீர்கள். எப்பொழுதும் யாருக்காவது எதையாவது நன்மை செய்து கொண்டே இருப்பீர்கள். பொது நலன் கருதி சில விடயங்களில் நீங்களே தலையிட்டு நல்ல பலனை அனைவரும் பெறும் படி செய்வீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு அமர்வது எடுத்த காரியம் சில தடைபட்டாலும் உங்களின் விடாமுயற்சியின் காரணமாக எளிதில் முடிப்பீர்கள். ஆறாமிடத்து சனி வக்ரம் பெறுவதால் உடல்நலனின் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சர்க்கரை நோய்கள் இருப்பவர்கள். காலை பாத்திரமாக பார்த்து கொள்ள வேண்டியது அவசியம். மறைமுகமான எதிரிகள் பலதரப்பட்ட சிரமத்தை தரவேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதனை தவிர்த்து கொள்வது நல்லது.
அட்டமத்தில் சந்திரன் அமர்வதால் யாருக்கு பிணையம் இடுவது ஏற்று கொண்டு பணத்தை வாங்கி தருவது போன்ற காரியத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது செய்யும் தொழில் விருத்தியையும் பொருளாதார நன்மையும் தரும். விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கு வளர்ச்சி உண்டாகும். வெளியூர் சென்று வெற்றி வாகை சூடி வருவீர்கள். தொழில் ஸ்தானத்தில் குரு உச்சம் பெறுவதால் சுயதொழில் செய்பவரும். உத்தியோகத்தில் இருப்பவரும் வளம் பெறுவீர்கள். மருத்துவ துறையினர் முன்னேற்றம் காண்பீர்கள். லாபஸ்தானத்தில் கேது உங்களின் அனைத்து வசதிகளை பெற்று தருவார்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, பச்சை, பலநிறம்.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, ஞாயிறு, புதன்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
27-10-2026 செவ்வாய் இரவு 11.58 முதல் 29-10-2026 வியாழன் இரவு 02.39 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளிக்கிழமைகளின் அம்மன் வழிபாடும் செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரை யும் வழிபட்டு நெய் தீபமேற்றி உங்களின் வேண்டுதலை சொல்லி வர சகல காரியமும் சிறப்பாக அமையும்.
















