திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்
ஸ்ரீ சுவேதாரண்யேசுவரர் என்ற நாமத்தில் சிவபெருமானும், பிரம்ம வித்யாம்பாள் என்ற நாமத்தில் தாயாரும் எழுந்தருளியிருக்கும் இத்திருக்கோயிலில் நவக்கிரகங்களில் ஒருவரான புதன் கோயில் கொண்டிருக்கிறார். அப்பர், சம்பந்தர் மற்றும் சுந்தரரால் பாடப்பெற்ற இத்திருக்கோயில் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் பாதையில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காவிரிக் கரையோரமாக அமைந்திருக்கும் ஆறு பெரும் சிவஸ்தலங்களில் திருவெண்காடும் ஒன்று ஆகும். மற்றவை வருமாறு, திருவையாறு, சாயாவனம், மயிலாடுதுறை, திருவிடை மருதூர் மற்றும் திருவஞ்சியம் ஆகியவை ஆகும். இக்கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை தேவேந்திரன், ஐராவதம் என்ற இந்திரனின் வாகனம், சூரிய-சந்திர-புதன் ஆகிய நவக்கிரகங்களும் வந்து வணங்கியதாக கூறப்படுகிறது. ஆதி சிதம்பரம் என்ற நாமத்திலும் அறியப்படும் இந்த கோயிலில் ஹஸ்தி நடனம் ஆடும் நடராஜரையும் காணலாம். ஞாயிற்றுக் கிழமை இரவுகளில் அகோரமூர்த்தி வடிவத்தில் உள்ள சிவபெருமானை பக்தர்கள் வணங்குகிறார்கள். சூரிய தீர்த்தம் மற்றும் சோம தீர்த்தம் ஆகிய புண்ணிய தீர்த்தங்களும் இக்கோயிலில் பிரபலமாகும். ஸ்தல விருட்ஷமாக வில்வம் மற்றும் கொன்றை ஆகியவை விளங்குகின்றன. இக்கோயிலை ஒட்டி புதையல் எடுக்கப்பட்ட வெண்கல சிலைகள் சென்னை அரசு பொருட்காட்சியகத்தில் உள்ளன. இவை அர்த்த நாரீசுவரர் மற்றும் சண்டேசுவரர் ஆகியோரின் சிலைகளாகும். மற்றும் சில புதையல் சிலைகள் தஞ்சையில் உள்ள கலைப் பொருள் காட்சியகத்தில் உள்ளன. புத பகவானுக்கு உரிய நிறம், உலோகம், தானியம் போன்றவை வருமாறு:- நிறம்: பச்சை, தானியம்: பச்சை பயிறு, வாகனம்: குதிரை, மலர்: வெண் காந்தல், உலோகம்: பித்தளை, கிழமை: புதன், இரத்தினம்: மரகதம், பலன்கள்: சகல சாஸ்திரம் மற்றும் ஞானம்