ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் - 2026 - கன்னி
ஆற்றலையும், நுண்ணறிவையும் கொண்ட எதையும் சாதிக்கும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் லாபஸ்தானத்தில் அமர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்வை இடுவது காரிய அனுகூலமும் செயல் திறனையும் பெற்று வளம் பெறுவீர்கள். எதையும் உடனே முடிவு எடுப்பீர்கள். எதையும் தாமதம் செய்யாமல் உடனுக்குடன் செயல்படுவீர்கள். ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்களுக்கு கூடுதல் பலம் கிடைக்கும். எதையும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். மன அமைதியும் வெளிபடை தன்மை உங்களை மேலும் உயர்த்த செய்யும். பணியில் இருப்பவருக்கு பணியின் உயர்நிலை பெறுவீர்கள்.
ஆறாமிடத்தில் ராகுவுடன் சந்திரன் இணைவு பெறுவது கடன் படுவதும் அதனை நிவர்த்தி செய்து விடுதலை பெறுவதும் நிச்சயம் நடக்கும். உணர்வுகளை புரிந்து கொண்டு மற்றவர்களிடம் பழகி வருவீர்கள். அறிவாற்றலை மற்றவருக்கு பயன்படும்படி செய்வீர்கள். பல காலம் கஷ்டத்தை மட்டுமே பார்த்து வந்த நீங்கள் இனி புது பொலிவுடன் செயல்பட்டு வளம் பெறுவீர்கள்.
எதிர்ப்புகள் இருந்தாலும் அதை எப்படி எதிர்கொண்டு செயல்பட வேண்டுமென்று யுக்தியை கையாளுவீர்கள். ஏழாமிட சனியை குரு பார்வை பெற்று அமைவது கணவன் மனைவி உறவில் சகிப்பு தன்மையால் விட்டுகொடுத்து செல்வீர்கள். உங்களின் கருத்துக்கு எதிர் கருத்து வரும் போது விவாதத்தை விட்டுவிட்டு, அதனை விளக்கி சொல்ல நினைப்பீர்கள். உடல் உழைப்பையும் அன்பையும் பெறுவீர்கள். எந்த உதவி செய்வதாக இருந்தாலும் யோசிக்க மாட்டீர்கள். தனக்கு தானே பாதுகாப்பு வைத்து கொள்வீர்கள்.
பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்து முயற்சிகளுக்கு வெற்றியை பெற்று தருவார்கள். சோதனை காலங்களில் உடன் இருந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். கொடுத்த இடத்தில் இருந்து பணம் கிடைக்க நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். எந்த தொழிலாக இருந்தாலும் அதில் இருக்கும் நுட்பங்களை நன்கு ஆராய்ந்து அதில் எப்படி முன்னேற வழி கிடைக்கும் என்று யோசித்து எந்த பிரச்சனையும் இன்றி சாதிப்பீர்கள். லாப ஸ்தானத்தில் ராசிநாதன் அமர்ந்து தொழிலில் நல்ல ஆதாயம் கிடைக்க வழிகாட்டுவார்.
விரையாதிபதி சூரியன் லாபத்தில் அமர்வது கிடைக்கும். பலனை தடை செய்யாமல் குருவுடன் இணைந்து நன்மையை செய்வார். குரு பார்வை இடும் மூன்றாமிடம் உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலனை பெற்று தரும். ஐந்தாமிடம் குரு பார்வை பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சனையில் நல்ல பலனை பெற்று தரும். கருத்து ஒற்றுமையும் மனவலிமையும் உங்களை வளரச் செய்யும் விரையஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வது பேச்சிலும், செயலிலும் மென்மையாக நடந்து கொள்வீர்கள். எடுத்த காரியம் ஜெயிக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை தடையின்றி செய்து, நன்மை பெறுவீர்கள். செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், சனி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
04-08-2026 செவ்வாய் இரவு 08.30 முதல் 06-08-2026 வியாழன் இரவு 11.58 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு அரளி பூ வைத்து மிளகு கலந்த அன்னம் நைவேத்தியம் செய்து உங்களின் வேண்டுதலை செய்ய வேண்டிய வரம் கிடைக்க பெறுவீர்கள். பொருளாதாரத்தின் நன்மை பெறுவீர்கள்.
















